மேஷம்

லோன் போட  இது நேரம் இல்லை. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க. குட்டியூண்டு விஷயங்களைப் பெரிசா எடுத்துக்க வேணாங்க. அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய தொகை பல கால காத்திருப்புக்குப்பிறகு ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு இப்போ உங்களை வந்தடையும். குடும்பத்துல பிரிஞ்சு போனவங்களும் சண்டை போட்டவங்களும் ஒண்ணாச் சேரப்போறாங்க. சின்னச்சின்ன அஜீரணப் பிரச்சினைகளைப் பற்றி ஒரேயடியாய்ப் பயந்து டென்ஷன் ஆகி வெக்காதீங்க. வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் என்றாலும் உறுதியுடனும் கவனமுடனும் செயல்பட்டு அதனை சமாளிச்சு வெற்றி காண்பீங்க.

ரிஷபம்

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சம்பளமும்தான்.  வியாபாரிகள் திட்டமிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவாங்க. விவசாயிகள் வருவாய் உயரக் காண்பார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவாங்க.  கலைத்துறையினர் சகக் கலைஞர்களால் பாராட்டப்படுவாங்க. பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவாங்க. மாணவர்கள் யோகா கற்றுகொள்வாங்க. ‘செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்‘னு ஒரு பெரிய தாளில் ப்ரின்ட் அவுட் எடுத்து வெச்சுக் கண்ணில் தெரியும் இடத்தில பெரிசா மாட்டி வைத்து உற்றுப் பார்த்துக்கிட்டே இருங்க. சில செலவுகள் அத்தியாவசியமாகவும் எதிர்கால நன்மை கருதியும் இருக்கும்தான். இன்வெஸ்ட்கூடச் செய்வீங்க. பாஸ்போர்ட் விசா சம்பந்தமான செலவுகளாகவும் இருக்கும். செகலவுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற லாபங்கள் சற்று நிதானமாகத்தான் வரும், பயம் வேணாம். கட்டாயமாக வரும்.

மிதுனம்

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வாங்க. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீங்க. எதிரிகளை உதிரிகளாக்குவீங்க. புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.

கடகம்

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வாங்க. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீங்க. இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீங்க. பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வாங்க. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சிம்மம்

உங்களுடைய உடல்நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும்.  பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவாங்க.  குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

கன்னி

எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் நிறைவான பலன்கள் உண்டு. முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் முயற்சியில் நன்மை ஏற்படும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்கும். உடன் இருப்போரால் நன்மையும் உதவியும் உண்டு. அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வாங்க.

துலாம்

பொதுச் சேவையில் ஈடுபடுவீங்க. குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீங்க.  எதிர்ப்புகளைப் புரிந்துகொண்டு, வெற்றி பெறுவீங்க. ஏராளமான நண்பர்கள் உங்களுக்குச் சேருவாங்க.  அவங்க கிட்ட சற்றே கவனமுடன் பழகினால் போதும்.  மனசுவிட்டுப் பேசறேன் பேர்வழி என்று சகலத்தையும் கவிழ்த்துக் கொட்டி வைக்காதீங்க. அப்புறம் ஏண்டா சொன்னோம்னு நீங்கதான் ஃபீல் செய்வீங்க.  பல நாளா டென்ஷன் குடுத்துக்கிட்டிருந்த விஷயம் பற்றி நிம்மதியான சொல்யூஷன் கெடைக்கும். அதை உங்க குடும்பத்துல உள்ள ஒருவர் பொறுப்பேற்றுச் செய்து வயிற்றில் பால் வார்ப்பார். வியாபாரிகள் திட்டமிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவாங்க. பாராட்டப்படுவாங்க. பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவாங்க. மாணவர்கள் யோகா கற்றுகொள்வாங்க.

விருச்சிகம்

அடுத்தடுத்து வருமானமும் லாபங்களும் வரும். ரொம்ப காலம் காத்திருந்த தொகைகள் கைக்கு வரும். உங்களுக்குத் திரும்ப வர வேண்டிய அல்லது நீங்க திருப்ப வேண்டிய கடன்கள் கேட்டுக்கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு முடிவுக்கு வரும்.  குழந்தைங்க உங்களை மனம் நோகப் பேசினாலும் சரி.. அவங்க செயல்கள் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினாலும் சரி.. சற்றே பொறுமையை அணிந்து கொள்ள வேண்டும். சரியாகும். சரியாவாங்க.  மம்மி கிட்ட சண்டை போடாதீங்க, நல்ல வேளையாய்க் குடும்பம் ஜாலியா சந்தோஷமா இருக்கும். உங்களோட அணுகுமுறையில கொஞ்சமாச்சும் கவனம் தேவைங்க. ஒங்களுக்குப் பிரியமானவங்க கிட்டப் பேசும் போது கவனமாகப் பேசுங்கப்பா. முக்கியமான முடிவுகளை இந்த வீக் எடுக்கறதை அவாய்ட் செய்ய முடியும்னா பெட்டர். வேற வழியே இல்லைன்னா மட்டுமே செய்ங்க.

