கொல்கத்தா
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 35 தொகுதிகளில் 8 மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது
மேற்கு வங்கத்தில் தற்போது சட்டப்பேரவை தேதல் நடந்து வருகிறது. இங்குள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கித் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடந்து இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துள்ளன.
இன்று காலை 7 மணிக்கு 35 தொகுதிகளில் 8 மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதில் கொல்கத்தா, மால்டா, முர்சிதாபாத் ஆகிய தொகுதிகளும் அடங்கும். ஏற்கனவே நடந்த வாக்குப்பதிவுகளின் போது பல இடங்களில் வன்முறை வெடித்ததால் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை முதலே மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை எந்த பகுதியிலும் பதட்டம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.