கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 15ஆம் தேதி வரை தொடரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. வடமாநிலங்களில் சற்றே குறையத்தொடங்கியுள்ள நிலையில், தென்மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில், தினசரி தொற்று பாதிப்பு 15ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை ஏறி இறங்கி வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதைய கட்டுப்பாடுகள் ஜூன் 15 வரை தொடரும் என அறிவித்துள்ளார்.
ஏற்கனேவே அறிவிக்கப்பட்டுள்ள அ னைத்து கட்டுப்பாடுகளும் தொடரும், ஆனால் சணல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்காக பஞ்சாபிலிருந்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் சணல் தொழிலுக்கு சில விலக்குகள் வழங்கப்படும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டு, தொழிலாளர்கள் தங்குவதற்கு ஒரு இடத்தை வழங்கினால், கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.