மேஷம்

இனி எல்லாம் சந்தோஷமும் சுபமும் லாபமும்தான். மம்மிக்கும் உங்களுக்கும் ஃபைட்டிங் வராமல் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. அதிருஷ்டம் அது இது என்று எதையும் நம்ப வேண்டாம். உழைப்பை மட்டுமே நம்புங்க. அதுதான் உங்களுக்கு மிக நல்லது. வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாடு போக வாய்ப்பு வரும். கலைத்துறையில் உள்ளவர்கள் கொழிப்பீங்க. எதிர்பாலினத்தினரால் நன்மை உண்டாகும். பயணங்கள் நல்ல விதமான ரிசல்ட் கொடுக்கும். மாணவர்கள்  அநாயாசமாகத் தேர்வில் வெற்றி பெறுவீங்க.

ரிஷபம்

குழந்தைகளுக்கு கவர்மென்ட்டால் நன்மை உண்டுங்க. நண்பர்களால் நன்மை உண்டு. அதிலும் குறிப்பாக நெருங்கிய.. நல்ல நண்பர்கள் பிரமாதமாய் உதவுவாங்க. உங்க வாழ்க்கையையே திசை திருப்பும் உதவிகள்கூடச் செய்வாங்க. சம்பள கிராஃப் மேல் நோக்கி நகரும். அரசாங்க உத்யோகம் வங்கி வேலை என்று காத்திருந்தவர்களுக்கு அது எளிதாய்க் கைக்குக் கிடைக்கும். சின்னச் சின்ன செலவுகள்கூட உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் புண்ணியத்தையும் தேடித் தரும். மனதில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். வெளிநாட்டிலிருந்து வருமானமோ லாபமோ ஓடி வரும்.

மிதுனம்

ஆஹா.. அடேய்ப்பா… எவ்ளோ பெரிய அமில ஆற்றைக் கடந்து தாண்டி வந்துட்டீங்க. இனி எல்லாம் நலமே. பிரச்சினைகள் அத்தனையிலிருந்தும் ஒரே நிமிடத்தில் வெளியே வருவீங்க. வருமானத்துக்குப் புதிய வாய்ப்புகள் வரும். கப்-பென்று பிடிச்சுக்குவீங்க. வாய்ப்பு ஏணியில் ஏற ஆரம்பிச்சுட்டீங்க. நண்பர்களால் வாழ்க்கையில் வசந்தம் வீசும். குழந்தைங்களோட காதலுக்கு சம்மதம் சொல்லிடுவீங்க. எதிலும் நிதானப் போக்கு இருந்தாலும் உழைப்பு என்ற உங்களோட பலம் இருக்கு பாருங்க.. அது.. ரிவார்டும் அவார்டும் குடுத்தே தீரும்.

கடகம்

புது வீடு அருமையாய் ரெடியாகும். வாகனம்(ஸ்) வாங்குவீங்க. பேச்சின் வசீகரம் எல்லோருக்கும் உங்களைப் பிடிச்சவங்களாக்கும். மம்மிக்கு சின்ன உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதை பூதக்கண்ணாடி வெச்சுப் பார்த்து டென்ஷன் ஆக வேண்டாம். அது சிம்ப்பிளாய் முடிஞ்சுடும். குழந்தைங்க அவார்ட் ரிவார்ட் என்று வாங்கி உங்களை ஈன்றபொழுதில்  பெரிதுவக்கச் செய்வாங்க. கல்வித்துறைல உள்ளவங்களுக்கும்  பணம் புரளும் இடங்களில் வேலை பார்க்கறவங்களுக்கும் நேர்மையான லாபம் பெருகும். இப்ப நீங்க பேசப்போகும் ஒவ்வொரு வார்த்தையும் உங்க வாழ்க்கையை நிர்ணயிக்கும். ஜாக்கிரதை.

சிம்மம்

எதில்பாலினத்து சிநேகிதங்கள் அதிகமாகும். எடுத்தேன் தலைகீழாய்க் கவிழ்த்தேன் என்று எந்த விஷயத்திலும் அவசரப்பட்டுத்  தலையை விட்டுவிட்டு அப்புறம் வருத்தப்படாதீங்க. கோபம் வெடிக்காமல் பார்த்துக்குங்க. அமைதிக்காக வேண்டி ஏதாவது தியானம் கீனம் செய்தால்கூட நல்லது. குறிப்பா அலுவலகத்தில் வாயில் பிளாஸ்டர் போட்டுக்குங்க. இல்லாட்டி நம்பர் லாக் போட்டுக்குங்க. ஏன்ன விளைவுகளை நீங்கதான் சந்திக்கணும். நன்மைகள் அடுத்தடுத்து வரும். வாகனம் வாங்க பிளான் இருக்கா? எனில் அது இனிதே நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 9 வரை

கன்னி

மம்மி அரசாங்க உத்யோகத்தில் இருந்தால் நிறைய நன்மைகள் கியூவில் வந்து நிற்கும். திடீர்னு வேலை மாறும்படி இருக்கலாம், ரெடி ஸ்டெடி ஸ்டார்ட் என்று இருங்க. உங்க புத்திசாலித்த னத்தால் லாபம் … வருமானம் பார்ப்பீங்க. டாக்டர்ஸ்க்கும், ரியல் எஸ்டேட்டில் உள்ளவங்க ளுக்கும் செம லாபம் வரும். வேலை சம்பந்தமா ஏதாவது டென்ஷன் இருந்தால் அது பற்றிக் கவலை வேண்டாம். சீக்கிரத்தில் தானாய்ச் சரியாகும். எதில்பாலினத்து எதிரியால் உங்களை எதுவும் செய்ய முடியாது. பயப்படாதீங்க

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை

துலாம்

மம்மியுடன் ஆஸ்பத்திரி போக வேண்டியிருக்கும். பயப்படாதீங்க. பெரிதாய்க் கவலைப்படும்படி எந்தப் பிரச்சினையும் இருக்காது. காதல் திருமணத்துக்குப் பச்சை சிக்னல் விழும். கணவன் மனைவிக்குள் மிகுந்த வசீகரம் நிலவும். வார்த்தைகளை தராசில் நிறுத்து அளந்து மெதுமெதுவாய் யோசித்து.. பிறகுதான் பேச வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியா இருங்க. மம்மிக்கு லாபம் வரும். பெருமையும் பாராட்டும் உத்யோக மற்றும் சம்பள உயர்வும்கூட வரும். புது வேலை முயற்சி செய்யறீங்களா? இதோ கிடைச்சாச்சே.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 வரை

விருச்சிகம்

பணம் நிறைய வருது இல்லையா? இதையெல்லாம் விட்டுடாம சேமிச்சு வைங்க. அம்மா இத்தனை காலம் பட்ட சிரமங்கள் எல்லாம் பஞ்சு மாதிரிப் பறந்து போயிடும். வாகனத்தால் எவ்ளோ சிரமங்களும் செலவும் ஏற்பட்டன. இனி அவை இல்லை. நல்ல விலைக்கு விற்கலாம். அருமையான வீடு வாங்க ஏக்கமா ஏங்கிக்கிட்டிருந்தீங்க. நிறைவேறிடுங்க. நண்பர்கள் என்று எதிரிகளிடம் ஏமாறுவீங்க. நல்ல நண்பர்களைச் சந்தேகப்படுவீங்க. காலையில் ஒரு வித மனநிலை.. மாலையில் ஒருவித மனநிலை என்று மாற்றி மாற்றி செயல்படுவீங்க. அதுவேண்டாமே. முக்கியமாய்க் கோபத்தை டெலிட் செய்ங்க. 

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 15 வரை

தனுசு

கணவருக்கு மேலும் முன்னேற்றம்.. பீரோ முழுக்க ஏற்கனவே வைத்திருப்பது போதாது என்று ஆடைகளையும் நகைகளையும் ஆபரணங்களையும் வாங்கிக்  குவிப்பீங்க. பெரிய அளவில் உடல் நலக்குறைவு என்று நீங்க பயந்தது தலைப்பாகையோடு போகும். வெளிநாடு போகணும்னு நீங்க இத்தனை காலமாய்ச் செய்துவந்த முயற்சிகள் பலனளிக்காம போனது போக இப்ப நீங்க முயற்சியே செய்யாமலிருக்கும்போது தானாய்க் கனிந்து வாய்ப்பு மடியில் விழும். பேக் செய்யுங்க. எது எப்படியோ.. உங்களுடைய கவரும் தன்மை அதிகரிக்கும். மம்மியோடஃபைட் செய்து மூக்கை உடைச்சுக்காதீங்க. பாசமும் அன்பும்தான் கடைசியில் வெல்லும். யாருக்காவது ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய வேண்டியிருந்தாலும் அதன் பலன் நல்ல விதமாகவே இருக்கும்.

மகரம்

வருமானத்தைப் பற்றியும் லாபம் பற்றியும் கவலை அரிச்சுத் தின்னுக்கிட்டு இருந்தது உங்களுக்கு. மெல்ல மெல்ல அது அதிகரிக்கும். வேலை பற்றியும் திக் திக்னு பயந்துக்கிட்டிருந்தீங்கதானே? பயமெல்லாம் பறக்கும். நிம்மதியே நிறையும். குடும்பத்தில் யாரையோ விமான நிலையத்தில் போய் டாட்டா காண்பிதது வழியனுப்பி வெளிநாட்டுக்கு அனுப்பப்போறீங்க. காதல் என்னும் நெட்டில் சிக்குவீங்க. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் பிளஸ் பிளஸ் ஆகும். நாலா பக்கமும் கார்ட் தேய்ப்பீங்க. செலவுக்கு மேல செலவு இருக்கும். அதனால் என்ன? இன்னொரு பக்கம் வரவேண்டிய வருமானம் வரும்.

கும்பம்

பாஸ்போர்ட் விசா கிடைக்கும். குட்டிப் பாப்பா அல்லது குடும்பத்தில் ஒரு திருமணம் மூலம் புதுசாய் ஒரு நபர் இணைந்து ரேஷன்கார்டில் இடம்பெறுவாங்க. ஆரோக்யம் பற்றி அதிகமாய் பயங்காட்டி அப்பாடான்னு ரிலீஃப் ஆகும். கன்னா பின்னான்னு வளைச்சுக் கட்டி.. ஆரோக்யத்துக்கு ஒவ்வாத விஷயங்களையெல்லாம் சாப்பிட்டா அப்டித்தான் பயமுறுத்தும், ஜாக்கிரதை. வீடு கட்டுவீங்க. செலவுதான் ஆகும். கொஞ்சம் மெதுவாய் முன்னேறும். ஆனால் நல்லபடியா முடியும். அழகான வீடு அல்லது அழகான கார் இதில் ஏதாவது ஒன்றையாவது வாங்கிடுவீங்க.

மீனம்

பேச்சிலும் செயலிலும் மிகுந்த நிதானம் வேண்டும். மூன்றுவித லாபங்கள்/ வருமானங்கள் வரும். குழந்தைங்க காலில் ஸ்கேட்டிங் சக்கரம் கட்டிக்கிட்ட மாதிரிப் பயணம் போவாங்க. விமானம் ரயில் பஸ் கார் பைக் என்று சகலமும் அவங்களைக் கூட்டிக்கிட்டுப் போகும். கல்வி சம்பந்தமான செலவுகள் எக்கச்சக்கமா இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு உதவியும் செய்வீங்க என்பதால் மனம் நிறையும். இவ்ளோகாலமாய் எதிரிகள் அழ வெச்சாங்க. இனி அவங்களை நீங்க ஓட வெப்பீங்க. ஆனால் யார்கிட்டயும் நம்பிப் பணம் கொடுத்து ஏமாந்துடாதீங்கம்மா.