குரங்கு அம்மை (Monkeypox – M-Pox) எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வருகிறது.
இதுகுறித்து சர்வதேச அளவில் சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் முழுமையாக குணமடைகிறார்கள், ஆனால் சிலர் தீவிரமாக நோய்வாய்ப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தொற்று நோய் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிகுறிகளை கொண்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி , முதுகு வலி, உடல் சோர்வு, தோல் அரிப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாக உள்ளது.
முகம், கைகள், கால்கள், உடல், வாய், தொண்டை, கண்கள், பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் ஆகிய இடங்களில் ஏற்படும் சொறி மற்றும் தடிப்புகள் போன்றவையும் இதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை தொற்றுக்கு ஆளானவருடன் முத்தம் கொடுப்பது, உடலுடன் உரசுவது போன்ற தோல்கள் மூலம் இந்த நோய் பரவுவதை அடுத்து உடலுறவின் போதும் இந்த நோய் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நோய் கண்டறியப்பட்டவர்களின் உடை, படுக்கை உள்ளிட்ட அவர்களின் உடமைகளை தனிமைப்படுத்துவதுடன் தொற்று நோய் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகவும் அவர்களை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.