மேஷம்

பணப்பற்றாக்குறை பிராப்ளம் தீரும். குடும்பத்தில் சிறிய செலவுகள் இருக்கும். புதிய வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதுடன் மற்றும் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் சீராகும். பிரதர், சிஸ்டர் வகையில் நன்மை ஏற்படும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த நேர்த்திக் கடன்களைச் செய்துமுடித்து மன நிறைவு பெறுவீங்க. சகோதர சகோதரிகளுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றுவீங்க. மனிதத் தன்மைமை இழக்க சந்தர்பங்கள் வந்தும் நேர்மையுடன் இருப்பீங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 9 முதல் ஜனவரி 11 வரை

ரிஷபம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். எதிர்பார்த்த முக்கிய காரியம் நிறைவேற சிறிது டிலே ஆகும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமும், பேசும் வார்த்தையில் நிதானமும் தேவை. ஃப்ரெண்ஸ்ஸுங்க கிட்ட பழகும்போது சற்று கேர்ஃபுல்லா இருக்கவும், பிகாஸ், அவங்க உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புண்டு. உடன்பிறந்தவர்கள் உதவிகரமாகவும், ஆதரவாகவும் இருப்பாங்க. கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். புதிய வேலையில் சேருவதற்கான கால நேரம் வந்துவிட்டது.  முந்தைய தலைமுறையினருடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். உணர்ச்சிப் பூர்வமாகச் செயல்படுவீங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 11 முதல் ஜனவரி 13 வரை

மிதுனம்

குடும்பத்தில் ஒரு சில புது மாறுதல்கள் ஏற்படும். நீங்க கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சி கைகூடும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் அதிக அக்கறை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி, உறவினர் மத்தியில் மதிப்பு ஆகிய அனைத்தும் கிடைக்க பெறுவீங்க. மம்மி, டாடியின்முழு ஆதரவும் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். எதிலும் சாதகமான சூழல் உண்டு. புதிய நட்பு வட்டாரம் ஏற்படும். உத்தியோகத்தில் கொடுத்த வேலையினை சாமர்த்தியமாக செய்து பாராட்டுகளை பெறுவீங்க. தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். திருமணமான பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி வகையில் செலவுகள் உண்டாகும். புது லேப்டாப்  வாங்குவீங்க. 

சந்திராஷ்டமம் : ஜனவரி 13 முதல் ஜனவரி 15 வரை

கடகம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. பழைய நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். பிரதர், சிஸ்டர் வகையில் சில பண விரையம் ஏற்படும். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெளிவாக புரிந்து கொள்வீங்க. உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தை திட்டமிட்டு செய்வதின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் திங்கட்கிழமை கைக்கு வரும். வார மத்தியில் சில சின்ன ஏமாற்றங்கள் வந்தாலும் வார இறுதியில் மகிழ்ச்சியுடன் நிமிர்வீங்க. யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று நன்கு அறிந்து நடந்து கொள்வீங்க.

சிம்மம்

எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பான முறையில் இருக்கும். வரும் கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிரதர், சிஸ்டர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். நெருங்கிய உறவினர் தேடி வந்து வேண்டிய உதவிகளை செய்து தருவர். புதிய வீடு, மனை திட்டமிட்டபடி வாங்க முடியும். வாழ்க்கை துணையின் ஆதரவால் எதிலும் வெற்றி கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விஷயம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை குறைந்து காணப்படும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் பற்றிய சிந்தனை ஏற்படும். தேவையற்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். நீங்க பெருந்தன்மையானவர் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வீட்டில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புது வாகனம் வாங்கும் யோகம் அமையும். பிராத்தனைகள் நிறைவேறும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடுமையான முயற்சியால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். மனதில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் நல்லவிதமாக முடியும். குடும்பத்தில் சிலரின் உயர்வுகளைப் புரிந்து கொண்டு மனம் மாறுவீங்க. அலுவலக விவகாரங்களில் மனதில் தெளிவு வரும். புகழ் அளிக்கக்கூடிய துறைகளில் ஈடுபடுவீங்க.

துலாம்

குடும்பத்துக்காக நீங்க நிறைய விஷயத்தை செய்ய வேண்டியிருக்கும். அதுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்குங்க.. திருமணம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெறும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. பெரிய செலவுகள் ஏதும் வர வாய்ப்பில்லை. செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் திட்டங்களை பற்றி வெளியில் விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எந்த அவசர முடிவும் வேண்டாம். புதிய வேலைக்காகவும், இருக்கும் வேலையில் உயர்வதற்காகவும் சற்று அதிகமாகத் திறமைகளை வளர்த்துக்கொள்வீங்க. பல காலமாகத் தன்னம்பிக்கை இழந்திருந்த நிலையில் ஒருவர் அதை மாற்றுவார்.

விருச்சிகம்

மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மன நிம்மதி ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே சிறு சிறு பிராப்ளம்கள் ஏற்பட்டு பின் சீராகும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாகன பயணங்களிலும் இரவு நேர பயணங்களிலும் கவனமாக இருக்கவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பணவரவு எதிர்பாராத வேகத்தில் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிராப்ளம்கள் தீரும். உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு பின் சீராகும். வயதை மீறிய பக்குவமும் அனுபவமும் உங்களுக்கு மேலும் அதிக வெற்றியைத் தரும். அமைதியான முறையில் சில சாதனைகள் செய்வீங்க. பல வருடங்களாக இருந்த சூழல்கள் மாறி, ஹார்ட்ல தென்றல் வீசுமுங்க.

தனுசு

குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு பிராப்ளமில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகவும். எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். தடைப்பட்ட சுப காரியம் இனிதே நடைபெறும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். வெளியிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு இயல்பாக முன்னேறுவீங்க. உங்களின் இயல்புத் தன்மையிலிருந்து மாறாமல் வெற்றி இலக்கை  நோக்கிச் செல்வீங்க. புதிய நண்பர்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டாம்.  

மகரம்

குடும்ப நபர்களின் ஆலோசனை முக்கிய நேரத்தில் கிடைக்கும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. மனம் விரும்பிய காரியங்களை மட்டும் செய்வீங்க. கடன்களை அடைத்து விடவும் வாய்ப்புண்டு. முடியாமல் இருந்த பல காரியங்கள் உங்களால் முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டை பெற முடியும். தொழில், வியாபாரம் சம்பந்தமான வீண் அலைச்சல் இருக்கும். உங்களிடம் உள்ள தனித்தன்மை வெளிப்படும். ஆரோக்யமான போட்டியில் ஈடுபடுவீங்க. இளைஞர்கள் இழந்திருந்த தன்னம்பிக்கையை மீட்டுக் கொள்வர். கடுமையாகப் பேசியவர்கள் இனிமையாகப் பேச ஆரம்பிப்பாங்க.

கும்பம்

குடும்பத்தில் எப்போதும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. நீங்க எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். மம்மி, டாடியின்உடல் நிலை மேம்படும். மற்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வாங்கிய கடனை தேடி சென்று அடைப்பீங்க. மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கணவன் மனைவி இடையே இருந்த ஈகோ பிராப்ளம் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். விளைவு எது வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலுடன் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவீங்க. மனதில் உற்சாகம் உயர்வதால் இது ஜாலியான வாரமாக அமையும்.

மீனம்

கொள்கைகளை சற்று மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அவசியம் காரணமாக உங்களுக்குப் பிடிக்காத சிலருடன் கைகோத்து பணியாற்ற வேண்டி வரக்கூடும். அதை மன நிறைவுடன் செய்வீங்க. புதிய ஐடியாக்கள் மனதில் தோன்றுவதால் ஆக்கப்பூர்வமான செயல்கள் நிகழும். எப்போதோ நீங்க கொடுத்துவிட்டு மறந்துபோன தொகைகள் இப்போது திரும்ப வரும். பலநாள் இழந்திருந்த மகிழ்ச்சி குடும்பத்தில் மீண்டும் தோன்றி குதூகலிக்க வைக்கும். வாழ்க்கை முறைகள் மாறும். உங்களின் உண்மைத் தன்மை உங்களைக் காக்கும். விவசாயம் போன்ற விஷயங்கள் செய்ய விருப்பம் கூடும்.  நீங்க பேசுவதெல்லாம் பலிக்கும் என்பதால் கவனமாய்ப் பேசுங்கள். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்தி முன்னேற வழிவகை செய்யும். எதிர்பாலினத்தினரிடமிருந்து சற்றும் எதிர்பாராத பரிசு ஒன்று கிடைக்கும். நேர்மை.

சந்திராஷ்டமம் : ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை