மேஷம்

சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வேகம் பிறக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் பிசினஸ் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. ஃபேமிலியில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீங்க. யெஸ். யூ வில் கன்டின்யூ. சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவாங்க. கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். லேடீஸுக்கு பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த மந்த நிலை மாறும்.

 ரிஷபம்

லேடீஸுக்கு பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த மந்த நிலை மாறும். நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லதுங்க. என்றைக்கோ செய்த இன்வெஸ்ட்மென்ட்ஸ் இப்போ லாபம் தரும். பதற்றம் அவசரம் இன்றிச் செயல்கள் செய்வது நன்மை தரும். பி கேர்ஃபுல் பா.  சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் எடுக்காதீங்க. பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாகச் செய்து முடிப்பீங்க ஃபேமிலியில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மிதுனம்

தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீங்க. சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்களால் மத்தவங்க மனசுல இடம் பிடிப்பீங்க. மாணவர்கள் பாடத்திலும் பணியாளர்கள் பணியிலும் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். இருந்தாலும் எடுத்த பணியை முடிச்சுடுவீங்கப்பா. உத்தியோகம் காரணமாக வெளியில் சுற்ற நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. ஃபேமிலியில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீங்க. பிள்ளைகள் நீங்கசொல்வதைக் கேட்டு நடப்பது மனதிருப்தியைத் தரும். உறவினர் மற்றும் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீங்க. யூ வில் கெட் குட் நேம்.

கடகம்

பிள்ளைங்களை மற்றவங்க பாராட்டுவதால் பெருமை உண்டாகும். திடீர் குட் நியூஸ் வருவதால், கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். ஃபேமிலியில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். லேடீஸுக்கு வீண் செலவு குறையும். கலைத்துறையினருக்கு திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் காரணமா நல்ல ரிஸல்ட் கிடைக்கும். ஃபேமிலியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். குடும்பத்துல இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.

சிம்மம்

ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீங்க. செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில், பிசினஸ் தொடர்பா கொஞ்சம்  அலைச்சல்களும் ஏற்படும். சொல்லிலும், செயலிலும், மற்றவர்களை நம்புவதிலும் கேர்ஃபுல்லா இருப்பது அவசியம். டோன்ட் பிலீவ். சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் எடுக்காதீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லதுங்க. காரியத் தடைகள் விலகும். டோட்டலி. கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இணக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீங்க.

கன்னி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். ஆனாலும் அதனால் பொறுப்பும் அதிகமாகும். பல நாட்கள் வராமல் இருந்த பணம் வந்து சேரும். ஃபேமிலியில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும்.  குழந்தைங்கபற்றிய கவலை உண்டாகும். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். லேடீஸுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பாங்க. தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் பிசினஸ் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்து முடிப்பாங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 23 முதல் மார்ச் 25 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

துலாம்

கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணத்தேவை உண்டாகலாம். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் வேகம் காணப்படும். இந்த வாரம் செலவு அதிகரிக்கும். நன்மைகள் ஏற்படும். நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். மத்தவங்களோட செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லதுங்க. பணம் கொடுக்கல்வாங்கலில் கவனமா இருங்கப்பா. தொழில், பிசினஸ் மூலம் லாபம் அதிகம் வரும். யெஸ். யூ வில் கெட் மோர் பிராஃபிட். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். குட் லக். இந்த வாரம் எந்த காரியத்தை செய்தாலும் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சினைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 25 முதல் மார்ச் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி, பிடிப்பு உண்டாகும். வாரக்கடைசியில் எதிர்பார்த்த குட் நியூஸ் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் பிசினஸ் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு, வீண் அலைச்சல் வார ஆரம்பத்தில் அதிகரித்தாலும் போகப்போகச் சரியாகும். ஸ்டூடன்ட்ஸ்க்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீங்க. இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.. கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

லேடீஸுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ராசியைச் சேர்ந்த அனைவருக்குமே நல்ல மாற்றங்கள் வந்து சேரும். யெஸ். வெரி குட் சேஞ்சஸ். தொழில் பிசினஸில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்யும்படி இருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீங்க. குடும்பத்துல அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வார்த்தைகளை கையாளும் போது கவனம் தேவை.

மகரம்

ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீங்க. இந்த வாரம் எதிலும் மிகவும் கேர்ஃபுல்லா ஈடுபடுவது நல்லதுங்க . பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லதுங்க.  தொழில் பிசினஸ் சுமாராக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். டோன்ட் ஒர்ரி. யூ வில் சால்வ் இட்.  லேடீஸுக்கு மனக்குழப்பம் தீரும். கலைத்துறையினருக்கு தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீங்க. அரசியல்துறை யினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.

கும்பம்

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் பிசினஸ் தொடர்பான செலவுகள் கூடும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். உங்க செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். யெஸ். யூ வில் பி ஹாப்பி. இந்த வாரம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லதுங்க. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் பிசினஸில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீங்க. அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம்.

மீனம்

எல்லா காரியங்களிலும் அதிக முயற்சி மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. கலைத்துறையினருக்கு பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான சிக்கல்கள் நீங்கும். ஃபேமிலியில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். ஆல் பிராப்ளம்ஸ் வில் பி சால்வ்ட். ஆனாலும் சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் வேணாமே. வாக்கு வன்மையால் தொழில், பிசினஸ் நல்லா நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க.