மேஷம்
கடுமையான அலைச்சலுக்குப் பிறகு காரியங்கள் கைகூடும். செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கெடைக்கும். விரோதிகள் வீழ்ச்சி அடைவாங்க. தேவையில்லாத மனக்குழப்பம் நீங்கி நெடுநாட்கள் விரும்பிய நிம்மதியை அடைவீங்க. இப்போதைக்குக் கொஞ்ச நாட்களுக்குப் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். மேலதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளைப் பார்த்து சந்தோஷப் படுவாங்க. கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும். வியாபாரம் துரிதமாக நடக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் அனுசரணையோடு நடந்து கொள்வாங்க. வேளா வேளைக்கு சாப்பிட முடியாத அளவிற்கு அலைச்சல் அதிகரிக்கும். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வாங்க. வெளிநாட்டு நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பீங்க.
ரிஷபம்
கடுமையாக உழைப்பீங்க. அதற்கு தகுந்த பலனையும் பெறுவீங்க. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீங்க. அனாவசியமான கோபம் காரணமாக நல்ல மனிதர்களின் நட்பைப் பாழாக்காதபடி கவனத்துடன் கடைசி நிமிடத்தில் கட்டுப்படுத்திக்கொள்வீங்க. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீங்க. வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. குடும்பச் சிக்கல் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் குழந்தைப் பாக்கியம் சித்திக்கும். அரசுப் பணியாளர்கள் கடுமையாக உழைத்து நல்லபெயர் எடுப்பீங்க. தங்க நகைகள் வாங்குவீங்க. கடன் தொல்லைகள் கைவிட்டுப் போகும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். எந்தக் காரியத்தையும் முன் ஜாக்கிரதையாச் செய்து நலம் காண்பீங்க. மனைவி மக்கள் ஒங்களோட சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பாங்க.
மிதுனம்
நீங்க ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. எதிர்பாலினத்தினரிடம் சற்று இடைவெளி விட்டு எச்சரிக்கையுடன் பழகினால் பிரச்னை இல்லாமல் தப்பலாம். இந்த வாரத்தில் ஒரு முறையேனும் வெளியூர்ப் பயணங்கள் செல்வீங்க. வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். ஆடம்பர விருந்துகளுக்கு அதிகம் செலவு செய்வீங்க. பெற்றோர்களுக்குச் சிறிய அளவில் மருத்துவச் செலவு செய்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீங்க. கடன் தொல்லைகள் மனதை வாட்டிக்கொண்டிருந்த நிலை மாறி மெல்ல மெல்ல அதை அடைத்து நிம்மதி காண்பீங்க. வீண் அலைச்சலால் உடல் சோர்வு உண்டானாலும் மனதில் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும் அளவுக்கு வெற்றி ஏற்பட்டிருக்கும். சிக்கனமாகச் செலவு செய்து பணத்தட்டுப்பாட்டிலிருந்து மீளுவீங்க. வெளிநாட்டிலிருந்து நன்மையும் லாபமும் வர வாய்ப்புள்ளது.
கடகம்
மனைவி மக்களால் மனக் கிலேசமடைந்த நிலைமை மாறி நிம்மதி வரும். நண்பர்களும், உறவினர்களும் உங்களை அணுகி ஆலோசனை கேட்பாங்க. நீங்க தரும் ஆலோசனைகளால் பலனடைவாங்க. அதற்காகப் பெரிய அளவில் நன்றிபாராட்டுவாங்க என்று எதிர்பார்க்க வேண்டாம். வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். ஆரோக்யத்தில் சிறு இடர்ப்பாடு ஏற்பட்டாலும் உடனே மருத்துவ ஆலோசனை பெற்றால் பிரச்னை ஏதும் வராது. இந்த வாரத்தில் பொருள் வரவு அதிகமாக இருக்கும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பாங்க. தொழிலை நேர்மையாக நடத்துவீங்க. மனசுல தீய எண்ணங்கள் தோன்றாமல் கவனமாப் பார்த்துக்குங்க. புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன உறவை ஒட்ட வைப்பீங்க. தொழிலுக்கு இடையூறாக இருந்த எதிர்ப்புகளை முறியடிப்பீங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
சிம்மம்
எதிர்பாராத பண வரவு கெடைக்கும். நண்பர்களின் துன்பத்தைப் போக்க பொருள் உதவி செய்வீங்க. அரசாங்க அதிகாரிகளால் நன்மை ஏற்படும். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் காத்துக்கொள்வீங்க. செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்குவீங்க. தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேறி நடக்கும் ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக லாபத்தைக் கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். இழுபறியாக இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீங்க. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். செவ்வாய் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஒங்களோட தகுதியைப் புதிதாகப் புரிந்து கொண்ட ஒருவர் உங்களைப் பற்றி பிரமிப்புடன் பேசிய விஷயம் உங்களின் காதுfளை எட்டி சந்தோஷம் தரும். தொழிலில் திருப்பமான பலனைச் சந்திப்பீங்க. வேலை மாற்றமும் பதவி உயர்வும் கெடைக்கும்.
கன்னி
பல காலமாக சுமாராகப் போய்க்கிட்டிருந்த வியாபாரம் விருத்தியடையும். எதிர்பாராத பண வரவு கெடைக்கும். பிடிவாதமாக ஒரு விஷயத்துல இறங்குவீங்க. அதில் வெற்றியும் பெற்று மற்றவர்களுக்கு வியப்பும் பிரமிப்பும் அளிப்பீங்க. எதிரிகள் செய்யும் கெடுதல் உங்களுக்கு நன்மையாக முடியும். வெளியூர் பயணங்களால் நீங்க எதிர்பார்த்த நன்மை ஏற்படும். பந்தய வியாபாரத்தில் இறங்காதீர்கள். ஆன்லைன் சூதாட்டம் ஆகவே ஆகாது. தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அலுவலகரீதியாக வெளியூர்ப் பயணம் செல்வீங்க. அரசாங்க வேலைகள் தாமதமாக நடக்கும். சின்னக் குழந்தை தவழ்ந்து செல்வதை போல் காரியங்கள் சற்று தாமதமாக நடக்கும். குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் உண்டாகும். எலியும் பூனையும் போல் கணவன், மனைவி இருந்த நிலைமை மாறி நெருக்கம் உண்டாகும்.
துலாம்
தொழில்துறைளில் மந்த நிலை மாறிச் சற்றே சுறுசுறுப்பாக நடக்கும். மேலதிகாரிகள் குடைச்சல் கொடுப்பாங்க. அதனால் என்னங்க. நீங்க சமாளிச்சுடுவீங்க. சொத்து விற்பதாக இருந்தால் தள்ளிப் போடுங்கள். நம்பிக்கையுடன் தொடங்கும் காரியத்தில் எதிர்பார்ப்புக்கேற்ற வெற்றி ஏற்படும். ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள். கமிஷன் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவீங்க. அது தேவையில்லை. விரைவில் நல்ல விஷயங்கள் வரவிருக்கின்றன. வரவுக்கு மேல் செலவுகள் வந்து வாட்டும். எனினும் அவை எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் செலவுகள்தான். அவற்றால் உங்களுக்கோ உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ, உங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ நன்மையும் மகிழ்ச்சியும் ஏற்படுவது உத்தரவாதம். ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுத்துவீங்க. ஒங்களோட வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் பொறாமைப்படறதைத் தவிர்க்க முடியாது. விட்ருங்க.
விருச்சிகம்
பணவிரயம் குறைந்து சேமிப்பு கூடும். முன்பு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்பட்டிருந்த நிலைமை மாறி இப்போதுதான் உங்களுடைய அருமையைப் பிறர் புரிந்த கொள்ள ஆரம்பித்திருப்பாங்க. தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வாங்க. உறவினர்களிடம் புரிதல் உண்டாகும். அவர்களுக்கு நீங்க உதவி செய்து உங்களை நிரூபிப்பதால் அவங்க கரம் நீட்டி முன்வருவாங்க. நீண்டகாலமாக வாட்டிய நோய் பிரச்சனை தீரும். எதிரிகளின் சூழ்ச்சி மறையும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சியடைவீங்க. ஆபீஸ்ல கொடுத்த வேலையை அக்கறையுடன் பார்ப்பீங்க. பாஸ் மகிழ்வார். உணவுப்பொருள் வியாபாரத்துல ஏற்றம் இறக்கமாக இருக்கும். ஆனா மோசமான பின்னடைவு இருக்காதுங்க. புதுசா எந்த இன்வெஸ்ட்மென்ட்டும் இப்போதைக்கு வேணாங்க. குடும்பத்துல மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள் உறவினர்கள் அதிகாரிகள் ஆதரவு எப்பவுமே உண்டு.
