டெல்லி: மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும் , சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடங்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 17ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 25-ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 28 -ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற்று ஏப்ரல் 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.