கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலையிலேயே பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடைமையாய ஆற்ற ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.

இன்றைய தேர்தலானது மாநிலத்தின்  மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த  உள்ள 34 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவுக்கப்பட்டது. இதுவரை   6 கட்ட வாக்குப்பதிவுகள் நடை பெற்றுள்ள நிலைவயில், இன்று   7ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடந்து வருகின்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு நடைபெறும் 34 தொகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 268 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில்  37 பேர் பெண்கள். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக சார்பில் 34 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ்-இடதுசாரிகள் இணைந்த கூட்டணியில் காங்கிரஸ் 18 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 12 இடங்களிலும், ஐஎஸ்எப் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

வாக்குப்பபதிவுக்காக 11,376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 81.88 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண் வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகின்றர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  சம்சேர்கஞ்ச், ஜாங்கிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் மே16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது.