மேஷம்
மேடம் … ஒங்க வீட்டில் நிச்சயதார்த்தம்.. திருமணம் ..வளைகாப்பு ..குட்டி பாப்பாவுக்குப் பெயர் சூட்டுவிழா என்று ஏதாவது ஒரு சுப காரணத்திற்காக சந்தனம், அட்சதை, வீடியோ பூமாலை அமர்க்களப்படும். மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் சந்தோஷம் தரும் நல்லுறவு இருக்கும்மா. உங்களை அவங்க ரொம்பவும் சப்போர்ட் செய்வாங்க. ஒங்க டாடிக்குதான் டூர் போகவே நேரம் சரியா இருக்கே!
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை
ரிஷபம்
அரசாங்கத்தின் மூலம் ஏதோ ஒரு நன்மை எதிர்பார்த்துக்கிட்டிருந்தீங்க மேடம். அது நல்ல முறையில் நிறைவேறும் மேடம். சகோதரர்களுக்கு ஏதோ ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவங்க கூட நல்லுறவு இருக்கும். அனுசரணை இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் உதவியாய் இருப்பீங்க. திடீர்னு வெளிநாட்டுக்க பேக் செய்ய வேண்டி வரலாம். தயாரா இருங்க. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அம்மாவின் ஆதரவால் உங்களுக்கு ஒரு நன்மை ஏற்படும். (அட நான் உங்க மம்மியைச் சொன்னேம்மா)
மிதுனம்
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு! கவலையைத் தூக்கி டஸ்ட் பின்னில் போடுங்கம்மா. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். நேரம் காலம் பார்க்காமல் கணிணியின் காலடியில் உட்கார்ந்து உழைக்கறீங்களே அந்தக் கண்ணுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கக்கூடாதா? உங்க ரேஷன் கார்டில் இன்னொரு பெயர் சேரப்போகுது. கன் ஆன்! செம ஜாலிதான்.
கடகம்
…உங்க கிட்ட ஒரு விஷயத்தைப் பாராட்டியே தீரவேண்டும் மேஷம்ஸ்! தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய… அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே! அது! இப்போ முதல் வகை கால கட்டம். பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்கம்மா. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க. நம்பறதுக்கும் ஒரு அளவு வேணும் இல்லையா?
சிம்மம்
எதிரிகளுக்கு நீங்க சிம்ம சொப்பனமாகத்தான் ஆகிவிடுவீங்கம்மா… சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க சரிம்மா. உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…சரி சரி சரி. அதுக்காக உழைப்பதற்கு ஒரு அளவில்லை? முதுகு பெண்ட் ஆகிற வரைக்குமா உழைக்க முடியும்? கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க மேடம். சரியா? ஓகே?
கன்னி
கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். உல்லாசப் பயணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்கம்மா.. உங்களால் தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற்கெல்லாம் ‘நோ’ தான். வேறு வழியில்லாத அலுவலகப் பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க. அபார்ட்மென்ட் வாங்கப் போறீங்க. கங்கிராட்ஸ்
துலாம்
உங்க வீட்டில் யாருக்கோ திருமணம். சீமந்தம் இன்ன பிற விசேஷங்கள் வருதேம்மா. செம ஷாப்பிங் உண்டு. புது உடைகளையெல்லாம் எடுத்து ரெடியாய் அயர்ன் செய்து வையுங்க. பொதுவிழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக்ல அழகாய்ப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்களேம்மா. மைக்கில் மட்டுமல்லாமல் எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் கவனமாய்ப் பேசுங்க. ஹஸ்பெண்ட் கிட்ட அனல் கக்க அனுமதி ’நோ
விருச்சிகம்
எதுக்குமா வேண்டாத விஷயங்களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும் மேம். கவலைப்படாதீங்க. என்னது? குழந்தைங்க டென்ஷன் பண்றாங்களா? வாட்!! அவங்க உங்களையா நீங்க அவங்களையா? குடும்பத்தில் சின்ன சின்ன மின்னல்கள் தோன்றுவது இயற்கைதான்! எல்லாம் தற்காலிகம் மேடம்!
தனுசு
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது. எங்கும் எதிலும் காத்துக்கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. முன்னோர் வழியில் ஏதாவது சொத்து வரும் மேடம். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டத்தான் போறீங்க பாருங்கம்மா, ஹப்பாடீ.. ஒரு வழியா தன்னம்பிக்கை வந்துச்சே..
மகரம்
நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். எனினும் டாடி மம்மி வீட்டில் இல்லைன்னு எதையாவது ஏடாகூடமாய்ச் செய்து வைக்கவும் வேண்டாம். பிற்பாடு திருதிரு துறுதுறு ன்னு விழிச்சுக்கிட்டு ஷேம் ஆகவும் வேண்டாம்மா. நல்ல பெண்ணாய் இருங்க. எந்த அளவு முடியுமோ அந்த அளவு படிப்பில் கவனத்தைக் கொண்டு போய்க் கொட்டுங்க. சாப்பாட்டு விஷயத்தில் கவனமாய் இருந்தே தீரணும்மா…
சந்திராஷ்டமம் : ஜுலை 25 முதல் ஜுலை 27 வரை
கும்பம்
மிஸ்டர் குரு பகவான் உங்களைக் குறுகுறுன்ன பார்த்துக்கிட்டிருக்கார்மா. எடுத்த காரியம் யாவினும் வெற்றி. எனினும் ஏழரைச் சனியை மனதில் கொண்டு (வால்யூம் கம்மியா) அடக்கி வாசியுங்க. மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வெஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அளவில் ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. நேர்மையாவும் நியாயமாவும் மனசு திங்க் செய்வதால் பொல்லாப்பிலிருந்து தப்பினீங்க
சந்திராஷ்டமம் : ஜுலை 27முதல் ஜுலை 29 வரை
மீனம்
புது வண்டி வாங்கப் போறீங்க. பார்த்து ஓட்டுங்க. அலுவலகத்தில் புதிய பொறுப்பு. அதிக சம்பளம். அபரிமிதமான மரியாதைன்னு உங்களை உயரத்தில் தூக்கி வைப்பாங்க. வேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். ஸோ வாட் என்று கேட்கும் ரகமாச்சே மேடம் நீங்க! ஆமாம்… தெரியாமத்தான் கேட்கறேன்.. அப்டியாவது லோன் போட்டே ஆகணுமாம்மா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேம்மா, ப்ளீஸ்…
சந்திராஷ்டமம் : ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை