கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
உலகையே கடும் அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ள கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1.04 கோடிக்கு மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து அதில் 1.51 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இந்திய அரசு வரும் 16 ஆம் தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மதுரையில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடுவதைத் தொடங்கி வைக்க உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் மம்தா இந்த முடிவை அறிவித்துள்ளதாக பாஜக கூறி வருகிறது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது அம்மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகா போடப்படும் என பாஜக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.