மயிலாப்பூர் சாய் பாபாவின் சிறப்பு என்ன?

Must read

சீரடி சாய்பாபா மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி அவர்கள் சீரடி சாயிபாபாவை பற்றி பல விஷயங்களை  வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இவர் பாபா பற்றியும், அவரது உபதேசங்களையும் கட்டுரையாக  எழுதி இருக்கிறார்.  இவரது  முயற்சியால் உருவான ஆலயம்தான் 1941 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் சாய் பாபாவின் திருக்கோவில் கட்டப்பட்டது.

இந்த திருக்கோவிலின் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ளது.  மற்ற பாபா கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு.  அது என்னவென்றால்  நீங்களே சன்னதியில் பாபாவின் வெண்பளிங்குச் சிலையை தொட்டு வணங்கலாம்.  மாலை,  சால்வைகள் அணிவிக்கலாம். சுவாமியின் பாதங்களை தொட்டும் கீழே விழுந்து வணங்கலாம்.  கோவிலில்  நுழைந்தும் அவர் சன்னதி முன் நிற்கும் போது ஒரு தெய்வீக அலையை,  நம்மால் உணர முடியும்.

பாபாவின் சன்னதி, துவாரகாமாயி அனா, குருஸ்தான் மற்றும் பின்புறத்தில் இருக்கும் நரசிம்ம  ஸ்வாமிஜியின் சமாதியை உள்ளடக்கிய ஹால் போன்ற அமைப்பு கண்ணிற்கு விருந்தாக   உள்ளது.  நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியின் மேல் இருக்கும் வெண் பளிங்குச்சிலை அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன பாபாவின் உற்சவ மூர்த்தி ஆகியவை மனதில்  பக்தி பரவச மூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

சாய் பாபாவின் அருளைப்பெற வியாழன் தேறும் கோவிலுக்கு சென்று பூஜைசெய்துவர எல்லா வளமும்,நலமும் நமது வாழ்வில் வந்து சேரும்.

More articles

Latest article