கொல்கத்தா:  தேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்து உத்தரவிட்டு  உள்ளது. அதாவது, ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்தவொரு வகையிலும் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) 24 மணி நேரம் தடை   விதித்துள்ளது.

மாநிலத்தில் இன்னும் 4 கட்ட தேர்தல்கள் பாக்கியிருக்கும் நிலையில், தேர்தல் கமிஷன் விதித்துள்ள இந்த தடை திரிணாமுல் காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில்,  தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மம்தா பானர்ஜி , அங்குள்ள  காந்தி மூர்த்தி பகுதியில்  தர்ணாவில் அமர்ந்துள்ளார்.