மேஷம்

உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையை ஹாப்பியா செய்வீங்க. மாணவர்களுக்கு சாதகமான வாரம். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் வகையில் சாதக பலன் பெறுவீங்க. உங்க முகத்தில் மகிழ்ச்சியும், ஜொலிப்பாக இருக்கும். அனைத்துத் தரப்பிலிருந்து மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் பெறுவீங்க. முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீங்க. வெளியூர், வெளிநாட்டில் உள்ள நெருங்கிய ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து நற்செய்தி கிடைத்து சந்தோஷப்படுத்தும். பங்கு மார்க்கெட் போன்றவற்றில் திடீர் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கைகூடும். வேலைகளில் உங்க செயல்திறன் சிறப்பாக இருக்கும். எந்த துறையில் வேலை செய்தாலும் அதில் சிறப்பான பலனும், லாபமும் கிடைக்கும். குழந்தைங்களால சந்தோஷமும் உற்சாகமும் அதிகரிக்கும். புதுப் பொருள் வாங்கி சந்தோஷப்படுவீங்க.

ரிஷபம் 

முயற்சிகள் சக்ஸஸாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக ஆகும். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுயதொழில் ஆதாயம் பெறுவர். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகன வகையில் மற்றும் சொத்து சார்ந்த வகையில் வரவும் காரிய வெற்றியும் ஏற்படும். நண்பர்கள் மற்றும் ரிலேடிவ்ஸ்ஸால் ஆதாயம் உண்டு. கலைதுறையில் உள்ளவங்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலைகள் உண்டாகும். நீண்டகால முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீங்க. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற காரியங்களில் வெற்றி அடைவீங்க.

மிதுனம்

மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க வேண்டிய வாரம். நிதி ரீதியாக வலுவான வாரமாக இருக்கும். புத்திசாலித்தனமாக வேலையை செய்ய திட்டமிடுங்கள். உங்க தொழிலில் பெரிய வெற்றி பெறலாம். அரசியல் விவகாரங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகள் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பொறுமை நிறைந்த வாரமாக இருக்கும். உங்க பேச்சில் இனிமையும், செயலில் நிதானமும் தேவை. சிறப்பான செயல்பட்டால் மற்றவர்களை உங்க பக்கம் ஈர்ப்பீங்க. உங்க புத்திசாலித்தனத்தால் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. உத்தியோகத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நல்ல பண வரவு, பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு லாபகரமான சூழ்நிலை இருக்கும். வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும் வகையில் உங்க பேச்சும், செயலும் இருக்கும். ஆன்மிகம், சமூகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

சிறப்பான வாரமாக இருக்கும். உங்க புத்திசாலித்தனத்தால் பணியில் மேன்மையும், மேலதிகாரிகளால் பாராடும் கிடைக்கும். சிறிய முதலீடுகளால் எதிர்காலத்தில் பயனுள்ள லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீங்க. உங்க ஆசைகளை பிறர் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது. நிர்வாகம் தொடர்பான பணிகள் சீராக நடைபெறும். சில சங்கடம் தரக்கூடிய சூழ்நிலையால் வணிக பலவீனமாக இருக்கும். நல்லவர்களுடன் நல்லுறவு ஏற்படும். உங்க நற்பெயரும், கௌரவமும் உயரும். இன்று உங்க பழைய நண்பருடன் மகிழ்ச்சியாக உரையாட வாய்ப்புள்ளது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்க சொல், செயலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

சிம்மம்

அலுவலக விஷயங்களில் விடா முயற்சி நிச்சயம் கைக்கொடுக்கும். முடிவைப் பற்றி கவலைப்படாமல் உங்க செயல்களில் கவனம் செலுத்தி உழைக்கவும்.உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு உத்தியோகத்தில் தடைகளால் ஏற்பட்ட சிரமங்கள் மறையும். தடைப்பட்ட காரியங்களை செய்ய முயல்வீங்க. வணிகர்களுக்கு சற்று கடினமான நேரமாக அமையும். இருப்பினும் சோர்வடையாமல் முயற்சி செய்ங்க. வழக்கு தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையைப் பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்கள் மூலம் உங்களுக்கு  நன்மை தரும் செயல் நடக்கும். வார்த்தைகளால் செல்வாக்குப் பெறுவீங்க. தொழிலில் சூழ்நிலைகள் உங்க விருப்பப்படி அமையும். உங்க வியாபாரத்தில் முடங்கிக் கிடக்கின்ற சில வேலைகள் இன்று முடிக்க வாய்ப்புகள் அமையும்.  பெற்றவங்களோட இந்த வாரம் சந்தோஷமாய்க் கழியும்.

கன்னி

உத்தியோகத்தில் ஒருவரின் ஆதரவு உங்களுக்குப் பலன் தரும். பெற்றோரின் அன்பைப் பெறுவீங்க, பிள்ளைங்க மூலம் மகிழ்ச்சியைப் பெறுவீங்க. நண்பர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இன்று புதிய கொள்முதல் செய்வீங்க. குடும்ப உறுப்பினர்களுக்காக உங்க பிஸியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி, அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களை சந்தித்து நலம் விசாரிப்பீங்க வேலையில் நல்ல பணம் கிடைக்கும். உங்க நிதி நிலை வலுவாக இருக்கும். வணிக, வர்த்தகத்தில் குறிப்பாக நல்ல முடிவுகளைப் பெற முடியும். உங்க துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். பழைய பிரச்னைங்க ஒவ்வொண்ணா மறைஞ்சு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

துலாம்

இந்த வாரம் வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் தரக்கூடிய காலமாக இருக்கும். தொலைதூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. கமிஷன் சார்ந்த பணியில் உள்ளவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்க பேரன்ட்ஸ்ஸுடன் ஹாப்பியா நேரத்தை செலவிட வாய்ப்புகள் அமையும். உங்க ரிலேடிவ்ஸ் வட்டாரத்தில் உங்க மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஃபேமிலியில பிரச்னைங்க தீர்ந்து மகிழ்ச்சியா வாழ்க்கை நகரும். உறவினரோட நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் உங்க குடும்பத் தேவைகளை நிறைவேற்றச் செலவு அதிகரிக்கும். கமிஷன் சார்ந்த பணியில் உள்ளவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்மையா செயல்பட்டு மன நிம்மதி பெறுவீங்க. குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்பாடாகும். வேலையை சிறப்பாக முடித்து நல்ல பெயர் வாங்குவீங்க.  பல காலமாய் இருந்த பழக்கங்களை மாத்திக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் உங்க பணியிடத்தில் உங்க செயல்பாடுகளாலும், திறமையான வேலையாலும் நன்மதிப்பைப் பெறுவீங்க. தாராளமான மனப்பான்மை, சமுகம் நலன் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு நன்மதிப்பைப் பெறுவீங்க. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். பணிச்சுமை காரணமான பிசியாக இருந்தாலும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. குடும்பத்தில் குதூகலத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளை தவிர்ப் பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக மனஸ்தாபம் ஏற்படாதபடி கவனமாய் இருங்க. அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைங்க பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் விட்டுப்பிடிச்சுப் போறது நல்லது.

சந்திராஷ்டமம் : மே மாதம் 4ம் தேதி முதல் மே மாதம் 7ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

தனுசு

அலுவலகத்தில் வேலைச்சுமை குறைஞ்சு நிம்மதி தரும். வேலைக்கேத்த ஊதியம் கெடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்க வேலைங்களை மத்தவங்க கிட்ட ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிச்சுடுவீங்க. நெருங்கிய உறவினர்கள் மூலம் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சாமர்த்தியமாக சரி செய்துடுவீங்க. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள் களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 7ம் தேதி முதல் மே மாதம் 9ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

மகரம்

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதை சற்று ஒத்திப் போடவும். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். பணவசதி ஓரளவு திருப்தி தரும். நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு அதிகரிக்கும். வாரத் தொடக்கத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் சந்தோஷமளிக்கும் சுப செலவுகள் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 11ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

கும்பம்

அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.  வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பாங்க. ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். பணவரவைப் பொறுத்தவரை திருப்தி கரமான போக்கே காணப்படுகிறது. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 14ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

மீனம்

வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உங்க பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். புதிய முதலீடுக்கான பண உதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் இருக் காது. பிள்ளைங்க மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் சுபநிகழ்ச் சிகள் ஏற்பாடாகும். நண்பர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி கள் தொடங்குவதற்கு உகந்த வாரம்.