மேஷம்

இந்த வாரம் மனசுல தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால ஆதாயத்தை பெறுவீங்க. உயர்மட்ட பதவியில் உள்ளவங்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பா இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில மதிப்பு கூடும். உங்களோட உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை எதுவும் வராது. கவலை வேணாம்.  தொழில் வியாபாரத்துல பார்ட்னர்களுடன் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. செலவுகள் மெல்லக் குறைஞ்சு ரிலாக்ஸ் ஆவீங்க. இந்த வாரம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சினைங்க முடிவுக்கு வரும்.

ரிஷபம்

வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிச்சாலும் முணுமுணுக்கும்படி இருக்காது. நிம்மதி இருக்கும். ஸ்டூடன்ட்ஸ் அடுத்தவரை பற்றிய விமர்சனங் கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. இந்த வாரம் உத்யோகத்துல உள்ளவங்க சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீங்க. குடும்பத்துல இருக்கறவங்ககூட அனுசரிச்சுப் போறது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்காதபடி மென்மையாப் பேசுங்க. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். கற்பனை பயங்கள் வேண்டாம். குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீங்க. ஏதாவது ஒரு கவலை மனசுலயிருந்து முழுமையா அகன்று நிம்மதி தரும். செலவு கூடினாலும் சந்தோஷச் செலவுங்கதாங்க.

மிதுனம்

பணவரத்து சற்றே தாமதமானாலும் சமாளிச்சுடுவீங்க. கொடுத்த வாக்கை காப்பாற்றி நிம்மதியடைவீங்க. தொழில் வியாபாரத்துல ஈடுபட்டு உள்ளவங்க எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். உத்யோகத்துல உள்ளவங்க பக்குவமாக நடந்துக்கிட்டு  நல்ல பெயர் எடுத்துடுவீங்க. டோன்ட் ஒர்ரி. அடுத்தவங்களுக்காக  ஹெல்ப் செய்வதில் உற்சாகம் உண்டாகும். பர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது  அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கணுங்க. குடும்ப ஹெல்த் பற்றி கவனம்  தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த யுத்தம் நிற்கும். விருந்து நிகழ்ச்சிகள் உற்சாகம் அளிக்கும். உறவினரிடைய புதிய பந்தம் அல்லது சமாதானம் ஏற்பட வாய்ப்புண்டு.  எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைந்தாலும் வெற்றி நிச்சயம்.

கடகம்

இந்த வாரம் குடும்பத்துல உங்களோட  வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. பயணம் செய்யும் போது கவனம் தேவைங்க. சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபட்டு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. மாணவங்க படிப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக  ஈடுபடுவீங்க. திருப்தியும் உற்சாகமும் மனசுல இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இத்தனை காலமாய் ஆரோக்கியத்துல இருந்துகிட்டிருந்த பிரச்னைங்க மெல்ல  மெல்ல டாட்டா சொல்வதால தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

சிம்மம்

மத்தவங்களுடைய விவகாரங்களில் தலையிடுவதைக் கொஞ்சம் தவிர்க்கப்பாருங்களேன். அவங்க உங்க முகத்துக்கு நேர வேற மாதிரியும் பிற்பாடு வேற மாதிரியும் பேசுவாங்க. நல்ல வேளையா பல காலமா லைஃப் பார்ட்னர்கூடவும் பிசினஸ் பார்ட்னர் கூடவும் இருந்து வந்த பிராப்ளம்ஸ் முற்றுப் புள்ளி வெச்சுக்கும். ஸோ… ஆபீசிலும் வீட்டிலும் நிம்மதியோட வளைய வருவீங்க. அலுவலகவாசிங்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீங்க. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினருடன் கோபப்படாமல் நிதானமாகப்பேசி அனுசரிச்சுப் போறது நல்லது. ஏன் தெரியுமாங்க? அவங்க பக்கம்தான் நியாயம் இருக்கும். நிதானமா யோசிச்ச பிறகு உங்களுக்கு உண்மை புரியும். அப்புறம் போய் ஸாரி கேட்கறதைவிட முதல்லயே அனுசரிச்சுடலாம் இல்லையா? சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வாகனத்தை கவனமாக ஓட்டுங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிகக் கவனமா இருங்க

கன்னி

தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் ஒரு வழியா முடிஞ்சுடும்.  பயணத்திட்டங்களைத் தள்ளிப்போடுவீங்க. அது நல்லதுக்குதாங்க. அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களோட பொருட்களையெல்லாம் ரொம்பவே கவனமாப் பார்த்துக்குங்க.  மத்தவங்க ஒப்படைச்ச வேலைங்களைப் பொறுப்போட செய்து முடிப்பீங்க. மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மத்தவங்ககிட்ட அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினை வராமல் எஸ்ஸாயிடுவீங்க. சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பணத்தேவை உண்டாகலாம். யாரையும் கேட்காமல் நீங்களே குடும்பத்துக்குள்ள மேனேஜ் செய்துடுவீங்க. அடுத்தவங்களுக்காக உதவி செய்வது மற்றும்  அவங்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கேர்ஃபுல்லா இருங்க

சந்திராஷ்டமம்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிகக் கவனமா இருங்க

துலாம்

லேடீஸ், தங்களுக்கிட்ட வேலைகளைத் திறம்படச் செய்து முடித்து நல்ல பெயரும் பாராட்டும் பெறுவீங்க. தொலை தூர தகவல்கள் நிம்மதியளிக்கும்.  பயணம் செல்லும் தேதி கன்ஃபர்ம் ஆகும். ஸ்டூடன்ட்ஸ்க்கு மேல்படிப்பு பற்றி உறுதியாக முடிவாகும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினர் தடைநீங்கிப் புதிய வாய்ப்புகளைப் பெறுவீங்க. உறவினரிடம் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். பொறுப்பு அதிகரிக்கும். சம்பளம் உயர்ந்து சந்தோஷம் தரும்.  கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரிச்சுப் போறதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. விருப்பத்திற்கு மாறா எதுவும் நடந்துடாதுங்க. பயப்படாதீங்க.  பகைவர்களை வென்று நிம்மதி பெறுவீங்க.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் அதிகக் கவனமா இருங்க

விருச்சிகம்

எதிர்ப்புகள் அகலும். பணவரவு ஓரளவுதான் திருப்திகரமா இருக்கும். சிறிய பயணங்கள் ஓரளவு சாதகமான பலன் தரலாம். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களோட  பேச்சை அல்லது அட்வைஸை மத்தவங்க பின்பற்றி நடந்து வெற்றியடைவாங்க. நன்றியும் சொல்வாங்க. எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். ஸோ.. நிதானப்போக்கு பற்றிக் கவலை வேணாம். குழந்தைங்க பற்றி இருந்து வந்த டென்ஷன்ஸ் முடிவுக்கு வரும். நண்பர்கள் யார் எதிரிங்க யார்னு கொஞ்சம் கவனமா இருங்க. எதிர்பார்த்த லாபம் ஓரளவே இருக்கும். தொழில் தொடர்பான செலவும் கூடும். யாரிடமுமே வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். அனைத்துத்துறையினருக்கும், சென்ற வாரத்தைவிடவும் சிறப்பான வாரமா இருக்கும்.

தனுசு

இந்த வாரம் நல்ல காரணம் ஒன்றிற்காக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பிசினஸ் செய்யறவங்க சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கேர்ஃபுல்லா இருங்க. உத்யோகத்துல இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தாமதமாகிக்கிட்டு வந்த மற்றும் தட்டிப்போயிக்கிட்டிருந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். துடிப்பும் தவிப்பும் இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான்.  பல்லைக் கடிச்சுக்கிட்டு கொஞ்சம் பொறுமையா இருந்துடுங்க. ப்ளீஸ். குடும்பத்துல இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் எதிர்காலம் பற்றி, மனசுல கற்பனையான குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்துக்கிட்டிருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைங்க உங்களோட  பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

மகரம்

சமூகத்தில் உங்க  அந்தஸ்து உயரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். தந்தை வழியில் நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். அலுவலகத்தில் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம்  உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம்  வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அலுவலகவாசிகள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பிரச்சினையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்துல வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், பிசினஸ் சீராக நடக்கும். தடைகளும் தாமதங்களும் தவிர்க்க முடியாதவை. பிரார்த்தனைகள் வீண் போகாது. நிம்மதி உத்தரவாதம்.

கும்பம்

ஆபீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தருமுங்க. பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்துல உள்ளவங்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயார் அல்லது சகோதரிகள் பற்றிய டென்ஷன்கள் மெல்லத் தீர ஆரம்பிக்கும். பணம் பற்றிய பிரச்சனையோ அல்லது கவலையோ பெரிதாகாதுங்க. நிறையப் பணம் இருக்கும். அதை வெச்சுக் காப்பாத்தறதில்தான் உங்க திறமை இருக்கு. குழந்தைங்களால ஏற்பட்ட டென்ஷனை மனசுல வெச்சுக் கவலைப் பட வேண்டாம். குடும்பத்தில உள்ளவங்களுக்கு அதிகப்படி வருமானம் வரும். கணவன், மனைவிக்கிடையே நட்புணர்வு மிக்க உறவு  காணப்படும்.  மகன் அல்லது மகளின் குடும்ப எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீங்க. உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும்

மீனம்

மனசுல எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீங்க. ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். திட்டமிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் அல்லது உத்யோகம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். இட்ஸ் ஓகே. அலைச்சலுக்கு ஏற்ற லாபமும் நன்மையும் உண்டுங்க. சந்தோஷமான அல்லது உற்சாகமிக்க அலைச்சல் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீங்க. அடுத்தவங்களோட செயல்களுக்குப் பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக ஆபீசில் நீங்க உண்டு, உங்க வேலை உண்டுன்னு இருங்க. எந்த ஒரு காரியத்திலும் வேகம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.