மேஷம்

மகான்களோட ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். ஒங்களோட தளராத முயற்சி காரணமாப் போட்டி, பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக பெஸ்ட்டாய்ச் செய்து முடிப்பீர்கள்.  கவர்ன்மென்ட் வேலைக்கு மனு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். லாபம் கொறையாது. குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றங்கண்டு ஹாப்பினஸ் அதிகரிக்கும். பெரியவங்க ஆசியால நீங்க எடுக்கற எல்லா முயற்சிங்களும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

ரிஷபம்

இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை சூப்பர் வாரமா இருக்கும். வரவேண்டிய கடன் பாக்கிங்க வசூலாகும். ரிலேடிவ்ஸ், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் சின்னச் சின்ன உதவிங்க கெடைக்கும். எடுத்த முயற்சி ஒண்ணு வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பட்.. செய்து முடிச்சுடுவீங்க. குடும்பத்துல ஒரு  செல்லப் பிராணி என்டர் ஆகக்கூடும். புதிய நபர்களோட தொடர்பு ஏற்படும். உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்து நட்பு கெடைக்கும். கணவர் / மனைவி மூலம் நன்மை ஒண்ணு கெடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வில தேர்ச்சி உண்டாகும். பேச்சுத் திறன் அண்ட்.. சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். அரசு பதவியில் உள்ளவங்க பயன் பெறுவாங்க. காத்திருந்த சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படும். ஆபீசில் பேச்சுத்திறன் ஆதாயம் தரும்.

மிதுனம்

பணவரவு அதிகரிப்பதுபோல், செலவுங்களும் கூடும். மனக் கவலைகள் சிலது இருந்தாலும் குடும்பத்துல உள்ளவங்களோட அன்பான அரவணைப்பு அதையெல்லாம் குறைக்கும். தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள்  முகத்தில் புன்னகை தவழ்கிறதே? பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்ப சுமைகளை ஒருசேர சுமப்பதில் சிரமம் ஏதும் இல்லை என்பர். வியாபார விரிவாக்கம் பற்றி உங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்று சக்ஸஸ் பார்ப்பீங்க. வீட்ல அமைதியும் நிம்மதியும் சிறப்பானதா இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலா செல்லும் சான்ஸ் ஏற்படும். வெற்றியும், அரசுத் துறையால் லாபமும் கெடைக்கும். சிலருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்பட சான்ஸ் உண்டு. வீட்டுல நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீங்க. வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வீக்.  உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. நீங்க எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமா வந்துக்கிட்டே இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு எந்த ஒரு காரியத்தைக் கையில் எடுத்தாலும் தடைகள் ஏற்படும். அதனால என்னங்க? சுலபமான செயல்களையும் கூட கடின உழைப்பிற்குப் பிறகு நிச்சயமா நிறைவேற்றி வெற்றி காண்பீங்க. சிரமங்கள் ஓரளவுக்குக் குறையும். அலைச்சல்கள் வெற்றி தருவதால மன நிம்மதி கூடும். நல்லவங்களோட பழகுவது நல்லதுங்க. பதவி, அந்தஸ்து உள்ளவங்க கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துக்குங்க. நீங்க ரொம்ப கவனமாய்ப் பார்த்துக்கு வேண்டிய விஷயம் உங்க ஹெல்த் தாங்க. அலட்சியம் செய்யாதீங்க.

சிம்மம்

இந்த வாரம் ஜாலியா… ஹாப்பியா.. ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்ல திருமணம் மாதிரியான மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.. விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில வெற்றி பெறக் கொஞ்சம் கடினமா உழைக்க வேண்டியதிருக்கும். ரொம்பவும் கஷ்டப்படறவங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதால் மனசுல நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நண்பர்களிடையே இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி வெள்ளைக்கொடி காட்டுவாங்க. நீங்க இறங்கிப்போக வேண்டியிருந்தாலும் பரவாயில்லைங்க. அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தாலும் டென்ஷன் இல்லாம டீல் செய்துடுவீங்க. பிரிஞ்சிருந்த தம்பதிகள் இணைந்து பேரின்பம் அடைவீங்க. மிகவும் அன்பு செலுத்தும் பெண்களோட ஆதரவால் லாபம் ஏற்படும்.

