வார ராசிபலன் 21-07-17 முதல் 27-07-17 வரை – வேதா கோபாலன்

Must read

மேஷம்

கேளிக்கை விழா.. விருந்து என்று நேரம் பேவதே தெரியாமல் போகும்… பேச்சில் அட்ராக்ஷன் அதிகரிக்கும். இவங்க இன்னும் கொஞ்சநேரம் பேச மாட்டாங்களான்னு ஏங்குவாங்க. செல்வாக்கு சொல்வாக்கு எல்லாம் மேல் நோக்கிய கிராஃப்தான். சிபாரிசுக்கு உங்களைத்தான் தேடி வருவாங்க. பச்சைப் பசேல்னு சூழல் இருக்கும் ஏரியாவில் வீடு வாங்குவீங்க. நீங்க ஸ்டூடன்ட்டா? வாவ். ஜெயிச்சுட்டீங்க. குழந்தைகள் பற்றிக் கவலைப்படுவதை கொஞ்சம் தள்ளிப்போடுங்க. நல்ல செய்தி உண்டு.

ரிஷபம்

குழந்தைகள் பற்றி எத்தனை நாள்தான் கவலைப்படுவீங்க.. இனிமேல் நிம்மதிதான்..  திருமணம் ஆகாதவங்களுக்குத் திருமணத்துக்கு நாள் குறிச்சிருப்பாங்க.  உங்க லவ் இத்தனை சீக்கிரம் ஜெயிச்சு மேடை ஏறும்னு நீங்களே நினைக்கலைதானே? இனி மேலும் மேலும் நல்ல செய்திகள் காத்துக்கிட்டிருக்குங்க. எல்லாமே ஆர்ட் ஃபிலிம் மாதிரிக் கொஞ்சம் மெதுவாய்த்தான் நகரும், அதுக்காக இவ்ளோவா டென்ஷன் ஆவாங்க? பேச்சில் அமில நெடி அடிக்காமல் பாதுகாத்தால் நல்லது. பிற்காலத்தில் உங்களுக்கே பாதிப்பு வரும்.

மிதுனம்

கார்ட் இருக்குன்னும் வங்கியில் இருப்பு இருக்குன்னும்… யம்மாடீ.. இவ்ளோ செலவு செய்வாங்களோ? அதுவும் ஆடை ஆபரணங்களுக்காக.. சரியாப் போச்சு போங்க..  கொஞ்சம் வங்கியிருப்பை மிச்சம் வெய்ங்கம்மா. அது பாவம் பிழைச்சுப் போகட்டும். இப்ப கொஞ்சநாளா மம்மி சொல்பேச்சைக் கேட்டு உருப்படறீங்க. அவங்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் நன்மை. கை கட்டி உத்யோகமோ காலாட்டி பிசினசோ எதுவானாலும் செழிக்கும். வாகனம் வாங்கவும் வீடு வாங்கவும் நீங்க நினைச்சதைவிடக் கொஞ்சம் அதிகச் செலவாகும்.

கடகம்

வெளிநாடு, வெளியூர்னு நிறையப் பயணங்கள் இருந்துக்கிட்டே இருக்கும்…. நீங்க சினிமாத்துறையா? விளம்பரத் துறையா? சின்னத்திரையா? கொழிக்கப் போறீங்க பாருங்களேன். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். உங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கும். டவுட்டே இல்லை. அதுக்காகக் குரல் உயரணும்னு எந்த சாஸ்த்திரத்திலும் எழுதி வெச்சிருக்கலை. உங்களுக்குத் திருமணத்திற்கு வேளை வந்தாச்சு. ஏகமாய்ச் சிந்தனை செய்து குழம்பி மனசைப் பயத்தில் தள்ளும் வேலையெல்லாம் வேண்டாம். இயல்பா இருங்க.

சிம்மம்

வாகனங்கள் மக்கர் செய்தால் உடனே அதை விற்க முனைய  வேண்டாம்… சற்றுப் பொருங்கள். அப்புறம் விற்றால் நஷ்டம் வராது. கருணையும் இரக்கமும் கனிவும் உங்களை எஸ்கலேட்டர்ல வைத்து கிரேனில் உயர்த்தி மத்தவங்க கண்ணுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும். கணவரோட கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க. குடும்பத்தில் யாருக்கேனும் மாலையும் மேளமும் சேர்ந்து வரும். அரசாங்கத்திலிருந்து நன்மை கிடைக்கும். வெளிநாட்டிலி ருந்து வர வேண்டிய தொகையெல்லாம் டாண் டாண் என்று வரப்போவதாக உறுதி கிடைக்கும்.

கன்னி

குழந்தைகளும் கணவரும் அப்பாவும் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருவாங்க. கவர்மென்ட் உத்யோகம் வேணும்னு ரொம்ப காலமாய்க் கனவு கண்டீங்களே. இப்ப கிடைச்சாச்சு பார்த்தீங்களா?  ஆபீஸ்ல உங்க முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கும். பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்ற எம் ஜி ஆர் பாடலை நினைவில்  வெச்சுக்குங்க.  கணவருக்கு உத்யோகமும் சம்பளமும் உயரும். கனவு கண்டுக்கிட்டிருந்த திட்டம் நிறைவேறும். செல்வம் வரும்.

