மேஷம்
இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்த வுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே. நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு. கொஞ்சம் தயாரா இருங்க. ஆனாலும் அந்தச் செலவுகளால் பிற்காலத்தில் பெரிய நன்மைகள் உண்டு. சுருங்கச் சொல்லணும்னா, அவற்றை நீங்க செலவுகளாய் நினைக்காமல் முதலீடா நினைச்சுக்குங்க. அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் நன்மைகள் எதிர்பார்த்திருந்தா அது இப்போ முயற்சியே செய்யாமல் உங்களுக்குக் கிடைக்குங்க. உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீங்க. சூப்பர்.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 27 வரை
ரிஷபம்
அடி சக்கை. என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ பலன் கொடுக்கும். வரவே வராது என்று கணக்கில் சிவப்புக் கோடு போட்டு முடித்த விஷயங்கள் இப்போது வருமானமும் லாபமும் கொடுக்கும், வாராக்கடன்கள் வசூலாகும். நீங்க கலைத்துறையில் இருப்பவரா? சரி அப்படியானால், ஜெயிச்சு மேலே வந்து முன்னேறிடுவீங்க. குழந்தைங்க சின்ன சின்ன ஏமாற்றங்கள் தரக்கூடும். அவங்களுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் அவங்களுக்கு உங் களால கஷ்டம் வந்துடக்கூடாதில்லையா. அதை கவனமாப் பார்த்துக்குங்க. கொஞ்ச நாட்களில் அவங்களை நீங்க பெருமைப்படுத்தப்போறீங்க. புதிய பாதை புலப்படும் . இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். அரை குறையாக நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடரும் வாய்ப்பு உண்டு. குட் லக்.
மிதுனம்
சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அவங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை விளைஞ்சுதேன்னு பொறாமை கொள்ளாமல் சந்தோஷம் கொள்ளுங்க. இப்போ இவங்களுக்கு ஏற்பட்ட மாதிரி உங்களுக்கும் அரசாங்க நன்மை கிடைக்கப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. திடீர் உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, அதுவும் வெளிநாட்டில் கிடைக்கலாம். பொறுமையோடு செயல்பட்டுப் பெருமை காண வேண்டிய வாரம். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்குமுங்க. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீங்க. வரவும்-செலவும் சமமாகும். டோன்ட் ஒர்ரி.
கடகம்
குழந்தைகள் மேடை ஏறிக் கைதட்டலும் பரிசும் வாங்குவாங்க. சகோதர சகோதரிகளுடன் சற்று முகத்தைத் தூக்கி வெச்சுப்பீங்க. புதுசா வாகனம் வாங்கிக் குடும்பத்துடன் சந்தோஷமா ஊர்சுற்றுவீங்க. திடீர்னு புது வேலை கிடைச்சு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சம்பளம் கூட நீங்க நினைச்சதைவிடக் கூடவே இருக்கும். கணவருக்கு/ மனைவிக்கு திடீரென்று பதவியோ சம்பளமோ உயரும். யார் கண்டது. இரண்டுமே உயரக்கூடும். தந்தைக்கு சிறு உபாதைகள் வந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். அம்மாவுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்குமுங்க. குடும்பத்தில் சந்தோஷமான விரிவாக்கம் இருக்கும். ஹாப்பி?
சிம்மம்
குடும்பத்தினரின் புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படுவது போலவே ..அலுவலகத்தில் நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க. அதனால் உங்களுக்கும் பாராட்டும், புகழும் ஏற்படும். நண்பர்கள் நல்லவங்களா அமைவது வரம். அந்த வரம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. நம்புங்க. அவங்க உங்களுக்கு நன்மைதான் செய்வாங்க. ஆரோக்யத்தை மிக முக்கியமாகப் பார்த்துக்குங்க. சின்னதாகக் காலில் வலி வீக்கம் இருந்தாலோ அடி பட்டாலோ முதல் உதவி சிகிச்சை செய்ய டாக்டரிடம் போங்க. நீங்களே செல்ஃபி வைத்தியமெல்லாம் செய்துக்க வேண்டாங்க. வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் வாரம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீங்க. திடீர் லாபம் தித்திக்க வைக்கும். ஆல் த பெஸ்ட்.
கன்னி
தைரியமும் வீரமும் அதிகரித்து மனதில் இருந்ததை வாய்விட்டுக் கேட்பீங்க. இன்னும் கேட்க வில்லையா? எனில் ஒரு சின்ன அட்வைஸ். கேட்பதைச் சுள்ளென்று கேட்காதீர்கள். குரலில் பணிவு இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்களேன். வாக்குவாதத்தைத் தவிர்க்கப் பாருங்க. நீங்க விரும்பியது கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. நல்ல நல்ல செலவுகளும் வரும். அதை மிஞ்சும்படியான வருமானமும் வரும். தந்தைக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்குமுங்க.அவர் அலுவலகத்தில் அவருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகும். தும்பிக்கையான் மீது நம்பிக்கை செலுத்துங்க.. தேகநலனில் தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீங்க. மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். வெரி குட்.
