கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்மீது பாா்த்தா சட்டா்ஜி மீது அமலாக்கத்துறை 14000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மம்தா தலைமையிலான மேற்குவங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் நியமனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கல்வி அமைச்சர், பாா்த்தா சட்டா்ஜி, அவது உதவியாளர் அா்பிதா முகா்ஜி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடியாக ரெய்டு செய்தது. அப்போது, இதில், ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், ரூ.55 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் இதர நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் கணக்கிட்டால் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் பதவியில் பார்த்தா சாட்ர்ஜி நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை, ஆசிரியர் நியமனம் ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் 14ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பார்த்தா சாட்டர்ஜி தொடர்புடைய 6 நிறுவனங்கள் மற்றும் 2 பேர் (பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜி) மீது ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டன.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜி மீது, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி ஆகியோரை அமலாக்கத் துறை ஜூலை 23-ஆம் தேதி கைது செய்தது. பின்னா், நீதிமன்ற காவலில் சிறையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். சில தினங்களுக்கு முன் அவா்களை காவலில் எடுத்து, சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணையில், பாா்த்தா, அா்பிதா ஆகியோரால் போலி நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.46 மதிப்பிலான கோடி சொத்துகள் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பண்ணை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், முக்கியமான நிலம் உள்பட ரூ.40.33 கோடி மதிப்புள்ள 40 அசையா சொத்துகளும், 35 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.7.89 கோடி வைப்புத் தொகையும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.