மேஷம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பல குட் திங்ஸ் நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்னு சொல்ல முடியாட்டியும், நாட் பேட். எடுத்துக்கிட்ட வேலைங்க எல்லாத்தையும் ஈஸியா செய்து முடிப்பீங்க. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். அலுவலகத்தில் இருந்த டஃப் டைம் தீரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிசினஸ் பீப்பிளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சற்றுக் கூடுதலாய் ஏற்படும். பிசினஸ் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். அரசு நெருக்கடிகள் விலகும். வங்கியின் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும், நிலத் தரகர்களுக்கும் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் ஹாப்பியா இருக்கும்.
ரிஷபம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பெண்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதைக் கண்டு ஹாப்பி ஆயிடுவாங்க. தாமதப்பட்டு கொண்டிருந்த மேரேஜ் கன்ஃபர்ம் ஆகும். வேலையில்லாதவங்களுக்கு ஜாப் கிடைக்கும். சினிமா, மியூசிக் மாதிரியான ஃபீல்ட்டில் உள்ளவங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்மால் விஷயங்களில்கூட சக்ஸஸ் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் மட்டும் இல்லீங்க.. எதிர்பாராத பணமும் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிங்க வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஆர்டர்ஸ் கிடைக்கும். சுப விசேஷங்கள் தொடர்பான விஷயங்கள் இன்று நல்லபடியா ஃபைனலைஸ் ஆகும். சுபச் செலவுங்க ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்னையில் ஹாப்பியான முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் யூஷுவல் நிலையே இருக்கும். பிசினஸில் வளர்ச்சி இருக்கும். புது பிசினஸ் செய்ய சான்ஸ் கிடைக்கும். எதிர்பாராத ஹெல்ப் கிடைக்கும்.
மிதுனம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பணத்தேவைகள் நல்லபடியா பூர்த்தியாகும். எதிர்பார்த்த பிசினஸ் ஆர்டர் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேண்டிய ஹெல்ப்ஸ் கிடைக்கும். வாழ்க்கை துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் அன்பும் பாசமும் பெருகும். வேலை தேடறவங்களுக்கு அது பற்றிய நியூஸ் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய போஸ்ட் கிடைக்கும். பெண்களுக்கு பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் மூலம் ஹெல்ப் கிடைக்கும். நினைச்சது நிறைவேறும் வாரம். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக பிசினஸ் ஸ்டார்ட் செய்வது போன்ற விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீங்க. இம்ப்பார்ட்டன்ட் பொருட்களை வாங்குவீங்க. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் கூடும். கார்/ பைக் மாற்றும் சிந்தனை உண்டாகும்.
கடகம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படும் சான்ஸ் உள்ளது. பிரதர்ஸ்/ சிஸ்டர்ஸ் கிட்ட தேவையில்லாத விவாதங்களை செய்ய வேண்டாம்.ஹஸ்பெண்ட்/ ஒய்ஃப் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கப்பா/ மா. வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீங்க. எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். பள்ளி கல்லுாரி நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். காதல் சம்பந்தமான மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் நன்மைகள் சேரும். கணவர், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். அதிகாரம் உள்ள பதவியில் அமர்வீங்க. உறவினர்களுக்கு உதவி செய்வீங்க. உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டு பெறுவீங்க. திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாக செய்வீங்க. குடும்பத்தில் யாருக்கேனும் மருத்துவச் செலவு ஏற்படலாம். படபடப்பு, பரபரப்பு ரெண்டையும் கொஞ்சம் மூட்டை கட்டி லாஃப்டில் போட்டுவிட்டு கொயட்டா இருங்க.
சிம்மம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். பிரயாணங்களால் செலவு ஏற்படலாம். லாண்ட்/ ஃப்ளாட் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம். பங்குச் சந்தையில் நிதானமாக ஈடுபடுங்கள். குழந்தைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு. பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். தொழில்செய்பவர்கள், போதியவாய்ப்பைப்பெறுவீங்க.பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். பதவி உயர்வு அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படும். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சை அடுத்த வாரத்துக்குத்‘ தள்ளிப்போடலாம். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். பட் யார் கிட்டயும் சவால் அது இதுன்னு விட்றாதீங்கப்பா.
கன்னி
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
நீண்ட நாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கு வாய்ப்பு உள்ளது. வாகன மாற்றும் சிந்தனை ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்று தாமதப்படுத்தலாம். முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மனம் பரபரப்பாக இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் மனதில் வந்து போகாமல் காத்துக்கொள்ளுங்கள். எதிர்கால திட்டங்கள் தீட்டுவீங்க. முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வாழ்வில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் சற்று தாமதமாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். பணி தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டுக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
திருமணப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். கலைஞர்களுக்கு உயர்வுகள் ஏற்படும். இளைஞர்கள் வாழ்வில் வசந்தம் காண்பீங்க. வயிற்று ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் சிறிய அளவிலான வியாபாரம் தொடங்குவது பற்றிய முயற்சியில் ஈடுபடுவீங்க. பணியாளர்கள் முயற்சியை அதிகரித்துப் பேச்சைக்குறையுங்கள். திருமணமாகாத பெண்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். வேலையில் இருக்கும் பெண்கள் பதவி உயர்வு ஊதிய உயர்வு உள்ளிட்ட அவை கிடைக்கும்.விளையாட்டு போன்ற பொழுதுபோக்கில் ஈடுபடுவீங்க. சிலருக்கு சுயமாக தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். இளைஞர்கள் வெளிநாட்டு முயற்சிகளில் ஈடுபட்டால் எளிதான வெற்றியைக் காணலாம்.பணியில் நன்மை தரும் சிறு மாற்றம் ஏற்படும். பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,
விருச்சிகம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பெண்கள் ஆரோக்யத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. பயணங்கள் ஏற்படும். நண்பர்களின் சிரமம் காரணமாக செலவுகளும் ஏற்படும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையைச் செய்து முடிப்பீங்க. தொழில் தொடர்பான சந்திப்புகளில் மனமகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாக இருக்கும். கூடுதலான பணவரவு இருக்கும்.தேவையான உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும். புதிய பொருட்கள் வாங்குவீங்க. எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளைப் பொறுமையான முயற்சி செய்வதன்மூலம் வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபார ஒப்பந்தம் கிடைக்கும்போது அந்த வாய்ப்பைச் சரயாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தனுசு
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். திருமணத் தேதி முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் வாரத்தின் பிற்பகுதியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் கூடும். பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். பணியாளர்களுக்கு நன்மை ஏற்படும். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சில நன்மைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களின் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியம் சரியாகிவிடும்.
சந்திராஷ்டமம்: அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 வரை
மகரம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நன்மை தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பாங்க. சிறு முயற்சிகளுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். கொடுக்கப்பட்ட பணியைத் தீவிரமான முயற்சியால் செய்து முடிப்பீங்க. முன்னேற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. செல்வாக்கு கூடும். தெய்வபக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றி கரமாக முடிப்பீங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை
கும்பம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இளைஞர்களுக்கு எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீங்க. உறவினர்களால் உதவி கிடைக்கும்
சந்திராஷ்டமம்: நவம்பர் 1 முதல் நவம்பர் 3 வரை
மீனம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பிரியமானவர்களால் சிறு உபத்திரவம் ஏற்படலாம். நண்பர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வாங்க. அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகப் போட்டிகள் தன்னிச்சையாய்ச் சரியாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மத்யஸ்தம் செய்வீங்க. குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீங்க. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்தவை அனுகூலமாக முடியும்.
சந்திராஷ்டமம்: நவம்பர் 3 முதல் நவம்பர் 5 வரை