டில்லி

ர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்காக விசாரணை நடத்தத் தேவை உள்ளதா என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரீபக் கன்சால் கேள்வி எழுப்பி உள்ளார்.

தற்போது கொரோனா தாக்குதல் இந்தியாவில் அதிக அளவில் உள்ளதால்  நாடெங்கும் நீதித்துறை நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன.  மிகவும் முக்கியத்துவம் கொண்ட வழக்குகள் மட்டும் காணொளிக் காட்சி மூலம் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   அதைப் போல் அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்ட பல வழக்குகள் அவசர வழக்காக ஏற்றுக கொள்ளப்படவில்லை.

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி தனது தொலைக்காட்சி நிகழ்வில் சோனியா காந்தியைப் பற்றி தவறான கருத்துக்கள் தெரிவித்ததாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான்,, தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.   இந்த புகார்களின் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்சநீதிமன்றம் 3 வாரங்கள் தடை அறிவித்துள்ளது.

நேற்று இரவு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகளை எதிர்த்து அர்னாப்  கோஸ்வாமி மனு அளித்தார்.  அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு விசாரணையைத் தொடங்கியது.   இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஷா ஆகியோரின் அமர்வு விசாரணையைத் தொடங்கி உள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரீபக் கன்சால், “வியாழக்கிழமை இரவு பதியப்பட்ட அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு விசாரணைக்கு வந்துள்ளது.  இந்த வழக்கு அவசர வழக்கு என எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது?   அவசர வழக்காக விசாரணை செய்யும் அளவுக்கு என்ன தேவை உள்ளது?

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நான் அளித்த வழக்கு மனு குறித்து எவ்வித பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை.  நான்  இது குறித்து தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் பதில் அளிக்கவில்லை.   சிஏஏ போன்ற பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கு எவ்வாறு அவசர வழக்கானது? “ என கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.