சென்னை: கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு பின் கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன?  என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றும் விமர்சித்து உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுகுட்டி என்ற திமுக நபர் உள்பட 10க்கம் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம்,   இந்த வழக்குக்கு தொடர்புடையதாக கூறப்படும் கல்வராயன் மலைவாழ் மக்களின் நிலை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 200-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 67 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிலர் கவலைக்கிடமான நிலையில் இருந்து உயிர் பிழைத்திருந்தனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த பலர் இந்த சம்பவத்தின் மரணமடைந்தனர். தற்போது வரை சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், கள்ளச்சாராயம் குடித்து  மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. நீதிமன்றமும், எப்படி ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.  விசாரணையில் , கள்ளச்சாராயம் கல்வராயன் மலைப்பகுதிகளில் தான் காய்ச்சப்படுவதாகவும், அங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லாததால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும்  கூறப்படுகிறருது.

இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைகிறதா? மக்களின் வாக்குகளை பெற்றபின் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள், அரசின் திட்டங்கள், சலுகைகள் சென்றடைகிறதா? என அடுக்கடுக்கான  கேள்விகளை எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்திற்கு, பிறகு, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை நிலை குிறத்து விசாரித்துள்ள நீதிபதிகள், இத்தனை ஆண்டுகள் ஆட்சியர், ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஜூன் 24-ந் தேதி கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.