சென்னை:
மிழகத்தில் மே 3-ம்  ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு  கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து,   அமைக்கப்பட்ட குழு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்குக்கு பிறகு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுகைள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில்  17 பேர் கொண்ட வல்லுநர் குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் தங்களது அறிக்கையை இன்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து சமர்பித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க நான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர்.
இவ்வாறு கூறியுள்ளார்.