கொல்கத்தா:

நார்வே, தாய்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது போல் ஆழ்கடலில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்ய மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான கூண்டுகளை ஆழ்கடலில் மிதக்க விட்டு அதில் மீன்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டம் வெள்ளோட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. 4.5 மீட்டர் சுற்றளவு கொண்ட கூண்டு ஜி.ஐ பைப்புகள் மூலம் தயார் செய்யப்பட்டு நெட்லான் மெஷ் கொண்டு அடைக்கப்படடுள்ளது. வங்காள வரிகுடாவில் மண்டர்மணி கடற்கரையில் இருந்து வடக்கு எல்லை பகுதியில் இந்த கூண்டு அமைக்கப்பட் டுள்ளது.

கடல் பறவைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக கூண்டு வலை மூலம் மூடப்பட்டுள்ளது. ஸ்திரதன்மைக்காக மிதவைகளுடன் கூண்டு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூண்டும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு செயல்படும். வரும் செப்டம்பர் மாதத்தில் மீன் குஞ்சுகள் இந்த கூண்டிற்கு விடப்படுகிறது. 6 மாதங்களில் ஒன்று முதல் ஒன்றரை கிலா எடை வரை வளரக் கூடிய மீன்கள் இதில் வளர்க்கப்படவுள்ளது.

இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கு அதிக கிராக்கி ஏற்படும். அதோடு இதன் விலையும் அதிகமாக இரு க்கும். இது போன்ற ஆழ்கடல் மீன் வளர்ப்பு திட்டம் அதிக எண்ணிக்கையில் உருவானால் மீன்களின் விலை குறையும்.

இந்த திட்டம் மூலம் எரி மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்ப டும். மேலும், இந்த கூண்டுகள் மூலம் முத்து வளர்ப்பு சாத்தயப்படுமா என்பது குறித்து விஞ்ஞாணிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.