சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த புயல் நகர்வு எப்படி இருக்கும்? எந்தப் பகுதியில் அதிக மழை இருக்கும் என்பது குறிதுத தமிழ்நாடு வெதர்மேன், தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார்.
தற்போது உருவாகும் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை கனமழை போட்டு தாக்கி வருகிறது. இதனிடையே, வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3ம் தேதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பில், தற்போது உருவாக உள்ள புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று புயலுக்கு முன் நாளை காலை வரை அமைதியாக இருங்கள். விரைவில் (சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில்) KTCC அலுவலக நேர மழை துவங்க உள்ளது.
===============
இந்த பாதையை இன்று ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும். எல்லா மாடல்களும் கிட்டத்தட்ட ஒரு ஒப்பந்தத்தில் உள்ளன. இன்று KTC வழக்கம் போல அலுவலக நேரம் குறுகிய மழை பிறகு பெரும்பாலும் மழை குறைவாக இருக்கும் இன்று புயல் விரிகுடாவில் உருவாகிறது. மேகங்கள் வளரும் நிலையில் பரவி கிடக்கும் மன அழுத்தம் / புயல் ஆனதும் மேகங்களை இறுக்கமாக மூடிக்கொள்ள ஆரம்பிக்கும் என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெளியிட்டுள்ள தகவலில், ” இது ஒரு மேடன் ஜுலைன் ஆசிலேஷன் வேவ், நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளுக்கு மழை பெய்ய சாதமாக உள்ளது. இந்த அலை பேஸ் 3 மற்றும் 4 வரும்போது சாதகமாக இருக்கும். புயல் ஏற்படவும் சாதகமாக இருக்கிறது. முதல் வாரத்திற்கு பிறகு பேஸ் 4-க்கும் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
இப்போது இருக்கும் நிலையை நாம் 2015ம் ஆண்டோடு ஒப்பிட முடியாது. நவம்பர் மாதத்தில் மட்டும் 25 நாட்கள் மழை பெய்துள்ளது. அதில் நேற்றுதான் சென்னையில் அதிக கனமழை பெய்தது. நிறைய இடங்களில் 150 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்துள்ளது. மீண்டும் வெள்ளம் ஏற்படுமா என்பதை நாம் பொருத்திருந்து பார்துதான் முடிவு செய்ய வேண்டும்.
சென்னை, வட தமிழகம், டெல்டா பகுதிகள், திருபத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற இடங்களில் கூட நல்ல மழை பெய்யும்.
இந்த புயல் அருகில் வந்து, வளைந்து தென் ஆந்திராவிற்கு செல்வதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களுக்குதான் அதிக மழை பெய்யும். 3ம் தேதிதான் புயல் அருகில் வரப்போகிறது. அதற்குள் ஏற்படும் மாற்றங்களை நாம் பொருத்திருந்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.