இதய பாதிப்பை ஏற்படுத்துகிறதா பிஸ்கெட்…?

குழந்தை முதல் பெரியவர்கள் வரை பசி என்றால் முதலில் பிஸ்கெட் தான் நினைவுக்கு வரும்.  அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நாம் போன இடத்தில் ஹோட்டல் இல்லை,அல்லது வேறு ஏதேனும் சந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண்டால் பசி வயிற்றை கில்லும் போது குழந்தைக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி முதலில் வயிற்றுகுள் செல்வது இந்த  பிஸ்கெட்டாகத்தான் இருக்கும்.

 

ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது  எத்தனை பேருக்கு தெரியும்? பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா ஆகியவற்றை சூடுபடுத்தும் போது இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் உருவாகின்றன.  இது எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவது கிடையாது.

இந்த அமிலங்கள் நமது உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பிஸ்கெட்

கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பு அதிக அளவு சேர்க்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதனைச் சாப்பிடும் போது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாக  இருக்கின்றன.

பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் கலக்கப்படுகிறது. பிஸ்கெட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம்  பைகார்பனேட், நிறமிகள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்திருந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கெட்டில் அதிகம் சேர்க்கப்படுவதால், இது உடலின் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும்

சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்ற பிரச்னையை உண்டாக்கும்.

சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கெட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் ஏற்படுத்தும்.

கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் எடை அதிமாகும். வெளியில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கெட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதில்  உண்மை கிடையாது.

லோ இன் கலோரிஸ் என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கெட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறானதாகும்.

பிஸ்கெட்டை நொருக்குத்தீனியாக  எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் எடுத்துக் கொள்கிறார்கள். சிறுவயதிலேயே இதைச்  சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உண்டு. ஒரு சில வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவே பிஸ்கெட் தான். இது மிகவும் ஆபத்தான ஒன்று.  நமது சந்ததியை நோயில்லாமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: wether biscut creating heart problem?, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறதா பிஸ்கெட்...?
-=-