தனுசு
வெளியூர் பயணங்கள் நல்ல பலனைத் தரும். உறவினர் வகையில் செலவு வரலாம். நண்பர்கள் உதவியாக இருப்பாங்க. எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் புதிய ஜீவன் உருவாகும். மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஆடல் பாடல் கேளிக்கை நிகழ்ச்சியில் மனம் ஈடுபடும். வழக்குகளால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் முழு முயற்சியுடன் இறங்குவீங்க. இந்த வாரம் எந்தக் காரியத்தையும் எச்சரிக்கையுடன் செய்வீங்க என்பதால் தொல்லை ஏதும் வராது. வாகனங்களில் போகும்போது கவனம் சிதறக் கூடாது என்பதுல கவனமாய் இருங்க. நீங்க ஆன்லைன்ல ஷாப்பிங் செய்யும்போது பொருள் விரயம் ஏற்படாமல பார்த்துக்குங்க. சின்னதாய் ஒரு மனக்கவலை ஏற்பட்டு அப்புறமாய்ச் சரியாகும்.
மகரம்
தடைப்பட்டு நின்று போன காரியங்கள் இடையூறின்றி கை கூடி வரும். வெளிநாட்டுப் பயணம் நல்ல பலனைக் கொடுக்கும். போட்டி பந்தயங்கள் அமோக வெற்றி தரும். மேல்படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்லலாம். உடல் நிலையில்.. எஸ்பெஷலி மூட்டுகளில் இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த பாதிப்பு மெல்லக் குறையும். தொழில்லயும், உத்யோகத்துலயும் சுமாரா வேண்டா வெறுப்பாகச் செய்யும் காரியங்கள்கூட நல்லபடியா வெற்றி தரும். திருமண ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு விடிவு பிறக்கும். தொழிலில் மாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கெடைக்கும். அலைச்சல் காரணமாக வேளைக்கு உணவு சாப்பிட முடியாது. ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். தொழிலில் அதிக லாபம் கெடைக்கும். சகோதரி வகையில் செலவுகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களை விலக்குவது நல்லது.
சந்திராஷ்டமம் ஜூலை 20 முதல் ஜூலை 22 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.
கும்பம்
வீண்வம்புகள் ஏற்படாமல் பார்த்துக்குங்கப்பா. அதாவது யாரிடம் பேசும்போதும் மௌனம்தான் பெஸ்ட்னு நினைவு வெச்சுக்குங்க. யார்கிட்டயும் யார் பற்றியும் பேசாதீங்க. உயர் அதிகாரிங்ககிட்ட பணிவா நடந்துக்குங்க. துணிச்சலுடன் தொழிலை மேம்படுத்துவீங்க. காதலில் வெற்றி பெறுவீங்க. பொறுமையோட நடந்துக்கிட்டீங்கன்னா பொருள் வரவு அதிகரிக்கும். மனைவி மக்கள் மனசுக்கு இதமா நடந்துக்குவாங்க. வீண் அலைச்சலால் வெளியூர்ப் பயணங்களில் உடல் சோர்வு ஏற்படும். ஆனாலும் இப்போது அலைஞ்ச அலைச்சலுக்கு எதிர்காலத்துல நல்ல பலன் கெடைக்கும்னு புரிஞ்சுக்கிட்டீங்கன்னா அந்த சலிப்பு போயிடும். பிறர் தயவு இல்லாமல் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீங்க. மத்தவங்களுக்கு உதவி செய்வீங்க. எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவாங்க. உடல் ஆரோக்கியத்துல அக்கறையோட இருங்க.
சந்திராஷ்டமம் ஜூலை 22 முதல் ஜூலை 25 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.
மீனம்
பொருள் வரவு தாராளமா இருந்தாலும் பணம் கையில் தங்குவது கொஞ்சம் கஷ்டம். அரசியல் தலைவர்களோட ஆதரவு கெடைக்கும். இந்தக் காலகட்டத்துல நண்பர்களும் உதவி செய்வாங்க. விரோதிகளும் நண்பர்களாக மாறி ஆதரவாக இருப்பாங்க. வேலையில் உற்சாகம் ஏற்படும். வியாபாரிங்களுக்குக் கணிசமான லாபம் கெடைக்கும். உங்க பேச்சில் ரொம்பவே கவனமா இருங்க. இப்போ நீங்க பேசும்பேச்சால எதிர்காலத்துல நன்மைங்க ஏற்படும்னாலும் எதுக்கு வம்பு? தொழில் மிக முன்னேற்றமாக நடக்கும். பெண்களால் பொருள் வரவு உண்டாகும். வீடு வாசல் சொத்து சுகமெல்லாம் ஏற்படும் போட்டியாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பிசினஸ்ஸை நடத்துவீங்க. சாப்பாடு தூக்கம் மாதிரியான அடிப்படை விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கெடைக்கும்.
சந்திராஷ்டமம் ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.