தனுசு

சகோதர சகோதரிகளுடன் சந்தோஷமாய்ப் பொழுது போகும். வெளியூர் அல்லது வெளிநாடு அவங்களோட போவீங்க… தனியாவும் போவீங்க…  டாடிக்கு நிறைய நன்மைகளும் சில பிரச்சினைகளும் ஏற்படும். பயப்படாதீங்க. சமாளிச்சுடுவாரு. அபரிமிதமாய் ஒரு கோவம் வருது பாருங்க. அதைக்கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்க. குறிப்பா உங்க மேல பிரியம் வெச்சு உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டாங்களே.. அவங்க/ அவரு பாவம் ..! விட்டுடுங்க. நண்பர்களோ.. உறவினர்களோ.. குடும்பத்தினரோ.. (குறிப்பா மம்மி டாடி) அவங்களோட ஸ்மால் குற்றங்களைப் பெரிதுபடுத்தாதீங்க. பொதுச்சேவையில் ஈடுபடுவீங்க. குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீங்க.  எதிர்ப்புகளைப் புரிந்துகொண்டு, வெற்றி பெறுவீங்க. உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

ஒங்க கிட்ட தேவையே இல்லாத வகைல அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனால் ஒங்களோட தன்னம்பிக்கை குறையும். எதுக்குங்க இப்பிடி இருக்கீங்க.  வெற்றி பெற முடியுங்க. ஜஸ்ட் நீங்க உற்சாகமா  முயற்சி செய்யணும். தட்ஸ் ஆல். விவசாயிகள் வருவாய் உயரக் காண்பார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைச் சிறப்பாக ஆற்றுவாங்க.  யம்மாடியோ.. குடும்பத்துல ஒரு கெட் டு கெதர்.. அல்லது திருமணம் வந்து எல்லாரும் மீட் செய்யப்போறீங்க. நிறையப் பகைகளும் சண்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். யாரையோ வழியனுப்ப ஏர்போர்ட் போவீங்க. உங்களுக்கு ஒரிஜினலாவே ஒரு புத்திசாலித்தனம் உண்டல்லவா? அது இப்போ மேலும் ஷைன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். திடீர்னு வருமானமும் லாபமும் அதிகரிக்கும். பல காலம் வசூலாகாத தொகையெல்லாம் வரும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 20 முதல் 22 வரை

கும்பம்

ரொம்பவும் திடீர் செலவும் உண்டு. கவனமாய்… தயாராய் இருங்க. எது எப்பிடி இருந்தாலும்கூட இந்த வாரம் ஒங்களுக்குச் சிறப்பான வாரம். சில குட் நியூஸ் எல்லாம் காதுல விழும். கலைத்துறைல இன்டரெஸ்ட் வரும். திடீர் சுப நிகழ்ச்சி உங்களை  ஹாப்பியா ஆக்கும்.  டாடிக்கு ஒரு சந்தோஷ நியூஸ் வரும். இதனால வீடே குதூகலமாகும்.  ஒரே சமயத்துல பல விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். சாப்பிட தூங்க நேரம் ஒதுக்கிக்குங்க. சொல்லிட்டேன். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு பக்கமும்..  விசா பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு வேலைகள் இன்னொரு பக்கமும்… கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறுபக்கமும்.. திருமணம் காதல் போன்றவை மற்றொரு பக்கமும்.. உங்களைப் பிடிச்சு இழுக்கும். எந்தப் பக்கம் திரும்புவது என்ற குழப்பமெல்லாம் இல்லாமல் அழகாய்த் திட்டமிட்டு செய்ய உங்களுக்கா சொல்லிக்கொடுக்கணும். ஜமாயுங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 22 முதல் 25 வரை

மீனம்

உங்களோட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கணுங்க. சவாலான சூழ்நிலைகள் காரணமா இந்த வாரம் சமநிலை இழந்துடாதபடி பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கணும். நம்பிக்கையோட செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மனசுல சந்தோஷம் வர்றதுக்கு உங்க செயல்களே காரணமா அமையும். பல வகை செலவுகள் வருதேன்னு டென்ஷன் ஆகாதீங்க. பல செலவுகளை ஜாலியாத்தானே செய்யறீங்க? மேலும் செலவுக்கேத்த வருமானம் வருதில்லையா? பின்ன என்ன? அது மட்டுமா என்ன? திடீர் அதிருஷ்ட வாய்ப்பெல்லாம் வந்து உங்களை மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காட வைக்கும். நிறைய நண்பர்கள் புதுசு புதுசாச் சேருவாங்க. பழைய பகைவர்கள்கூட வெள்ளைக்கொடி காட்டி நட்புக்கரம் நீட்டுவாங்க. சேர்த்துக்குங்க. எனினும் சற்று ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பது நல்லதுங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 25 முதல் 27 வரை