தங்களது கட்சியில் சேரச்சொல்லி நூறு கோடி தருவதாக ஒரு கட்சி சொல்லியும் தான் மறுத்துவிட்டதாக திரைப்பட இயக்குநர், நடிகர் டி.ராஜந்தர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் திருட்டு விசிடி குறித்து பேசிய டி.ராஜேந்தர், “பிரதமர் மோடி அவர்களே.. கள்ள நோட்டு அடித்தால் பிடிக்கிறீர்களே… திருட்டு வி.சி.டியை பிடிப்பதில் ஏன் அக்கறை செலுத்தவில்லை? எங்களது அறிவு, உழைப்பு, பணம் எல்லாவற்றையும் முதலீடு செய்து திரைப்படத்தை உருவாக்குகிறோம். அதுதான் எங்கள் வாழ்க்கை. கஷ்டப்பட்டு எடுக்கம் திரைப்படத்தை மிக எளிதாக சிலர் திருட்டு வி.சி.டி. ஆக்கி விற்கிறார்களே.. தடுக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “தங்களது கட்சியில் சேரச்சொல்லி எனக்கு நூறு கோடி தருவதாக சிலர் கூறினார்கள். ஆனால் எனது கொள்கைக்கு முரணாக அங்கு சேர விரும்பாததால் நான் மறுத்துவிட்டேன்” என்று அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார்.
கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள், “இவருக்கு நூறு கோடி தரத் தயாராக இருந்த கட்சி எது.. இவரது கொள்கைகள்தான் என்ன” என்று வியப்புடன் பேசிக்கொண்டனர்.