சந்திராஷ்டமம் : நஹி.. நஹி

துலாம்

இத்தனை காலம் சும்மா ஹலோன்னாலே பிரச்சினை செய்துக்கிட்டிருந்தவங்க எல்லாம் இப்ப நீங்க பேசமாட்டீங்களான்னு தவம் இருப்பாங்க. இந்த கெத்து கரெக்ட்தான், இப்படியே இருங்க. வெளிநாட்டு வருமானமும் லாபமும் உங்க விலாசத்தை விசாரிச்சுகிட்டு வரும். கோபம் வந்தால் அதைத் தூக்கிக் கூவத்தில் போடுங்க. திடீர்னு ஓவர் நைட் புகழ் வந்து சேரும். லோன் கேட்டிருந்தீங்களா வங்கியிடம்? தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பாங்க. ஜாலிதான் போங்க. அப்பாவின் உடம்பை அவர்தான் அலட்சியம் செய்கிறார்னா நீங்களுமா அதை அனுமதிப்பீங்க?

விருச்சிகம்

கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். நாலு பேர் உங்களை மதிப்பாங்க. செல்வாக்கு கூடும்.  மற்றவங்க நெல் போட்டால் நெல் விளையும். நீங்க புல் போட்டால்கூடப் பொன்னாய் விளையும் பாருங்களேன். ஏழரைச் சனியால் சிரமங்கள் வரும்னு நீங்களே இமாஜின் செய்துக்கிட்டா அதுக்கு நானா பொறுப்பு? டாடிக்குப் பெரிய அளவில் நன்மை காத்திருக்கு. வெளி நாட்டு வேலை தேடிக்கிட்டிருந்தீங்களே.. வாசலில் எட்டிப் பாருங்க. அந்த வாய்ப்பு உங்க வீட்டுக் கதவைத்தான் தட்டிக்கிட்டிருக்கு.

சந்திராஷ்டமம் : ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை

தனுசு

சற்று நிதானப்போக்கு இருக்கட்டும். எல்லாரிடமும் கடுப்பாக வேண்டாம்.. நாணல் மாதிரிப் பணிஞ்சு போனால் உங்களுக்குத்தான் மிகவும் நல்லது. கல்யாணத்துக்கு அவசரப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிடுங்க. உங்க குடும்பத்தில் நிச்சயம் தோரணம் பாயசம்னு இருக்கும். சின்ன சாதாரண உடல் உபாதைக்கெல்லாம் நடுங்கிடாதீங்க. நிச்சயமா அது தற்காலிகப் பிரச்சினைதான். டாடிக்கு சின்ன பிரச்சினைகள் இருக்கும். ஆனா அது நீங்க கற்பனை செய்த அளவுக்குப் பெரிசு இல்லைங்க. ப்ளீஸ் நம்புங்க. சகோதரர்களோட ஃபைட் பண்ணாதீங்க

சந்திராஷ்டமம் : ஜூலை 23 முதல் ஜூலை 25 வரை

மகரம்

சுப நிகழ்ச்சிகள் எல்லாம் அடுத்தடுத்து நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே மடமடன்னு நிறைவேறி உங்களை சந்தோஷக்கடலில் தள்ளி நீங்கள் நீந்துவதை வேடிக்கை பார்க்கும்.  ஐஸ் பாதி ஃபயர் பாதி உங்களைச் சூழ்ந்திருப்பதுபோல் சந்தோஷமும் லாபமும் ஒரு பக்கம் நிலவும். பிரச்சினையும் டென்ஷன்களும் இன்னொரு பக்கம் நன்மைகளும் லாபங்களும் சுப நிகழ்ச்சிகளும் சந்தோஷமும்னு கலந்து ஒரு மிக்ஸர் மாதிரி அலைக்கழிக்கும். அதுக்காக இத்தனை ஊர்களுக்குக் கேட்கும்படியாவா கத்துவாங்க? மனசில் நல்ல எண்ணங்களும் இரக்க சுபாவமும் மேம்பட்டு அவை உங்க செயலிலும் பிரதிபலிக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை

கும்பம்

கடந்த ஒன்றரை வருடங்களாக  இருந்து வந்த தொழில் ரீதியான டென்ஷன்களும் கடந்த ஒரு வருடமாக நிலவி வந்த பர்சனல் பிரச்சினைகளும் ஒரே சமயத்தில் டாட்டா காண்பித்து உங்களுக்கு நிம்மதி ஏற்படுத்தும். வயிற்று உபாதைகளைப் பெரிய பிரச்சினைன்னு நினைச்சு ஏதோ அறைஞ்ச மாதிரி முகத்தை வைச்சுக்காதீங்க. உடனே சரியாகப் போகுது. அழகான..ரொம்ப ரொம்ப அழகான வீடு அல்லது கார் வாங்கப் போறீங்க. மம்மிக்கு அவங்க பொறந்த வீட்டிலிருந்து சொத்து அல்லது அதில் பங்கு வரும்.  பார்ட்டி வெய்ங்க. கல்யாணம் நிச்சயமாகப்போகுது. அவசரம் வேண்டாம். நண்பர்கள் செம புத்திசாலியா அமைவாங்க.

மீனம்

ஏராளமான வருடம் நடக்காத சந்தோஷமான விஷயங்கள் இப்போது நடக்கும். பல வருடங்களாகச் சந்திக்காத சிநேகிதங்களையும் உறவினர்களையும் இந்த வாரம் சந்திப்பீர்கள். நிலம் வீடு ஏதாவது கட்டாயம் வாங்குவீங்க. குழந்தைங்க திடீர்னு புத்திசாலித்தனமா ஆயிடுவாங்க. தர்ம சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத கோயில்களுக்கெல்லாம் விஸிட் அடிப்பீங்க. நீங்க ரெடியோ இல்லையோ. திருமணம் தன் பாட்டுக்கு நிச்சயமாயிடும். டாடியின் பிரச்சினைகளைப் பற்றி டென்ஷன் இருக்கத்தான் இருக்கும். கவலைப்படற நேரத்தில் சாமி கும்பிடுங்க. சரியாயிடும்.

More articles

Latest article