வார ராசி பலன்: 3.9.2021முதல் 9.9.2021வரை! வேதாகோபாலன் 

Must read

மேஷம்

பண வரவுகள் அதிக அலைச்சல் பிறகே வந்து சேரும். கணவன் மனைவி இருவரும் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்னை ங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. பழைய சொத்துக்கள் விற்று புதிய மனைவாங்க கூடும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உண்டாகும். நிலுவையிலிருந்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியங்க. தொழில், வியாபார தொடர்பான பேங்க் லோன் கிடைக்கும். உங்க கஷ்டங்களுக்கும் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். லோன் பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை அடைக்க முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். குடும்பத்துடன் சந்தோஷமாகப் பொழுதை கழிக்க முடியும். ஃபேமிலியில் பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகமாவது போல் உணருவீங்க.

ரிஷபம்

கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீங்க. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், பிசினஸ் தொடர்பான பயணங்கள் நிறைய உண்டு. சற்றும் எதிர்பாராத பண வரவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதியை பெற முடியும். லோன் தொந்தரவை ஓரளவு சமாளிக்க முடியும். நெருங்கிய உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத ஹாப்பி செலவுகள் வரும். மனதில் புது புது எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசுவது நன்மை தரும். குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இட மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மிதுனம்

வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும். கொடுக்கல். வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதை பெரியளவில் கொண்டு செல்லவும். முடிந்து போனதை நினைத்து எப்பவும் கவலை பட வேணாங்க. இனி நடக்க போகும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாட்டுடன் வாழ விருப்பம் ஏற்படும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிராப்ளம்ஸ் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் ஹாப்பியாவீங்க. நட்பு வட்டம் அதிகமாகும். நண்பர்கள் கிட்ட எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகம்

மற்றவர்களிடம் பழகும்போது வார்த்தையில் பொறுமையும் நிதானத்தையும் பின்பற்றுவது நல்லதுங்க. சமுதாயத்தில் உள்ள விஐபிகளின் தொடர்பு கிட்டும். குடும்ப வருமானம் போதுமானதாக இருக்கும். மனைவி/ கணவர் வழி சொந்தங்களால் ஆதாயம் ஏற்படும். சுப விரயங்களால் பணம் வெளியில் லோன் வாங்க வேண்டிவரும். ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனம் மாற்றம் ஏற்படலாம். ஆன்மிக ரீஸன்ஸ்க்காகப் பணம் நிறைய செலவாகும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். தொழில், பிசினஸ் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் பேச்சு திறமையால் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு உண்டாகும். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்குங்க.

சிம்மம்

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லோன் பிரச்சனை படிப்படியாக குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமானாலும் அதை சமாளிக்க முடியும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் கைகூடும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். உறவினர் வீட்டு விஷயங்களில் கலந்து கொள்வீங்க. மற்றவர்கள் பாராட்டும் படி உங்க செயல்கள் இருக்கும். உடன் பிறப்புகளுக்கு வேண்டிய உதவியை செய்து தர முடியும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்காகவும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம். உத்தியோகத் தில் மன நிம்மதி உண்டாகும். தொழில், பிசினஸ் விரிவாக்கம் தொடர்பான முயற்சி செய்யவும். கடந்த சில தினங்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் குறைந்து, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

கன்னி

உத்தியோகத்தில் எதிர்பார்த்தது போல் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். கூடுதலாக சிறிய முதலீட்டில் புது தொழில் ஒன்றை தொடங்க முடியும். குடும்பத்தில் ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். எதை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். உடன்பிறந்தவர் களிடம் விட்டு கொடுத்து போகவும். வேண்டியவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்ப நலனில் அக்கறை எடுத்து கொள்ளவும். கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்சனையைத் தவிர்க்கவும். புது வீடு மாற்றம் ஏற்படும். உங்க வருமானத்திற்கு ஏற்றபடி செலவுகளும் இருக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை தொடங்கும். எவ்வித பிரச்னையும் இல்லாமல் கவனமாக பணிகளை மேற்கொள்வீங்க. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எல்லோரிடத்திலும் அன்பாகவும், அனுசரணையாக நடந்து கொள்ளவும்.

துலாம்

வீட்டிலோ, அலுவலகத்திலோ சிறிய கருத்து மோதல்கள் உண்டாக வாய்ப்புண்டு. உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பாராத பொருள் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. நெருங்கிய நண்பர்கள் சிலர் உங்களுக்கு நன்மை செயல்படலாம். பெற்றோர் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. பணியிடத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கூட்டு தொழில், பிசினஸ் நல்ல லாபத்தைக் கொடுக்கும். உங்களது அனுபவ அறிவால் செல்வாக்கு நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சிறு பிரச்னை ஏற்பட்டு, பின் சீராகும். திருமண விஷயத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். குடும்பத்தில் பணவரவு நன்றாக இருக்கும். செலவுகள் சற்றுக் குறைவாக இருக்கும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புதிய வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

செல்வாக்கு, திறமை, புகழ், எல்லாம் நல்லபடியாக அமையும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள்  காரணமாக கணவன் மனைவி இடையே சிறிய விரிசல் ஏற்படலாம். உடல் நலனில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். தூரத்து உறவினர்கள் வருகையால் மிக நன்மைகள் உண்டு. இழுபறியிலிருந்த சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். உறவினர்கள் உங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாங்க. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணியில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில், வியாபார விரிவாக்க சிந்தனை ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தனுசு

வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் புது பொறுப்புகள் கிடைத்து அதனால் நன்மை வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் பெறுவீங்க. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீட்டில் அதிகமான மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் தேடி வரும். குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உங்க அந்தஸ்து மதிப்பு தானாக உயரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர் வருகையால் வீடு களைக்கட்டும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் சுப விரயங்கள் அதிகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. பொது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. சுப விரயங்களால் குதூகலம் விளையும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 5  வரை

மகரம்

எதிர்பார்த்ததை விட அதிகம் செலவுகள் ஏற்படும். சோம்பேறித்தனத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் பல எதிர்ப்புகள் நீங்கி நல்ல சுமூக உறவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். எ தையும் வேகமாக செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் நிறையவே இருக்கும். பண சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். குல தெய்வ அருள் கிடைக்கும். இது வரை நீங்க பட்ட கஷ்டங்களுக்கு ஒரு முடிவு வரும். குடும்ப பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். லோன் பிரச்சனை படி படியாக குறைய தொடங்கும். மேற்கொண்டு லோன் வாங்கும் சூழல் இருக்காது. குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியும். உடல் நிலையை பொறுத்தவரை எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 7 வரை

கும்பம்

பணியில் புது முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் தகுந்த ஆலோசனை பெறவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆன்மீகத்தில் தனி ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்படும். உடன்பிறப்புகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மற்றவர்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் இருக்கும். சில எதிர்பாராத பொருள் மற்றும் பணவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த லோன் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உங்களுக்கு எதிராக நின்றவர்கள் நண்பர்களாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், பிசினஸ் சுமாராகவே இருக்கும்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 10 வரை

மீனம்

பேச்சுத் திறமையால் மற்றவர்களை எளிதாக கவருவீங்க. பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்யவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் ஒன்றை வாங்குவீங்க. கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உறவினர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. உங்க திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை உங்களை ஆதரிப்பார். விரைவில் புதிய தொழில், தொடங்கும் யோசனை ஏற்படும். எப்போதும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாச பட்டு இருக்க வேண்டும் என்று விரும்புவீங்க.

 

More articles

Latest article