மேஷம்

அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நல்ல முடிவுகள் வருமுங்க. எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீங்க. சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. இந்த வாரம் தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை தீரும்படியான நிகழ்வு நிம்மதி தரும். ராத்திரில நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம்/ சாப்பிடவும் தூங்கவும் நேரமின்றி உழைத்தாலும் அதற்கேற்ற இன்கம் உண்டுங்க. ஹெல்த்தில் கவனம் தேவை. வியாபாரத்துல  பிசினஸ் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் தரும். பிகாஸ் பிஸினஸ்ல  ஈடுபட்டு இருக்கறவங்க எப்போதும் பிசியாக காணப்படுவாங்க. செலவுகள் கூடும்.

ரிஷபம்

குடும்பத்துல இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்துல விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆபீசில் வேலை பாக்கறவங்களுக்கு நல்ல நியூஸ் உண்டுங்க. ஒங்களோட பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பாங்க. அதிகாரிகளை அணுகும்போது நீங்க சர்பிரைஸ் ஆகும் வகைல அவங்க ஆதரவு தருவாங்க.

மிதுனம்

இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். பிஸினஸ்ல  ஈடுபட்டு இருக்கறவங்க தங்கள்  பிசினஸ் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டுல சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பொருளாதார நிலை சூப்பரா இருக்கும். கலைத்துறைல உங்களுக்கு இன்டரெஸ்ட் வரும்.

கடகம்

மத்தவங்களோட கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களைச் சொல்லாம இந்த வாரம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. தூரதேச பயணங்கள் ஏற்படலாம். வியாபாரத்துல,  பிசினஸ் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஸ்டூடன்ட்ஸ்க்கு முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருக்கறவங்க கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்துல மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். ப்ளீஸ்.. கொஞ்சம் அனுசரிச்சுக்கிட்டுப் போயிடுங்களேன்.

சிம்மம்

உணர்ச்சிவசப்படாமல் எதையும் நல்லா சிந்திச்சு செயல்படுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இந்த வாரம் மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிஸினஸ்ல  நீங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்துல இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிப் போயிடறது நல்லதுங்க. உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. உங்களோட வழக்கமான ஸ்பீட் குறையாமல் சாதனைங்க செய்வீங்க.

கன்னி

பொதுவா ஆபீசில், குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் ஸ்லைட்டா டிலே ஏற்படும். கூடுதல் நன்மை ஏற்படணும்னு நினைச்சீங்கள்ளா அதிக ஹார்ட் ஒர்க் செய்தால் போதும். வெரி சிம்ப்பிள்.  இந்த வாரம் மனதில் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பிஸினஸ்ல  நீங்க எடுக்கும் முயற்சிகள் மோஸ்ட்லி சக்ஸஸ்தாங்க. உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அதனால் என்னங்க. அதுக்குறிய பெனிஃபிட்ஸ்ஸும் இருக்குமே. அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்துல இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது செம்ம ஜாலியாய்க் கலகலப்பா இருப்பீங்க. தட்ஸ் நைஸ்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 27 முதல் ஜனவரி 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் அதிக அக்கறை தேவைங்க.

துலாம்

இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாய் நடந்துக்கிட்டா வெற்றிதாங்க. பணவரத்து எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களிடம் ஒங்களோட கருத்துக்களை கூறும்போது அவங்க தவறாக அதை புரிந்து கொள்ளலாம். பிஸினஸ்ல  இருந்த போட்டி அகலும். கூட்டு வியாபாரத்துல,  பிசினஸ் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருக்கறவங்க வீண் அலைச்சலை சந்திக்க நேரும். மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. குடும்பத்துல இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் அதிக அக்கறை தேவைங்க.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளைப் பற்றி ஒர்ரி பண்ணிக்காம எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீங்க. உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீங்க. எண்ணப்படி எல்லாம் நடக்கும். வியாபாரத்துல, வியாபாரத்துல இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்துல இருந்த மனவருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். வீட்டுல சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். லேடீஸ் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீங்க. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் அதிக அக்கறை தேவைங்க.

தனுசு

எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீங்க. இந்த வாரம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத்தேவை உண்டாகும். எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக சமாளிப்பீங்க.  இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். பிஸினஸ்ல  இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது ரொம்பவும் கேர்ஃபுல்னஸ்  தேவைங்க.

மகரம்

உத்தியோகத்தில் இருக்கறவங்க வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்துல இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பெண்களுக்கு சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். வியாபாரத்துல, வியாபாரத்துல ஈடுபட்டு இருக்கறவங்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

கும்பம்

உத்தியோகத்தில் இருக்கறவங்க முன்னேற்றம் காண்பாங்க. மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்துல குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்துல இருந்து வந்த இறுக்க நிலை மாறும். இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் தப்பிக்க உங்களின் நேர்மையான செயல்பாடுகள் உதவும். உத்தியோகத்தில் இருக்கறவங்க பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். பிஸினஸ்ல  ஈடுபட்டு இருக்கறவங்க வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும்,

மீனம்

இந்த வாரம் அறிவுத்திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீங்க. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம், நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். வியாபாரத்துல  பிசினஸ் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரத்துல விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருக்கறவங்க தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். குடும்பத்துல அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.