மேஷம்
குடும்பத்துல மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். ஆடம்பரமான செலவுகளை இழுத்து விடுவதில் இல்லத்தரசிகள் அதிக முனைப்புடன் செயல்படுவாங்க. வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்னை ஒன்றைத் தீர்த்துக் கொள்வீங்க. நேரடியான எதிர்ப்புகளும் மறைமுகமான கெடுதல்களும் செய்வதற்கு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தால்தான் என்னங்க? அதை நிதானமாகவும் பொறுமையாகவும் கடந்து வெற்றையடைவீங்க. அலுவலகத்தில் பணம் கையாளும் வேலை என்றால்.. பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை செய்யாதீங்க. நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கீங்க. கவலை வேணாம். உங்க அயராத உழைப்பின் காரணமாய் உங்க விருப்பங்களும் ஆசைகளும் நிறைவேறும்.
ரிஷபம்
பிள்ளைகள் படிப்பில் அக்கறை செலுத்தி பெற்றோரை பெருமைப்படுத்துவாங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் மந்தமாக நடக்கும். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடவே செய்யாதீங்க. அப்பிடிச் செய்யறவங்களுக்குப் பணம் நகைகளை இழக்க வேண்டிய அபாயம் உண்டாகும். அதெல்லாம் நமக்கு வேணாங்க. கவர்மென்ட் கிட்டேயிருந்து இருந்து வரவேண்டிய நல்ல செய்தி ஒரு வழியா பல காலத் தாமதத்துக்குப் பிறகு இப்போ வரும். குடும்பம் சார்ந்த விஷயங்களை நீங்க பேசும் போதும், கருத்து தெரிவிக்கும் போதும் மிக கேர்ஃபுல்லா இருப்பது அவசியமுங்க. வார்த்தையில் கவனம் தேவை. பிராமிஸ் செய்யும்போ போது உங்களால் முடியும் என்றால் மட்டுமே வாக்குக் குடுங்க. இல்லாட்டி குடுக்காதீங்க. வேண்டாம். தடைப்பட்டு வந்த காரியங்கள் வேகம் எடுக்கும், குழதைகளின் திருமண விஷயம், கல்வி சார்ந்த விஷயங்கள் சிறப்பாக நிறைவேற ஆரம்பிக்கும்.
மிதுனம்
தொழிலுக்கான புதிய முதலீடுகளை திரட்டுவீங்க. கட்டுமான துறையில் அதிக அக்கறை செலுத்துவீங்க. விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீங்க. தோப்புக் குத்தகை மூலமாக வருமானம் பெறுவீங்க. வீடு தேடி வரும் வாய்ப்புகளை அலட்சியமாக இருந்து கோட்டை விட்டுடாதீங்கப்பா. கையில இருக்கற காசை பத்திரப்படுத்துங்க. யாரையும் பகைச்சுக்க வேணாம். நீங்க செய்த.. செய்துக்கிட்டிருக்கிற தர்மங்களுக்கு ஏற்ப பலனை இந்த வாரம் கொடுக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகளுக்கு மிக கரெக்டான நல்ல காலம். வேலைப்பளுவை ஈஸியா சமாளிப்பீங்க. உணவு எடுப்பதில் கவனமாய் இருங்க. தீயபழக்கத்தையெல்லாம் உதறித் தள்ளுவதன்மூலம் உடல் நலனை கவனிப்பது நல்லதுங்க. உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இருந்த மன கசப்பு நீங்கும். சேமிப்பு அதிகரிக்கும். தள்ளிப்போன சுப விரைவில் நடக்கத்தான் போகுது. வருமானம் குறையக்கூடும்.
கடகம்
வேண்டுதலை நிறைவேற்றக் கோயில்களுக்கும் ஷேத்திரங்களுக்கும் போய் வருவீங்க. குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் மற்றும் நெருங்கிய ரிலேடிவ்ஸ்கூடச் சென்று வரக்கூட சான்ஸ் இருக்கு. சகோதர சகோதரிகள் பக்க பலமாக இருப்பாங்க. பண வரவு தாராளமாக இருக்கும். யாருகூடவும் எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீங்க. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சட்டவிரோதமான காரியத்தில் இறங்காதீங்க. வீட்டுல சுப காரியங்கள் நடக்கும். அல்லது அப்பிடி நடக்கறதுக்கான ஏற்பாடுகள் நடக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள், முதலில் டென்ஷன் கொடுத்தாலும் பிற்காலத்தில் நல்ல பலனைத் தருமுங்க. லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் பணி இடம் மாற்றம், பதவி உயர்வு தட்டிப்போயிக்கிட்டிருந்ததில்ல.. அவையெல்லாம் உங்க விருப்பப்படி நல்ல முறைல நிறைவேறும். ஹாப்பியா?
சிம்மம்
வழக்குகளில் இழுபறியான நிலையை நீடிக்கும். ஒங்களோட மனசைப் புரிஞ்சுக்காம வீட்டில் உள்ளவர்கள் சங்கடத்தை ஏற்படுத்திக்கிட்டிருந்தாங்களே … லாஸ்ட் வீக். அவங்க உண்மை புரிஞ்சு ஸாரி கேட்பாங்க. தைரியமா வியாபாரத்துல இறங்கி முத்திரை பதிப்பீங்க. பழைய கடன்களை வசூல் செய்வீங்க. வங்கியில் வாங்கிய கடனை அடைப்பீங்க. பல நாளாப் போகாத கோயில்களுக்கு.. எஸ்பெஷலி குலதெய்வ வழிபாட்டுக்குப் போவீங்க. வீட்டில் திட்டமிட்டபடி சுப நிகழ்வுகள் நடக்கும். அலுவலகவாசிகளைப் பொருத்த வரையில் உழைக்கும் வலிமை அதிகரிக்கும். பெண்களுக்கு வீடு, வாசல், சொத்துக்கள் வந்து சேரும். குடும்பம் சார்ந்த தேக்கநிலை மாறிப் படிப்படியாக முன்னேற்றம் தெரியவரும். கொடுத்த வாக்கைக் காப்பாத்துவீங்க. இதனால் நல்லபெயர் எடுப்பீங்க. சபாஷ்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 31 முதல் ஜூன் 2 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
நீங்க ஃபாக்டரி வெச்சுத் தொழில் செய்யறவரா? அப்பிடின்னா தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருக்கம் ஏற்படும். வேலை காரணமாக வெளியூர் பயணம் செல்வீங்க. குடும்பத்துல நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். களைப்பே தெரியாத பிஸி வாரம். மேலதிகாரிங்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலும். திருமணமாகிப் பலகாலம் குழந்தை இல்லாத இந்த் ராசிப் பெண்களுக்குக் குழந்தை வரம் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு, வெளிநாட்டுக் கல்வி பத்தின முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி சிறக்கும். அலுவலகவாசிகளுக்கும்கூடப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். அரசாங்க அனுகூலம் உண்டாகுமுங்க. திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு இத்தனை காலம் டல்லாக இருந்ததல்லவா, அந்நிலைமாறிப் புதிய ஒப்பந்தங்கள் ‘சைன்’ பண்ணுவீங்க.
சந்திராஷ்டமம் : ஜூன் 2 முதல் ஜூன் 5 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
ரொம்பக் காலமாக் குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு மன நிம்மதியை தருகின்ற நல்ல செய்தியை டாக்டர்ஸ் சொல்லுவாங்க. . வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் அதுல ஏற்பட்ட சக்ஸஸ் காரணமா நிம்மதியும் சந்தோஷமும்த கூடவே ஏற்படும். மினி சைஸ் பிரச்சனை உண்டாகி அதைத் தீர்ப்பதற்கு நண்பர்களின் உதவியை நாடி வெற்றியும் பெறுவீங்க. இது வெறும் ஆரம்பம்தாங்க. பெரிய அளவில் புகழ்பெறுவதற்கு இது ஒரு விதைதான். முன்கோபம், பதற்றம் ஏற்படலாம். அதனால் விட்டுக் கொடுத்தலும், கவனமாக பேசுதலும் அவசியம் தேவைங்க. வாக்குக் கொடுப்பதை டோட்டலாய்த் தவிர்த்துடுங்க. பொருளாதாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும் போது ரொம்பவே கவனமாக இருப்பது நல்லது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், சுபகாரியங்கள் அனுகூலம் தரும். உத்தியோகத்தில் நல்ல அனுகூலம், மாற்றம் உண்டாகுமுங்க. உடல் நலத்தைப் பொருத்த வரையில் முன்பைவிட பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் காணும்
சந்திராஷ்டமம் : ஜூன் 5 முதல் ஜூன் 7 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
உத்தியோகத்துல இருக்கறவங்க எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனா அதை ஹாப்பியா உழைப்பீங்க. பிகாஸ் அதன் பலன் பெரிதாயிருக்கம். குடும்பத்துல இதமான சூழ்நிலை நிலவும். குடும்பத்துல இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கிகாரம் கிடைக்கும். உழைக்கும் வலிமை அதிகரிக்கும். வீடு, மனை பாக்கியம் உண்டாகுமுங்க. மனதை அரித்துக்கொண்டிருந்த கவலைகள் படிப்படியாகக் குறைவதற்கான அடையாளங்கள் தென்படும். எடுத்தேன் கவிழ்த்தேன் கொட்டினேன் என்று அவசரமாக எதையும் செய்யக்கூடாது. குடும்பத்துல சுப நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிக்குமுங்க. பொருளாதார முன்னேற்றம், தைரியம் உண்டாகுமுங்க. உறவில் நெருக்கம் உண்டாகுமுங்க. தொழிலில் மாற்றங்களைப் பெறப்போறீங்க பாருங்களேன்.
தனுசு
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீங்க. அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனசுல நம்பிக்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்க பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கொஞ்சம் கேர்ஃபுல்லா செக் செய்துட்டு அனுப்பினால் பிரச்னை வராதுங்க. இத்தனை காலமாய் இருந்துக்கிட்டிருந்த பிரச்னைங்களும், டென்ஷன்களும், கவலைங்களும், கஷ்டங்களும் மெல்ல மெல்லப் புகை மாதிரி மறைஞ்சு போயிடுங்க. பயணம் பற்றிய கற்பனைக் கவலைகளைத் தவிர்க்க முடியாது. பயமும் கவலையும் தற்காலிகமாத்தான் இருக்கும்னு நினைவுல வெச்சுக்குங்க.
மகரம்
இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனசுல ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். அது தேவையில்லாத கற்பனைபயம்தாங்க. திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்துல மத்தவங்களோட ஹெல்ப் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. எதுவுமே நெனைச்ச வேகத்தில் நடக்கவில்லையே என்று புலம்பாதீங்க. கட்டாயம் நல்லபடியாக முடியம். அதற்குரிய அவகாசத்தைக் குடுங்களேம்ப்பா! உடல் ஆரோக்கியம் நல்லாத்தான் இருக்கும். ஆனா நீங்க தேவையில்லாம அதுபத்தி பயந்து நடுங்கறது மட்டுமில்லாம, உங்களுக்கு வேண்டியவங்களையும் டென்ஷன் பண்ணுவீங்க. ப்ளீஸ். வேணாமே. சுணங்கிக் கிடந்த வேலைங்கள்ளாம் வேகமா நடந்து முடியுங்க. ரொம்ப காலமா நீங்க கனவு கண்டுக்கிட்டிருந்த வீடு, மனை பாக்கியம் உண்டாகுமுங்க.
கும்பம்
உத்தியோகத்துல உள்ளவங்க மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவாங்க. குடும்பத்துல அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீங்க. பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். எங்கேயும் எதுலயும் தடை தாமதங்கள் இருந்தாலும் முடிவில் வெற்றியடைவீங்க. முயற்சி செய்பவர்கள் புதிய வேலைவாய்ப்புப் பெறுவீங்க. முன்பைவிட உங்க அப்பாவோட உடல் ஆரோக்கியம் நல்லபடியா ஆயிடும். கஷ்டமான சூழலிலிருந்து உங்க புத்திசாலித்தனத்தாலும் திறமையாலும் ஈஸியா வெளியில் வந்துடுவீங்க. அரசாங்கம் மூலம் பலகால எதிர்பார்ப்பிற்கப்புறம் இப்போது அனுகூலம் உண்டாகுமுங்க. பெரிய அதிகாரிங்க மற்றும் பிரபலஸ்தர்களின் நட்பு பல நன்மைகளை தரும்.
மீனம்
பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீங்க. மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் தேவையில்லாத மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் முன்னேற்றம் உண்டாகுமுங்க. மேலிடத்தின் கருத்து வேறுபாடு நீங்கும். புது முயற்சியில் வெற்றி பெறுவீங்க. மம்மிக்கும் உங்களுக்கும் ஃபைட் சீன் வராம பார்த்துக்குங்க. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். எதிர்பாலினத்தினரிடம் கவனமாக செயல்படணுங்க. எதிர்பார்த்த நிகழ்வுகள் கேன்ஸல் ஆவதால் சின்ன ஏமாற்றங்கள் இருக்கும். நீங்கள் மதிக்கும் பெரியவங்களைச் சந்திப்பீங்க.