போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் வலிமை.

பிப். 24 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் ஆக்சன் காட்சிகள் நிறைந்த டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது.

இன்று வசனங்களுடன் கூடிய மாசான காட்சிகளுடன் மற்றொரு டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.