மும்பை:
மேற்குவங்க அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானதாக முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க அமைச்சரவை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சாதன் பாண்டே மும்பையில் இன்று காலை காலமானார்.

டிஎம்சி தலைவரின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எங்கள் மூத்த சகாவும், கட்சியின் தலைவரும், கேபினட் அமைச்சருமான சதன் பாண்டே இன்று காலை மும்பையில் காலமானார். நீண்ட காலமாக ஒரு அற்புதமான உறவு இருந்தது. இந்த இழப்பால் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.