துலாம்
வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லது. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால் அதன் நற்பலன் உங்களுக்கும் உண்டு என்பதை நினைவுல வெச்சுக்குங்க. கட்டாயமா யாருக்கும் சாபம் இடவே கூடாது. நல்ல வார்த்தைகள் மட்டுமே வாயில் வருமாறு பார்த்துக்குங்க. உங்களுக்கு உங்க மேலேயே நம்பிக்கை இல்லைன்னா என்ன செய்யறது? தன்னம்பிக்கை உங்களுக்கு எப்பவும் நல்லாத்தான் இருக்கும், சமீபத்தில்தான் அது மிஸ் ஆயிடுச்சுங்க. வீண் விரயங்கள் ஏற்படும் வாரம். விடிகாலையிலேயே மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆதரவு குறையும். தொழில் உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை. இனம்புரியாத கவலை மேலோங்கும். அது சும்மா இமாஜினேஷன்தாங்க.
விருச்சிகம்
பூனை மாதிரிப் பதுங்கியிருந்த நீங்க, நல்ல காரணங்களுக்குப் புலி மாதிரி பாய்வீங்க. குட் லக். நியாயத்துக்கும் நேர்மைக்கும் புறம்பான காரிங்களைச் செய்யும்படி உங்களை யார் வற்புறுத்தினாலும் பெரிய எழுத்தில் “நோ” சொல்லிடுங்க. அது பிறகு உங்களை விடாமல் பிடிச்சுக்கிட்டா எதிர்காலம் என்னங்க ஆறது? மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தில் உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யும். எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது முன் வரை இருந்து வந்த மந்த நிலையும், நிதானப்போக்கும் இருக்காது. பயமோ டென்ஷனோ வேண்டாங்க. காரிய வெற்றிக்கு கணபதியை வழிபட வேண்டிய வாரம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். கேன் டூ இட்.
தனுசு
நண்பர்கள் அபாரமாக உதவுவாங்க. குறிப்பாக எதிர்பாலினத்தினர் உங்களுக்காக மனப்பூர்வ மாக நன்மைகள் செய்வாங்க. அதை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்க. குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கே அரசாங்கத்தால் லாபம் உண்டு. பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் அது கிடைத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பாங்க. தந்தைக்கு ஏற்பட்டிருப்பதெல்லாம் தற்காலிகமான பிரச்சினை கள்தான். பெரிதாக எண்ணி பயப்படாதீங்க. வாக்கினால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. எதிரிகள் உதிரியாகும் வாரம் எந்த காரியத்தையும், எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீங்க. வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். வெரி குட்.
மகரம்
மருத்துவத் துறையிலும் கட்டத்துறையிலும் உள்ளவங்களுக்கு நன்மை உண்டு. குழந்தைங்க உங்களைப் பெருமிதம் அடையச் செய்யுமளவு சாதனைகள் செய்து பாராட்டு வாங்குவாங்க. தயவு செய்து இப்போதைக்கு வேறு வேலை மாறுவது பற்றி நினைச்சும் பார்க்காதீங்க. பல காலமாகத் திட்டமிட்டிருந்த கோயில் குளம் / வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குலதெய்வப் பயணங்கள் தடைப்பட்டாலோ, தாமதமானாலோ கவலை வேண்டாம். இந்தத் தடை கூடிய விரைவில் நீங்கும். நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு வருவீங்க. அலுவலகத்தில் பெரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாதுங்க. நத்தை அல்லது ஆமையின் வேகத்தில்தான் எல்லாமே நடக்கும். பரவாயில்லை. விடுங்க. கூடிய சீக்கிரத்தில் எல்லாமே தானாய்ச் சரியாகும். எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் வாரம். சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீங்க. மனக்குழப்பம் நீங்கும். தாங்க் காட்.
கும்பம்
இத்தனை காலம் ஓடி ஒளிஞ்சுபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்த தன்னம்பிக்கை ஒரு வழியா உங்க கிட்ட வந்து ஒட்டிக்கும். பேச்சில் ஒரு விதக் கவர்ச்சி அம்சம் இருப்பதால் உங்களை எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்கிக் கைதட்டல் பெறுவீங்க. குடும்பத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷமும் நிம்மதியும் , அமைதியான உறக்கமும் நல்ல முறையில் உங்களை வந்தடையும். சண்டை சச்சரவுகள் தீரும். சிநேகிதர்களிடம் சற்று முறைத்துக் கொள்வீங்க. என்ன செய்ய, அவர்கள் செய்வதும் நியாயம் அல்லவே. டோன்ட் ஒர்ரி. சமாதானமாயிடுவீங்க. யோசித்துச் செயல்பட வேண்டிய வாரம். வரவு வருவதற்கு முன்னதாகவே செலவு காத்திருக்கும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும். மனக்கசப்பு தரும் தகவல் உண்டு. டோன்ட் ஒர்ரி.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23 வரை
மீனம்
செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். அதுக்காக ஓவரா அலட்ட வேண்டாம். அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தயவு செய்து பணிஞ்சு போங்களேன். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? அதை அவருக்குப் புரிய வைங்க. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுவதெல்லாம் சகஜம். அதைப் பெரிதாக நினைத்துத் தூக்கத்தையும் நிம்மதியையும் இழக்காதீங்கப்பா. முரட்டுத்தனம் , பிடிவாதம் வாக்குவாதம் என்று பயிற்சி செய்யாதீங்க. மென்மையும் கருணையும் இருந்தால்தான் வீடும் நாடும் உங்களை விரும்பும் என்பதை நினைவில் கொள்ளுங்க. வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். நட்பு வட்டம் விரிவடையும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பொதுநல ஈடுபாட்டால் புகழ் கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம். ஆல் த பெஸ்ட்.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 25 வரை