ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், ரோகித் ஷர்மா சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு தகவல்கள் உலவ விடப்படுகின்றன.
கடந்த 2019 உலகக்கோப்பை போட்டியின்போது, கோலிக்கும் ரோகித்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், இப்போதுவரை தொடர்வதால்தான் இந்தப் புறக்கணிப்பு என்று ஒரு தகவல் கூறுகிறது.
அதேசமயம், இந்திய ஒருநாள் & டி-20 அணிக்கு ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்று உலாவரும் லாபியை உடைப்பதற்காகவே, இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது துணைக் கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, அவரின் இடத்தில் கேஎல் ராகுலை முன்னிறுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் உலவுகின்றன.
இந்திய கிரிக்கெட் என்பது அரசியலும் ஜாதியும் நிறைந்தது என்பதால், பல கேள்விகளுக்கு எளிதாக விடை கிடைப்பதில்லை.