டெல்லி: ‘நிர்வாகத்தில் ஊடுருவியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம்’ என மேற்கு வங்கத்தில் ஒன்றியத்தின் பிரிவு 355 நடவடிக்கைக்கான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் கூறினார்.

தமிழ்நாடு அரசின் ஆளுநர் மீதான வழக்கில், உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியதுடன், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கும் கெடு விதித்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவரின் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்தார். பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.சுப்ரீம் கோர்ட்டு சூப்பர் பாராளுமன்றம் போல் செயல்படுவதாக தன்கர் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம் தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார். அதேவேளையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள இந்துக்களை இஸ்லாமியர்கள் அடித்துக்கொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக மம்தா தரப்பினர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது குற்றம்சாட்டுவதும், அங்குள்ள பாஜகவினர் மம்தாவின் எதேச்சதிகார நடவடிக்கை என்று விமர்சிப்பதும் வாடிக்கையாக தொடர்கிறது.
இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில், அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வரும் வரை அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் விஷ்ணுசங்கர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனுவை எடுத்துரைத்தார்.
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது முர்ஷிதாபாத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் “வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் உள் குழப்பத்திற்கு” எதிராக அரசியலமைப்பின் 355 வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரினார்.
இந்த மனுமீதான விசாரணை நடைபெறும் வகையில், வழக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இன்றே விசாரணை நடத்தும்படி, விஷ்ணுசங்கர் ஜெயின் கோரினார். மாநிலத்தில் மத்தியப் படைகளை நிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சில கூடுதல் உண்மைகளை பதிவு செய்ய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.
இதையடுத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் முன் ஆஜராகி வாதாடினார். இதை அமல்படுத்துமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என எதிர்கேள்வி எழுப்பினார். ஏற்கனவே மத்தியஅரசின் நிர்வாகத்தில் (நீதித்துறை) அத்துமீறுகிறது என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
பி.ஆர்.கவாய் வரும் மே 14 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது