மேஷம்

அடுத்தவங்களுக்காக உதவி செய்வது மற்றும்  அவங்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப் படாம அடக்க வாசிங்க. அதற்கான பாராட்டு எதையும் எதிர்பார்க்க வேணாங்க. லேடீஸ் தங்களுக்குக் குடுக்கப்பட்ட வேலைங்களைத் திறம்படச் செய்து முடிச்சு நல்ல பெயரும் பாராட்டும் பெறுவீங்க. தொலை தூரத்திலிருந்து வரும் தகவல்கள் நிம்மதியளிக்கும்.  பயணம் செல்லும் தேதி கன்ஃபர்ம் ஆகும். நாலு  பேர் அறியும்படியான புகழும் பாராட்டும் கெடைக்கும். சகோதர சகோதரிங்க உங்க கிட்ட, முன்பைவிட அதிகமா ஒட்டுவாங்க. டிராவல் செய்யும் போது கவனம் தேவைங்க. மற்றபடி ஆபீஸ்லயும், உறவினர்கள் மத்திலயும், சொன்ன சொல்லைக் காப்பாத்தப் பாடுபட்டு… அதுல நல்ல பெயரும் எடுத்துடுவீங்க. மாணவங்க படிப்புல கவனம் செலுத்துவீங்க.

ரிஷபம்

நண்பர்களின் எண்ணிக்கை இன்கிரீஸ் ஆகும். அதனால பெரிய நன்மைகள் எதுவும் இல்லைன்னாலும் மனசுல சந்தோஷம் நிறையும். ஜாலியா இருப்பீங்க. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக  ஈடுபடுவீங்க. அதில் ஓரளவுதான் வெற்றிகிடைக்கும்.  விருப்பத்திற்கு மாறா எதுவும் நடந்துடாதுங்க. பயப்படாதீங்க.  பகைவர்களை வென்று நிம்மதி பெறுவீங்க. உங்களுக்கு நல்லது நினைக்கறவங்க.. குறிப்பா குடும்பத்தில் உள்ளவங்களை மீறி நீங்க செய்யவிருந்த ஒரு விஷயத்தை அவங்களுக்காக விட்டுக்குடுத்து செய்யாம இருப்பீங்க. இதனால அவங்க நெகிழ்ந்து நெருக்கமாவாங்க. பொதுவாகவே உங்களுக்கருந்த எதிர்ப்புகள் அகலும். பணவரவு ஓரளவு திருப்திகரமா இருக்கும். இதைவிட அதிகமா நீங்க எதிர்பார்த்திருந்தீங்க. சிறிய பயணங்கள் நல்ல சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும்.

மிதுனம்

வேலைப் பளு கொஞ்சம் அதிகமாத்தாங்க இருக்கும். இட்ஸ் ஓகே. அதிகமா இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிச்சு, நிமிர்ந்து பாஸ் கிட்ட சபாஷ் வாங்கிடுவீங்க. பணவரவு உங்களை ஹாப்பியா ஆக்கும். அதென்னங்க இப்பல்லாம் முணுக்குன்னா கோபம் வருது? குடும்பத்துல  உள்ளவங்க கிட்ட கோபப்படாமல் நிதானமாப்பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் வகைல உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். இட்ஸ் ஓகே. பிகாஸ்… பெரிய தாமதம்லாம் இல்லை. லிட்டில் தாமதம்தான். வாகனத்தை கவனமாக ஓட்டுங்க. உங்களுக்கு என்ன வயசிருந்தாலும் பெற்றோருக்கு என்ன வயசிருந்தாலும், அப்பா அம்மா உங்களை நெகிழ்ந்து பாராட்டும்படியான விஷயங்களைச் செய்வீங்க. சபாஷ்ங்க.

கடகம்

இந்த வாரம் தேவையே இல்லாத விஷயங்களில் வீண் குழப்பம் ஏற்படும். ஏன்ங்க? கஷ்ட்ட்ட்ட்டமான கால கட்டத்தைத்தான் தாண்டி குதிச்சு வெளியே வந்துட்டீங்கல்ல? பிறகென்ன? எதைப் பத்தியும்  அதிகம் யோசிச்சுக்கிட்டு மனசைக்  குழப்பிக்காமல் இருப்பது பெட்டர்ங்க. பணவரவு இருந்த போதிலும், எதிர்பாராத  ஓரிரண்டு செலவும் வந்து சேரும். ரெடியா இருங்க. எங்கும் எதிலும கவனமாய்ச் செயல்படுங்க.ஆபீசில் வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ அனுப்புவாங்க. பிள்ளைங்க பிரைஸ் வாங்குவாங்க. ரொம்ப நாளாக் காணாமல் போயிருந்த அதிருஷ்டம் அட்டண்டன்ஸ் குடுக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு, மேல்படிப்பு பற்றி உறுதியாக முடிவாகும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் தடைநீங்கிப் புதுப்புது வாய்ப்புகளைப் பெறுவீங்க. ஹாப்பியாவீங்க.

சிம்மம்

நண்பர்கள் மத்தியிலும், உறவினருங்களுக்கிடையேயும் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். பொறுப்பு இன்கிரீஸ் ஆகும். சம்பளம் அதிகமாகலைன்னு சின்னதா மனசுல ஒரு குறை இருக்கா?  சற்று பொறுங்க. பயந்து பயந்து ஈடுபட்ட சாதனைச் செயல் ஒண்ணுல உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீங்க. வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப உறவுகளில் நீங்க அதிக கவனம் செலுத்த வேண்டும். பயம் வேணாம். அவங்க குறைப்பட்டுக்கவோ, முகத்தைத்தூக்க வைச்சுக்கவோ மாட்டாங்க. பிசினஸ் அல்லது தொழில்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்க மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை.. புதுசு புதுசாப் பெற்று தரும். வேலை செய்யும் இடங்களில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்துல கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

வாழ்க்கைல முன்பிருந்ததைக் காட்டிலும் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில முக்கிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கருத்து வேறுபாட்டின் காரணமாக வீட்டில் இத்தனை நாளாய் நிலவிக்கிட்டிருந்த பனிப்போர் அல்லது கசப்புணர்ச்சி கரைஞ்சு காணாமல் போய் இனிய ஒற்றுமை மெதுவாய் உள்ளே வரும். எந்தச் சூழ்நிலையிலும் நீங்க உணர்ச்சிவசப்படாம இருக்கணுங்க. மற்றபடி, ஒங்களோட வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டுத் தாவி ஏற்க வேண்டியது உங்க கைலதான் இருக்கு. தொழில்… வேலை… மற்றும் வியாபார ரீதியாக நல்ல வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படும். பெரிய அளவுக்கு விரயங்கள் அதாவது செலவுகள் குறையும் என்பது உங்க ராசியினருக்கு மிகப்பெரிய நிம்மதியாக உணர்வீங்க. மூத்த சகோதரர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்

உடல் ஆரோக்கியத்துல இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த  டென்ஷன்ஸ் இனி அறவே இல்லை.  பட்ட எல்லா கஷ்டங்களுக்கும் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்தது அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டம் மற்றும் ராஜயோகம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையப் போறீங்க. பணமழை கொட்டாவிட்டாலும் தூறலாவது உண்டுங்க.  குடும்பத்தினருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடாமல் அமைதியா  இருக்க ஆரம்பிப்பீங்க. இதானால உங்களுடைய டென்ஷன்ஸ்ஸும் குறையும். அவங்களுக்கு உங்க மேல இருந்த வருத்தமும் தீரும். முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணலாம். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை பெரிய அளவு செய்யாமல் சின்ன சின்ன மாற்றங்களை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்துல இருக்கறவங்களுக்குப் பெரிசா சிக்கல்கள் எதுவும் இருக்காது.

விருச்சிகம்

திடீர்னு அலுவலகத்தில் பெரிய பதவி அல்லது வேறு ஊருக்கு இடம் மாறுவது உள்ளிட்டவை ஏற்படலாம். அதெல்லாம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை அல்லது முன்னேற்றத்தைக் கொடுக்கும். ரிலேடிவ்ஸ் வருகையால பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். அதை ஈடுகட்டும் வகைல, அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். ஆபீசில் உங்களை இத்தனை காலமாக் கண்டுக்காம  இருந்த அல்லது திருப்தி அடையாத மேலதிகாரிங்க, திடீர்னு உங்களை அன்பான பார்வை பார்ப்பாங்க. உண்மைல அவங்க திடீர்னு அப்பிடி மாறலைங்க. இத்தனை காலமா தங்களோட  அன்பை வெளிப்படுத்தாமல் உங்க பெர்ஃபாமென்ஸை கவனிச்சு,  மேலிடத்துக்கு சிபாரிசு  செய்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. டூ யூ நோ தட்? உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.

தனுசு

நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும்.  நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ்  உதவியால கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும். கணவன் மனைவிக்குள் மனசுவிட்டுப் பேசுங்க. அது உங்களுக்கு மட்டுமில்லாம, ஒங்க முழுக் குடும்பத்துக்கே நன்மை தரும். அரசியல்வாதிங்களோட விருப்பங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்கள் சப்போர்ட்டா இருப்பாங்க. இந்த வாரம் ஒங்களோட திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். ஒங்களோட வாழ்க்கையில் மனைவி/ கணவர் மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அலட்சியம் செய்யாமல் அதைக் கேட்ச் பிடிச்சு அப்டியே ஃபாலோ செய்ங்க. முன்னேற்றம் உறுதி. வியாபாரிகளைப் பொருத்தவரையில் நீங்கள் விற்கும் அல்லது டீல் செய்யும் பொருளுக்கு மிகுந்த வரவேற்பும் டிமாண்டும் கூடும். என்ஜாய்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

மகரம்

மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை, மிகுந்த முயற்சிக்குப் பிறகு வெற்றியுடன் செய்து முடிப்பீங்க. இதானல மனசுல நிம்மதியும் சந்தோஷமும் நிறைவது மட்டுமில்லாம, பார்ப்பவர்களுக்கு உங்க மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வாக்குள்ள பலரும் உங்களைத் தேடி வருவாங்க. சமூகத்தில் உங்க  அந்தஸ்து உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிராப்ளம்ஸ் தீரும். தந்தை வழியில சொத்து பற்றி, நீண்ட நாளாக இருந்துக்கிட்டிருந்த கஷ்டம் நீங்கும். அலுவலகத்தில் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம்  உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் அல்லது நன்மை அல்லது உதவி கிடைக்கும். மேலதிகாரிங்க கிட்ட  வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். குழந்தைங்க வாழ்க்கைல முன்னேறி உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

கும்பம்

உங்க வீட்டில உள்ள லேடீஸ் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாச் செய்து முடிச்சு ஆதாயம் அடைவாங்க. தந்தை வழிச் சொத்துக்களை அடைவதில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். முன் எப்பவோ இன்வெஸ்ட் செய்திருந்த தொகை குட்டி போட்டு, உங்களுக்கு பிரமிப்பும் சந்தோஷமும் தரும்.  பெரிய செலவு ஒண்ணு வரும்போலிருந்து, உங்களைத் தாண்டிக்கிட்டுப் போயிரும். பேச்சுல ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க. உங்க கோபமும் கத்தலும் சில இடங்களில் செல்லுபடியாகாமலும் இருக்கும் என்பதை நினைவுல  வெச்சுக்குங்க. கட் பண்ணி விட்டிருந்த நட்புகளைத் தேடிப்பிடிக்க இது சமயம் இல்லைங்க. பிறகு பார்த்துக்கலாம். குடும்பத்துல சின்ன விரிசல்கள் இருக்கலாம். குறிப்பா உங்க கணவர் / மனைவி குடும்பத்தினரோட வாக்குவாதம் வரும்போலிருந்தா… தயவு செய்து ஒரு வாய் தண்ணியைக்குடிச்சு அந்தக் கோபத்தை முழுங்குங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

மீனம்

காரியத் தடைகள் நீங்கி எடுத்த விஷயத்தை வெற்றிகரமா முடிச்சுடுவீங்கப்பா. உங்களோட சாமர்த்தியமான வாக்கு வன்மையால நன்மை உண்டாகும். மாணவங்க அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது. விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள்  மீண்டும் கிடைக்கும். பணம் காசு விஷயத்துல அலட்சியப் போக்கைக் கைவிடுவது நல்லது. சிஸ்டர்ஸ்.. பிரதர்ஸ்.. உங்களைக்கு நன்மை அண்ட் உதவிங்க செய்வாங்க. பதவி உயர்வதால் அலுவலகப் பொறுப்பு செமத்தியா அதிகரிக்கும். எல்லாமே நிதானப்போக்கில்தான் நடைபெறும். திட்டமிட்ட விஷயங்கள்கூடத் தேதியைத் தாண்டி, நிறைய முயற்சிகளுக்குப் பிறகுதான் நடைபெறும். நீங்க தப்பான செயல் செய்யலைன்னா உங்களுக்கு எதுவும் தப்பாகாதுங்க.