மேஷம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… புது முயற்சிகள் எந்த வித தடையும் இன்றி நடக்கும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீங்க. உங்க முயற்சிக்கு சீக்கிரத்துல நல்ல பலன் கிடைக்கும். உங்க வாக்கு சாதுர்யத்தால் பல நன்மைகள் ஏற்படும். தெய்வ அனுகூலம் கூடும். பணம் பற்றிய பிராப்ளம்ஸ் தீரும். குடும்பத்தினர் மூலம் பல உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். சொத்து விஷயங்களில் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறப்பு வகையில் ஒரு சில பிரச்சனைகள் வரலாம் . குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்போர்க்கு பணியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத திருப்பு முனை ஏற்படும். அது பிற்கால நன்மைக்கு விதை போடும். பேச்சினால் நன்மை உண்டு. மொத்தத்துல ஹாப்பி வாரம்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… குடும்ப வாழ்க்கைல பெரிய மாற்றங்கள் ஏற்பட சான்ஸ் இருக்கு. பேச்சுத் திறமை தாங்க ஒங்களோட டோட்டல் பலம். பெரிசா எதற்கும் ஆசைப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படக்கூடிய நபர் நீங்கள். எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் அதை மன நிறைவோட செய்வீங்க. அடுத்தவங்களோட ஆலோசனைகளில் முக்கியமானதை மட்டும் எடுத்துக்குங்கப்பா. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்துடன் பல இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் ஒன்றை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஏற்கனவே கவர்ச்சி அம்சம் உள்ள உங்க அட்ராக்‌ஷன் அதிகமாகும். மனசுல கருணை இரக்கம் கூடும்.

மிதுனம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… ஒரு காரியத்தை கையில் எடுக்கறதுக்கு முன்னால ஒரு முறைக்குப் பல முறை யோசிப்பீங்க. அப்படி யோசித்து கையில் எடுக்கும் காரியங்களை துணிச்சலாக செய்து முடிப்பீங்க. எப்பவுமே நண்பர்களோட ஆதரவு உங்களுக்கு உண்டு. பண வரவு சமாளிக்கக்கூடிய அளவுக்குதான் இருக்கும். ஸோ.. டோன்ட் ஒர்ரி. இழுபறியாக இருந்துக்கிட்டிருந்த பிரச்சனைங்களுக்கு தீர்வு கிடைக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட்டுப் பிரச்சனையில மாட்டிக்க வேணாம். உங்களோட விருப்பத்தை நீங்களாவே நிறைவேத்திப்பீங்க. மனைவி / கணவர் வழியில செல்வாக்கு இன்கிரீஸ் ஆகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உத்யோகத்துல சகஊழியர்களோட ஆதரவு கெடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பா நடைபெறும்.

கடகம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… குடும்பத்துல சுப நிகழ்ச்சிகள் உங்க தலைமைல நடக்கும். குடும்பத்துடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. பழைய வீட்டை மாத்திப் புதிய வீட்டுக்கு மாறுவீங்க. கையில் எடுக்கும் காரியங்கள் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். மத்தவங்க சொல்லும் குறைகளில் கவனம் செலுத்த வேணவே வேணாங்க. பல ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் சான்ஸ் கெடைக்கும். குடும்பத்துல ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். ரிலேடிவ்ஸ் மத்தில புகழ் கெளரவம் இன்கிரீஸ் ஆகும். ஃபேமிலில உள்ளவங்களோட ஏற்பட்ட சின்னூண்டு கோபம் அல்லது மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்குத் திரும்புவீங்க. அவங்களும் சகஜமாவாங்க. உத்யோகத்துல பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் லாபத்தை பெற அதிக கவனம் செலுத்தணுங்க.

சிம்மம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… முக்கியமான சமயத்துல முடிவு எடுக்கும்போது சின்னதா ஒரு தடுமாற்றம் வரும். அப்பா அம்மாவோட விருப்பங்களை கேட்டறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். மனசுல பட்டதை ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாப் பேசுவீர்கள். இனிமையான பேச்சின் மூலம் மத்தவங்களை ஈஸியாக் கவருவீங்க. மத்தவங்களோட செயல்கள் சில நேரம் உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். எந்த எடத்துலயும் உங்களோட கவனத்தைச் சிதற விட மாட்டீங்க. குடும்பத்துல ரிலேடிவ்ஸ்ஸோட வருகை இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துக்கிட்டிருந்த பிரச்சனைங்க அனேகாம முடிவுக்கே வந்துடும்.  அட் லீஸ்ட் குறையும். சில சமயங்களில் அறிவுபூர்வமாக சிந்திச்சு ஒண்ணு ரெண்டு வெற்றிகளை அடைவிங்க. உத்யோகத்துல உயர் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்துல லாபமும் நாட்டமும் கலந்திருக்கும்.

கன்னி

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… தேவையில்லாத சில வீண் அலைச்சல் இருக்கும்தான். ஸோ வாட்? இருந்துட்டுப் போகட்டுமேங்க.. ஒருபுறம் அலைச்சலும் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வீண் கவலைகளை மனதில் இருந்து அறவே தவிர்க்கவும். அதிகமாக கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். பண வரவு கணிசமாக உயரும். இது வரை தடைபட்டு வந்த முயற்சிகளை மீண்டும் தொடரவும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு. பெண்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணி சுமை அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும், இருப்பினும் தொழிலில் எந்த வித பாதிப்பும் இருக்காது. மனசு ரிலாக்ஸ்டாக இருக்கும். டோன்ட் ஒர்ரி.

துலாம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… பல விதமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஹாப்பியா? உங்க தேவைங்களை நிறைவேற்றி கொள்ளும் சந்தர்ப்பமும், வாய்ப்பும் ஆட்டமேட்டிக்கா அமையும், இருப்பினும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரொம்ப பயப்பட வேணாம். சிக்கலான விஷயங்களை கூட ரொம்பவே சாதாரணமாக கையாளுவீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்துடன் பல விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் சில பண விரையம் ஏற்படும். பண வரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஓரளவு கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கையில் இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். கூட்டிக்கழிச்சுப் பார்த்தா சுலபமான நன்மைகள் உள்ள வாரம்.

விருச்சிகம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… பல புதுமையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம், மனசுல இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த கவலைகள் தீர புது வழி கிடைக்கும். ஆன்மிகத்தில் அதிக இன்டரஸ்ட் ஏற்படும். நீங்க திட்டமிட்டு செயல்படுவதில் கெட்டிக்காரர்கள். அதனால ஜெயிப்பீங்க. இருந்தும் திட்டமிட்ட பயணத்தில் கடுகு சைஸ் தடை ஏற்பட வாய்ப்புண்டு. அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் வீண் விவாதங்கள் வேணாம். முடிந்தவரை மௌனமாக சாதிப்பது நல்லது. சொன்ன சொல் தவறாமல் காப்பாற்றுபவர்கள் நீங்கள் அது இப்போதும் தொடரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவும் வெகுவாக உயரும். தொழில், வியாபாரம் தொடர்பான சிக்கல் தீரும். ரொம்ப நாளா சந்திக்காத ஒருத்தங்களை சந்திச்சு ஹாப்பியாவீங்க.

தனுசு

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… உங்க கிட்ட உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தொந்தரவு செய்வர். நீங்களும் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்து வம்பு வராம தப்பிச்சுடுவீங்க. குடும்ப்ப பிரச்சனையில் இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் தீரும். எதிலும் பொறுமையை இருந்தால் மட்டுமே பல காரியங்களை சாதிக்க முடியும். அவசரம் பரபரப்பு இதெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு நியாபகத்துல வைங்க. பண நெருக்கடி இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய ஆற்றல் இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது ரொம்பவே கவனம் தேவை. உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். குடும்பத்திற்காக நிறைய விஷயங்களை விட்டுக்குடுக்க வேண்டியிருக்கும். உத்யோகத்துல எல்லாரிடமும் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகரம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… நெருக்கடியான பிராப்ளம்ஸையும் சமாளிச்சு நிமிர்ந்து.. அதுலேயிருந்து வெளியே வருவீர்கள். பண வரவு திருப்தியளிக்க கூடிய வகையில் இருக்கும். எல்லா காரியங்களையும் தனியாளாக நின்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பயணங்கள் அலுவலகரீதியானவையா இருந்தாலும் சரி.. பர்சனலா இருந்தாலும் சரி… தநன்மைகளும் லாபமும் உண்டாகும். சொத்து வழக்குகளில் எதிர்பார்த்தபடி சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத்துணை வகையில் குட் நியூஸ் உண்டு. குடும்பத்துல குதூகலமான சூழ்நிலை இருக்கும். லேடீஸ் மூலமா  சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். மன மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்யோகத்துல மன நிம்மதி ஏற்படும். ஒரு மேலதிகாரி உங்களுக்கு ரகசியமா ஆதரவு தந்துக்கிட்டிருக்கார். ஸோ..அமைதியா இருங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 20 முதல் டிசம்பர் 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்குவீங்க. உடல் உஷ்ணம் சம்பந்தமாக தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும் பெரிசாக் கவலைப்பட எதுவும் இல்லைங்க. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வீட்டில் தடைபட்ட சுப காரியம் இனிதே நடைபெறும். உடன்பிறப்பு வகையில் மதிப்பும் ஆதரவும் உண்டு. நண்பர்கள் மூலம் தக்க சமயத்துல உதவிகள் பெறுவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீங்க. குடும்பத்துல இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் ஒவ்வொண்ணாத் தீரும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பண வரவு உயரும். தியானம் செய்ங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

இந்த வாரம் உங்களின் ராசிக்கான கிரக நிலைமையின்படி… எப்பப்பாரு எதையாச்சும் இமாஜின் செய்து பயப்படறதே உங்களுக்கு வழக்கமாயிடுச்சு. உங்க சொந்த நிழலைப் பார்த்து பூதம்னு பயந்த கதையால்ல இருக்கு? பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உங்களோட செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் பொறுமையும் செயல்களில் நிதானமும் காரிய வெற்றிக்கு உதவும். உங்களை நம்பி நெறையக் காரியங்கள் ஒப்படைக்க படும். அடுத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாக இடம் தர மாட்டீங்க. வர வேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்து மூலம் பணம் கைக்கு வரும். உங்கள் கோப தாபங்களை குறைத்து கொண்டால் நன்மை அதிகம். ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பழைய கடனை திரும்ப அடைக்க வழி கிடைக்கும். குடும்பத்தில் ஏதாவது ஒருவகையில் உங்களுக்கு தொந்தரவு ஏற்படும். பயணங்களின் போது உற்சாகம் உண்டு.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 25 முதல் டிசம்பர் 27 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.