டில்லி:

காத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தன் என்று கூறிய பாஜக பிரக்யா வின் கருத்து  குறித்து  தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு  பாஜக உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  இதுதொடர்பாக கருத்து கூறிய சர்ச்சைக்குரியா சாமியிரினியும், போபால் தொகுதி பாஜக வேட்பாளருமான பிரக்யா தாகூர்  கோட்சே எப்போதுமே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், பாஜக தலைமை, அவரை மன்னிப்பு கோர உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தனது கருத்துக்கு பிக்யா தாக்கூர் மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், பிரபலநாளிதள் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  “நாட்டின் தேசத்தந்தையை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களை பிரதமர் மன்னிக்க கூடாது. அந்த கருத்து கூறியவர் மீது அவர் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமராகவும், அரசியல் தலைவராகவும் கோட்சே குறித்த நிலைப்பாட்டை நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதனை நீங்கள் தெளிவுபடுத்தப்படுத்த வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளார்.