கன்னி

இந்த வாரம் ஒய்ஃப் மற்றும் குழந்தைங்களோட சேர்ந்து வாழ்க்கை ஹாப்பியா கழியும். புனித காரியங்களில் ஈடுபடுவீங்க. அரசாங்க உத்தியோகம் தேடிக்கிட்டிருந்தவங்களுக்கு அது கெடைக்க சான்ஸ் இருக்கு. ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப் செய்வாங்க. அதிகாரம் உள்ள பதவிகள் கெடைக்கும். ஃபாரின் பயணம் மற்றும் பிசினஸ் நல்லபடியா அமைஞ்சு அதன் மூலம்  தன லாபம் / இன்கம் அதிகரிக்கும். விவசாயிங்களுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, லாபத்தால் வசதிகள் பெருகும். ஆபீசில் பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பீங்க.  சிலருக்குத் தந்தைவழி சொந்தக்காரங்களால  நன்மையும் லாபமும் ஏற்படும். அரசு வகையில் வரி பாக்கிகள் கட்டவேண்டிய கெடுபிடிகள் இருக்கும். அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவி கள் கிடைத்துச் சிக்கல்கள் தீரும்.  எனவே நீங்க நல்லபடியா மேனேஜ் செய்துடுவீங்க.

துலாம்

இந்த வாரம் ஹாப்பி வாரம். எல்லாக் காரியங்களும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலம் வரவேண்டிய அனைத்து நன்மைகளும் தவறாது, தடையின்றிக் கிடைப்பதனால் மனசு ஹாப்பியா பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக உங்க குடும்பத்துல கல்யாண நியூஸ் அல்லது யாரோ ஒரு லேடி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும்! எஸ்பெஷலி ஆபீசில் புகழ் ஓங்கும். தெய்வ பக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் ஹாப்பியா பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசு வாகனத்தில் உல்லாச சுற்றுலா பயணங்கள் செல்வதன் காரணமாக ரொம்ப உற்சாகமாயிடுவீங்க. நீங்க சந்தோஷமா இருப்பதோடு மத்தவங்களையும் சந்தோஷப் படுத்துவீங்க.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு எப்போதும் காசு.. பணம்.. துட்டு.. மனி பற்றிய சிந்தனையாவே இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் லெக்சர்கள்.. வீடியோக்கள் கேட்டல் என இந்த வாரம் தெய்வீக வாரமாக அமையும். உழைப்பின் காரணமாக நேரத்துக்கு சாப்பிட அண்ட் தூங்க முடியாத நிலை ஏற்பட சான்ஸ் இருக்குங்க.  எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் இருக்கும். ரிலேடிவ்ஸி வருகை, சூப்பர் சாப்பாடு, கேளிக்கைன்னு  சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். அம்மா… ஒய்ஃப்.. சிஸ்டர்ஸ் தோழி எனப் பெண்களால் இலாபம் உண்டு. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் பணிந்து நடப்பது பணியில் முன்னேற்றங்களை தரும். சுருங்கச் சொன்னால் ஆர்க்யூ செய்யவே செய்யாதீங்க.

தனுசு

இந்த வாரம் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புது பிசினஸ் முயற்சிகள் கவர்மென்ட் உதவியுடன் வெற்றி பெரும். எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நல்ல பதவியில் உள்ளவங்க தங்களைவிட உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவாங்க. பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் சான்ஸஸ் அமையும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சம்பாதிச்ச பணத்தை புதிய இன்வென்ஸ்ட்மென்ட் திட்டங்கள் மூலம் சேமிக்க முயற்சி செய்வது பற்றிக் கொஞ்சம் யோசிச்சுட்டு ஈடுபடுங்க.  போட்டி பந்தயங்களில் வின் பண்ணுவீங்க. கற்பனை வளம் பெருகும். புத்தக வெளியீடு மற்றும் எழுத்துத்  துறைல உள்ளவங்களுக்கு முன்னேற்றமும் சக்ஸஸூம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 3 முதல் மார்ச் 5 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க   

