இது தொடர்பாக அவர் தொடர்ந்த மனுவில், அதிக வட்டி தருவதாக கூறி ஹிஜாவு நிதி நிறுவனம், ஆருத்ரா கோல்டு, எல்என்எஸ் நிதி நிறுவனம், சாய் எண்டர்பிரைஸ், ஆம்ரோ அசோஷியேஷன், உள்ளிட்ட 7 நிதி நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து, அதன் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்களை ஏமாற்றி ஹிஜாவு நிறுவனம் 1500 கோடி ரூபாய் மோசடியும், எல் என் எஸ் நிறுவனம் 6000 கோடியும், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 8000 கோடியும், சாய் எண்டர்பிரைசஸ் 350 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மோசடி செய்த பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால் இதில் ஹவாலா, கருப்பு பணம் விவகாரமும் உள்ளதால் நிதி நிறுவன மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளை விசாரித்துவரும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2021 ஆண்டு முதல் 2024 ம் வரை மொத்தமாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141.29 கோடி ரூபாய் மீட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாக 90 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 59 பேர் தலைமறைவாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும் மோசடியில் ஈடுப்பட்ட 1524 வங்கி கணக்கில் இருந்த 180.70 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும், மோசடி செய்த நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 1118.46 கோடி ரூபாய் மதிப்பிலான3,264 அசையும் அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 659 வழக்குகளில் 676.6 கோடி ரூபாய் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவன உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில் தெரிவித்து வருவதால், சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், மதுரை பைபாஸ் ரோடு எஸ்.எஸ்.காலனியில் நியோ மேக்ஸ் புராப்பர்டீஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்கள் 5000 பேரிடம் ரூ.3 ஆயிரம் கோடி டெபாசிட் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அதன் நிர்வாகிகள் கமலக்கண்ணன் உள்பட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பழனிசாமி, சார்லஸ், கமலக்கண்ணன், தியாகராஜன் உட்பட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். விசாரணையின்போது, டெபாசிட்தாரர்களுக்கு தொகையை திரும்ப வழங்கத் தயார். இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாம் என்றார். அப்போது ஆஜரான பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர், தொகையை திரும்ப வழங்க நிறுவனத்திடம் சொத்துக்கள் எதுவும் இல்லை. முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் முறைப்படி தங்களை எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு எப்போது, எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாத பத்திரத்தை மனுதாரர் தரப்பில் ஜூலை 28ல் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதற்கிடையில்,
இவ்வாறு உத்தரவிட்டார்.