சென்னை,

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் காலை 6 மணி முதல் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவடைந்ததாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரத்திற்கு சொந்தமான 14 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சோதனைகள் அனைத்தும்  நிறைவு அடைந்துள்ளது. சோதனையின் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்த போது கணினி ஹார்டுஸ்க், ஆவணங்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

இன்று சென்னை மட்டுமல்லாது டில்லி, நொய்டா, சென்னையில் மொத்தம் 14 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

ஆனால், டில்லி, நொய்டா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் லல்லுபிரசாத் ஆகியோர் இடங்களில் நடைபெற்ற ரெய்டுக்கும், சென்னையில் ப.சிதம்பரத்தின் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளுக்கும் சம்பந்தமில்லை என்பது குறிப்பிப்பிடத்தக்கது.