டில்லி,

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ஆன செலவு குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  மத்திய அரசு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை. அதைத்தொடர்ந்து அதிக பாதுகாப்பு வசதிகளுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.

இதுகுறித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. புதிய நோட்டுக்கள் பிரிண்ட் ஆக  எவ்வளவு செலவு என கேள்விக்கு மத்திய நிதி அமைச்சக இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார்.

அதில், புதிய 500 ரூபாய் நோட்டை அச்சிட 3 ரூபாய் 9 காசுகள் வரை செலவானதாகவும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு 3 ரூபாய் 77 காசுகள் வரை செலவானதாகவும் கூறி உள்ளார்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 11 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது