மேஷம்

எல்லாம் சரிதான். இந்த ஆரோக்யம் இல்லை ஆரோக்யம். அதை மட்டும்தான் நீங்க ரொம்பவும் அலட்சியப்படுத்தறீங்க. ப்ளீஸ்.. கொஞ்சம் கவனம் வைங்க. வாகனம் வாங்க நீங்க செய்த முயற்சி கள் எல்லாம் பலிதமாகும். அரசாங்கத்தால் வரவேண்டிய லாபங்கள் எல்லாம் தன்னிச்சையாய் உங்க வீட்டு வாசலைத் தேடி வரும். நண்பர்கள்னா இவங்கதான் நண்பர்கள். மிக உதவியா இருப்பாங்க. அவங்களால உங்க வாழ்க்கையில் சந்தோஷமான மற்றும் வளமான திருப்பு முனை கள் கண்டிப்பா ஏற்படுங்க. சகோதரர்களுக்குப் புகழும் பாராட்டும் கைதட்டலும் கிடைக்கும்.

ரிஷபம்

எல்லாமே சற்று மெதுவாய்த்தான் நகரும். டென்ஷன் வேணாங்க. அவசரப்படாதீங்க. தாமதப்ப டுமே தவிர மறுக்கப்படாது. புதுசா வீடு வாங்குவீங்க. அல்லது அட்லீஸ்ட் நிலமாச்சும் வாங்கு வீங்க. அரசாங்க உத்யோகத்துக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருந்தவங்களுக்குத் தேன் பாயும் செய்தி காதில் விழும். குழந்தைங்களால சந்தோஷமும் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். அவங்களால இத்தனை காலம் ஏற்பட்டிருந்த டென்ஷன்களும் கவலைகளும் உங்களுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பிடும். பிசினஸ் செய்யறவங்களுக்கு ஏகப்பட்ட லாபம் வரும்.

மிதுனம்

மம்மிக்கு புது நன்மை ஏற்படும். அவங்களுக்கு அலுவலகத்தில் பதவியும் சம்பளமும் உயரும். புதுசா வேலை தேடறீங்களா? கம்  ஆன். முயற்சியை சீரியஸா துரிதப்படுத்துங்க. இதோ கிடைக்கப் போகுது. நண்பர்கள் யார் எதிரிங்க யார்னு பார்த்து ஜாக்கிரதையாப் பழகுங்க. உங்க பிரச்சினையே.. நண்பர்களை எதிரிங்களா நினைச்சு சந்தேகப்படறதும் எதிரிங்களை நண்பர்களா நினைச்சுத் தலைக்கு மேல வைச்சுக் கூத்தாடறதும்தான். மிதுன ராசிக்காரங்களுக்கு உரிய புத்திசாலித்தனத்தை இந்த விஷயத்திலும் யூஸ் பண்ணினா உங்களை மிஞ்ச ஆளில்லை போங்க.

கடகம்

கோபம்? நோ. ஸ்டாப். பேச்சைக் குறைங்க. கொஞ்ச நாளைக்கு உங்களுக்கு வரப்போற பிரச்சினைங்கள்ள பாதி இந்தப் பொல்லாத பேச்சினால்தான் வரப்போகுது. கபர்தார். வெளிநாடு.. வெளியூர்.. வெளி மாநிலம்.. என்று எல்லா வாகனங்களிலும் பறக்க வேண்டியிருக்கும். ரெடியா? ஜாலியாய்க் கிளம்புங்க. மம்மி கூட இருந்து வந்த சண்டைகளுக்கு ஒரு முடிவு கட்டிடுவீங்க (அல்லது கட்டிடுவாங்க). அவங்களை நீங்களும் உங்களை அவங்களும் புரிஞ்சுக்குவாங்க. கணவருக்கு (அல்லது மனைவிக்கு)நிறையப் பயணங்கள் உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

சிம்மம்

சூப்பர் செலவுகள்  செய்வீங்க.மனமகிழ்ச்சிக்காகவும் ஜாலிக்காகவும் செய்யும் செலவுகள் ஒரு புறம். ஆடை ஆபரணங்கள் என்று கார்ட் தேய்ப்பது ஒருபுறம். பேச்சினால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் லாபமும் நன்மையும் உண்டு. நண்பர்களிடம் சற்று கவனமாய் இருங்க. அவங்க என்னிக்கு வேணும்னாலும் எதிரிகளாகலாம். அல்லது புது எதிரிங்களும் முளைக்க வாய்ப்புண்டு. எனினும் உங்க ராசிக்கே ஒரு ராசி உண்டே. உங்களை யாராலும் எதுவும் செய்துட முடியாதே. குடும்பத்தில் ஹாப்பி நிகழ்ச்சிகள் சுபமாய் நடக்கும். புது நபர்கள் வருவாங்க.

கன்னி

செலவுகள் .. நிறைய செலவுகள்.. ஏராளமான செலவுகள் என்று அலைக்கழித்தாலு அவை எல்லாமே வாகனம் வாங்க.. வீடு வாங்க.. திருமண நகைகள் வாங்க.. என வரவேற்கும் செலவு களாய்த்தான் இருக்கும். சிஸ்டர்களுக்கும் பிரதர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை நீங்கதான் தீர்த்து வைத்து நல்லபெயர் எடுப்பீங்க. எனினும் அதற்கு நன்றியெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருக்காதீங்க. கலைத்துறையில் உள்ளவங்க பணத்தை சாக்கு மூட்டையில் அள்ளி எண்ண முடியாமல் எண்ணி சிரமப்படுவீங்க. என்ஜாய்ய்ய்ய்

துலாம்

திருமணம் கைகூடப்போகுது. ரெடியா? திருமணமானவர்களுக்கு மனைவிக்கு/ கணவருக்கு நன்மையும் லாபமும் … வாழ்வில் முன்னேற்றமும் சுபிட்சமும் கைகூடும். பேச்சில் மட்டும் இருநூறு பர்சென்ட் ஜாக்கிரதையா இருங்க. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிட்டு அள்ள முடியாமல் திண்டாட வேண்டாம். இப்பவே சொல்லிட்டேன். ஆமாம். புதுப்புது லாபங்களும் புதிய வருமானங்களும் வரும். ரியல் எஸ்டேட்டில் உள்ளவங்களுக்கு நன்மை அதிகமாகும். கலைத்துறையில் இருப்பவர்கள் புது ஒப்பந்தங்கள் சைன் பண்ணுவீங்க. சகோதர சகோதரிகளின் பிரச்சினையைத் தீர்ப்பீங்க.

விருச்சிகம்

பழியே வராதபடி எல்லா விஷயங்களிலும் கவனமாக இருங்கள். நீங்க தப்பு செய்யாமலேயே வீண் பழி வந்ததா? டோன்ட்டே ஒர்ரி. உண்மைகள் ஒரு நாள் போர்வையை விலக்கிக்கிட்டு வெளியே வந்தே தீரும். திடீர் அதிருஷ்டங்கள் கட்டாயம் வரும். குறிப்பா கலைத்துறைல இருக்கறவங்க ளுக்கு நன்மை. தவிர அனைவருக்குமே தந்தையால் நன்மை. சகோதரர்ஸ் சகோதரீஸ் எல்லோ ருக்கும் நீங்கதான் இந்த வாரம் தெய்வம்.நல்லதே நினைச்சு நல்லதே செய்யறீங்க. வாழ்த்துகள். அவங்களுக்கும் நன்மை செய்யறீங்க. உங்களுக்கும் பாராட்ஸ் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 19 வரை

தனுசு

இத பாருங்க. இப்போதைக்கு இதுவே பெரிய வரம். சந்தோஷப்படுங்க. இதைவிட ஆசைப்பட்டா எப்டிங்க? லாபம் வருது.. சம்பளம் உயருது. பதவி உயருது. உத்யோகத்தில் இருந்த டென்ஷன்ஸ் டாட்டா காட்டிட்டு ஓடியே போகுது… போதாதா? ஒரு  பக்கம் ஏறினா ஒரு பக்கம் இறங்கும். வாழ்க்கை என்னும் சீசா அப்டித்தான். ஆரோக்யம் பற்றி டென்ஷன் வேணாங்க. நீங்க பயப்படற அளவு எதுவும் இருக்காது. தலைக்கு வந்தது தொப்பியோட போச்சு என்ற பழமொழி மாதிரி பயங்கரமா வரவேண்டியது சிம்ப்பிளாய் முடிஞ்சுடும். ஓகே? அப்பாவுக்கு நன்மைகள் நடக்கும். பேங்க் பேலன்ஸ் கூடும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21 வரை

மகரம்

திருமணமாகாதவர் என்றால் காதல் வலையில் சந்தோஷமாய்ச் சிக்குவீங்க. திடீர்னு உங்களோட கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அலுவலகத்திலும் அக்கம்பக்கத்திலும் இத்தனை காலமாய்க் கண்டுக்காம போயிக்கிட்டிருந்தவங்க இப்ப வலிய வந்து பேசுவாங்க. பதிலுக்கு ஒரு ஹலோ சொல்லிடுங்க. காசா பணமா? ஆரோக்யம் கெட்டுப்போகும்னா அந்தப் பழக்கத்துக்கு உடனே கெட் அவுட் என்று கத்தி விடை கொடுங்க. புது வேலையா? இப்ப மாறணுமா? ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து தசை புக்தி சாதகமா இருந்தா நோ பிராப்ளம்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23 வரை

கும்பம்

கோபம் அதிகமாக வரும். போர்க்குணத்தை இப்போதைக்கு டெலிட் செய்துடுங்க. இல்லாட்டி மனசில் வைரஸ்தான் வரும். திருமண வாழ்வை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடாதீங்க. ஓகே? மனைவியுடன் / கணவருடன் சண்டை வரும்போலிருந்தால் (அது யார் பக்கம்  தப்பாயிருந்தாலும்) பொறுத்துப் போயிடுங்க. சந்தேகமெல்லாம் வேண்டாம். கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாய் இருக்க வாய்ப்புண்டு. எதிர்பாலின சினேகிதங்கள் நன்மை செய்வார்கள். குறிப்பாக பாஸ் உங்களைப் பற்றி மிக நல்ல அபிப்ராயம் கொண்டிருக்காங்க. அதைக் காப்பாத்திக்க வேண்டிய பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு. நினைவில் வெச்சுக்குங்க.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை

மீனம்

ஏராளமான நட்புகள் சேர்த்துக்கிட்டே போறீங்க. கவனமாயிருங்க. சில பொறாமைகளும் உள்ளன. சில உண்மையான நட்புள்ளங்களும் உள்ளன.  வெளிநாட்டிலிருந்து நிறையப் பணம் வரும். குழந்தைங்க மேடை மேல நின்று கிளாப்ஸ் வாங்குவாங்க. டாடிக்கு சில டென்ஷன்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அது உங்களால உண்டாகக்கூடாதுன்னு தீர்மானமா இருங்க. மேடையில் பேசிக் கைதட்டல் வாங்குவீங்க. சின்னச் சின்ன செலவுகள் வரும். பரவாயில்லை. அது வட்டியோடு வருமானமாய் வரும். சில முதலீடுகள்கூடச்செய்வீங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்குக் கூடுதல் லாபம்ஸ் உறுதி.