ஐதராபாத்:

ர்பார் பட விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 70வயதிலும் தான் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி என்று விளக்கினார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ள  இந்த படம் வருகிற 9-ந்தேதி  திரைக்கு வருகிறது.  பெரும் எதிர் பார்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின்  டிரெய்லர் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம்  மும்பையில் வெளியிடப்பட்டது. அப்போது தனது அரசியல் குறித்தும், தனது கனவு பாத்திரம் திருநங்கை என்றும், 160 படங்களில் பணியாற்றி யுள்ளேன் எனக்கு திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றும்  மனம் திறந்து பேசினார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற தர்பார் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், சுவாஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘தர்பார் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் இங்கு இவ்வளவு பெரிய விழா நடைபெற்று வருகிறது…. தற்போது தனக்கு வயது 70 என்ற கூறியவர், இந்த வயதிலும் உங்களின் சுறுசுறுப்பு காரணம் என்ன என என்னிடம் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்….

அவர்களுக்கு நான் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான்……  கொஞ்சமாக ஆசைப்படுங்கள்,  கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள்…. இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம் என்று அசத்தலாக கூறி அமோக கிளாப்ஸை பெற்றார்…

தொடர்ந்து பேசியவர்,  இந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். .. அன்றுமுதல் இன்றுவரை  தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன் என்றார்.

என்மீது தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவது  எனது பாக்கியம்… தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்… எனது படங்கள் பல  தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.

தனது சினிமா வாழ்வில்  மேஜிக் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டதாகவுகவும், அது தற்போது தர்பார் மூலம் நிறைவேறி உள்ளது, 15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்… அது இப்போதுதான் அது நடந்து இருக்கிறது.. இது எனக்கு மகிழ்ச்சி… .

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

இந்த  நிகழ்ச்சியில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சுனில் ஷெட்டி, நடிகை நிவேதா தாமஸ், தயாரிப்பாளர் சுபா‌‌ஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

[youtube-feed feed=1]