சென்னை:
சென்னையை அடுத்த திருமழிசையில் வரும் 10ஆம் தேதி முதல் காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக என்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 10ஆம் தேதி முதல் கடைகள் செயல்பட தொடங்கும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.