மகரம்

இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். அருமையா அலங்காரம்/ மேக் அப் செய்துக்குவீங்க. சென்ட் போட்டுப்பீங்க. பெயரும், புகழும் இன்கிரீஸ் ஆகும். அறிவுத்திறனும் கூடும். பண விஷயங்களில் ஏமாறாமல் இருக்க அதிக கவனம் எடுப்பீங்க. வெரிகுட். ஃப்ரெண்ட்ஸ் மாதிரி நடிக்கறவங்க கிட்ட எச்சரிக்கை தேவை. நல்லவங்ககூடப் பழகுவது நல்லது. ஆபீஸ்ல ஒங்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கெடைக்கும். வாகன வசதியும், கம்ஃபர்ட்ஸ்ஸும் கெடைக்கும். சிலருக்கு விருதுகள் .. அவார்ட்.. ரிவார்ட்.. பாராட்டு.. புகழ்.. கெடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்குத் தந்தை வழியில் வீடு, மனை கிடைக்க சான்ஸ் இருக்குங்க.  இத்தனை காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவங்களுக்குப் பூரண நலம் ஏற்படும்.  மத்தவங்களுக்கு உதவற நல்ல எண்ணம் மேலோங்கும்.  தீட்டிய முக்கிய பிளான்ஸ் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 5 முதல் மார்ச் 8 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க 

கும்பம்

குழந்தைங்களோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் பிரச்னைங்க முடிவுக்கு வரும்.  வியாபாரிகளுக்கு பேங்க் லோன் கிடைக்கலாம். இந்த வாரம் திருமணம், மக்கட்பேறு மாதிரியான சுப விஷயங்கள் ஏற்படலாம். கார், ஸ்கூட்டர் ஆகியவற்றில் உயர்ரக பிராண்ட் வாகனங்கள் கெடைக்கும். ஆபீசில்.. ஸ்கூலில்.. காலேஜ்ல எவராலும் சாதிக்க இயலாத சாதனைகளைச் செய்து முடிச்சு கிளாப்ஸ் வாங்குவீங்க. ராஜ தந்திரத்தால் நல்ல பதவிகளை அடைவீங்க. புண்ணிய காரியங்கள், தான தர்மங்கள் செய்யப் பாருங்க. அது இப்போதைய உங்களோட போதாத காலத்தை சீர் செய்யும். வயல்களால் வசதிகள் பெருக சான்ஸ் கூடும். திடீர் டிராவல்ஸ் செய்ய வேண்டியிருக்கலாம். புதிய லோன்ஸ் வாங்க நேரலாம். இடைவிடாத ஒர்க் காரணமாக நேரத்திற்கு சாப்பிட அண்ட் தூங்க முடியாம போகும். எதுலயும் தடை தாமதம் ஏற்படலாம். கொஞ்சம் பொறுமை தேவைங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 8 முதல் மார்ச் 10 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க 

மீனம்

கவர்மென்ட் உதவியோட புதிய பிசினஸ் தொடங்கும் திட்டம் கொஞ்சம் டிலே ஆகக்கூடும். பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவால் நினைச்ச விஷயங்கள் ஈஸியா முடிவடையும். இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை வாங்குவீங்க.. அல்லது அம்மா அல்லது மாமியார் கிட்டேயிருந்து கிஃப்டாக் கெடைக்கும். நல்ல பண்புள்ளவங்களோட நட்பும், அன்பும் கெடைக்கும். மனசுல தெய்வ பக்தி கூடும். நினைச்சதை நெனைச்சபடியே சாதிக்கற தெறமை அதிகரிக்கும். நல் ஹெல்த்தும், புது தெம்பும் ஏற்படும்.  பணக்கார ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.  அழகான, எழில் நிறைந்த வீடு கெடைக்கும். மம்மியோட  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.  புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். கவலை பயம் எல்லாமும் குறைஞ்சு நிம்மதி வரும்.