மேஷம்

சேர்த்த பணத்தைச் சிக்கனமாச் செலவழிச்சு சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்துல உள்ளவங்க உதவுவாங்க. வியாபாரத்துல புதியதொரு அறிமுகம் கெடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைங்க கெடைக்கும். கணவருக்கு/ மனைவிக்கு திடீரென்று பதவியோ சம்பளமோ உயரும். யார் கண்டதுங்க. இரண்டுமே உயரக்கூடும் ! தந்தைக்கு சிறு உபாதைகள் வந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். அம்மாவுக்குப் பாராட்டும் புகழும் கெடைக்கும் . குடும்பத்தில் சந்தோஷமான விரிவாக்கம் இருக்கும். தைரியமும் வீரமும் அதிகரித்து மனதில் இருந்ததை வாய்விட்டுக் கேட்பீங்க. இன்னும் கேட்கவில்லையா? எனில் ஒரு சின்ன ஆலோசனை சொல்றேன். நீங்க கேட்க விரும்புவதைச் சுள்ளென்று கேட்காதீர்கள்.    புதிய நன்மைகளை எதிர்பார்க்கக்கூடிய வாரம் இது. யெஸ். யூ கேன் எக்ஸ்பெக்ட்.

ரிஷபம்

உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேற சான்ஸஸ் அதிகரிக்கும். குடும்பத்துல உங்க பேச்சு மதிக்கப்படும். பலநாள் நீங்க கண்ட கனவு ஒண்ணு சட்டென்று நனவாகும். தடைப்பட்ட விஷயங்கள் தானாக சிம்ப்பிளாய் நடைபெற்று ஒங்களை சர்ப்பிரைஸ் பண்ணும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சண்டைகளும் சஞ்சலங்களும் டாட்டா சொல்லிடும்.  செய்யும் முயற்சிகளில் அவசரம் காட்டாதீங்க.  கொஞ்சம் பொறுமையாவே காலை எடுத்து வைங்க. எதிலும் ஆலோசனை செய்து முடிவெடுப்பதே நல்லதுங்க. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். ஆபீசில் ஒங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்குவீங்க. மனசுக்கு நிறைவான வாரம் இது. அதிகாரிங்ககிட்டயும் பெரிய மனுஷங்க கிட்டேயும் பேசும்போது குரலில் பணிவு இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்களேன். வாக்குவாதத்தைத் தவிர்க்கப்பாருங்க. நீங்க விரும்பியது கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 19 முதல் அக்டோபர் 21 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்

மிதுனம்

சிறப்பான சக்ஸஸ் எதிர்பார்க்கலாம். சில சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், பல நற்பலன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் நெறைய நன்மைகள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் லேடீஸ் ஒத்துழைப்பு நல்ல முறையில அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் பெண்கள் மனம் மகிழ்வீங்க. பங்கு சந்தையில் முன்னேற்றம் உண்டு. சுபமான நல்ல செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் குட் நியூஸ் எதிர்பார்த்திருந்தா அது இப்போ முயற்சியே  செய்யாமலும்கூட உங்களுக்குக் கிடைக்குங்க. அடி சக்கை ! என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ பலன் கொடுக்கும். வரவே வராது என்று கணக்கில் சிவப்புக் கோடு போட்டு முடித்த விஷயங்கள் இப்போது வருமானமும் லாபமும் கொடுக்கும், ரொம்ப நாளாய்த் திரும்ப வருமான்னு காத்துக்கிட்டிருந்த கடன் தொகை வசூலாகும்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்

கடகம்

பழி தரக்கூடிய விஷயங்களைச் செய்யாதீங்க. தொழில் துறையினருக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வருவாய் வருவதில் கொஞ்சம் தடை.. அல்லது டிலே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த எதிர்பாராத சச்சரவுகள் ஒரு வழியா, உங்களின்  பொறுமையான அணுகுமுறையால் தவிர்க்கப்படும். நன்மைகள் பெறுவதில் நிதானப்போக்கு இருந்தாலும் நல்ல முறையில் நடைபெறும்.  நீங்க கலைத்துறையில் இருப்பவரா? அப்போ சரி அப்படியானால்,  ஜெயிச்சு மேலே வந்து முன்னேறிடுவீங்க. குழந்தைங்க சின்ன சின்ன ஏமாற்றங்கள்  தரக்கூடும். அவங்களுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் அவங்களுக்கு உங்களால கஷ்டம் வந்துடக்கூடாதில்லையா. அதை கவனமாப் பார்த்துக்குங்க.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 23 முதல் அக்டோபர் 26 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்

சிம்மம்

கொஞ்ச நாட்களில் அவங்க  உங்களைப் பெருமைப்படுத்தப்போறாங்க. உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களைப் பெற முடியும் என்றாலும், சில தடங்களுக்கு பின்னரே முழு பலனைப் பெற முடியும் பட் யூ வில் கெட் இட். சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அவங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை விளைஞ்சுதேன்னு பொறாமை கொள்ளாமல் சந்தோஷம் கொள்ளுங்க. இப்போ இவங்களுக்கு ஏற்பட்ட மாதிரி உங்களுக்கும் அரசாங்க நன்மை கிடைக்கப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.  ஹாப்பியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவீங்க. அக்கம் பக்கத்திலும் ஆபீஸ்ல ஒங்ககூட ஒர்க் பண்றவங்க கிட்டேயிருந்தும் ஆதரவு கூடுதலாக் கெடைக்குமுங்க.

கன்னி

நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. கணவன்-மனைவிக்கிடையே இருந்துக்கிட்டிருந்த டென்ஷனான சூழல் மாறும்.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. .  திடீர் உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, அதுவும் வெளிநாட்டில் கிடைக்கலாம். இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கிட்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்தவுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே ! நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு. கொஞ்சம் தயாரா இருங்க. ஆனாலும் அந்தச் செலவுங்களால பிற்காலத்தில் பெரிய நன்மைகள் உண்டு. சுருங்கச் சொல்லணும்னா, அவற்றை நீங்க செலவுகளாய் நினைக்காமல் முதலீடா நினைச்சுக்குங்க. யெஸ். இன்வெஸ்ட்மென்ட். திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும்.

துலாம்

தந்தை வழி உறவினர் மூலம் உங்களுக்கு மிக நல்ல நன்மைகள் நடக்கும், பெரியோர் மற்றும் பெற்றோரின் ஆலோசனை கெடைக்கும். குடும்பத்தினரின் புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படுவது போலவே ..அலுவலகத்தில் நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க. அதனால் உங்களுக்கும் பாராட்டும், புகழும் ஏற்படும். நண்பர்கள் நல்லவங்களா அமைவது வரம். அந்த வரம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. நம்புங்க. அவங்க உங்களுக்கு நன்மைதான் செய்வாங்க. ஆரோக்யத்தை மிக முக்கியமாகப் பார்த்துக்குங்க. உங்களுக்குக் குடும்பத்தினர் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் மூலம் பல நன்மைகள் கொடுக்கக்கூடிய சிறந்த வாரமாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உங்க பிள்ளைங்களால் பிரச்சினை ஏற்படும்.

விருச்சிகம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் பலம் மனசுக்குக் கிடைக்குமுங்க. தொல்லை தந்தவங்க விலகுவாங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த சண்டைகளும் சச்சரவுகளும் பிராப்ளம்ஸ்ஸூம் காணாமல் போயிடும்.. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்குமுங்க.  மனக்குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படும் திறன் காரணமாக வெற்றி கெடைக்கும் . சின்னதாகக் காலில் வலி வீக்கம் இருந்தாலோ அடி பட்டாலோ முதல் உதவி சிகிச்சை செய்ய டாக்டரிடம் போங்க. நீங்களே செல்ஃபி வைத்தியமெல்லாம் செய்துக்க வேணாங்க. அதிருக்கட்டும்… ஆபீசிலும் ரிலேடிவ்ஸ் கிட்டயும் தயவு செய்து பணிஞ்சு போங்களேன்.

தனுசு

கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுவதெல்லாம் சகஜம். அதையெல்லாம் போய்ப் பெரிசா நினைத்துத் தூக்கத்தையும் நிம்மதியையும் இழக்கா தீங்கப்பா. ரிலாக்ஸ். உங்க ஃபேமிலில உள்ளவங்களோட மனசுவிட்டுப் பேசுவீங்க. வீட்டுக்குத் தேவையான சாதனங்கள் வாங்குவீங்க. வேற்று மதத்தரின் உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை சந்திப்பாங்க. வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தியோகத்தில் சில வழிமுறைகளைக் கற்றுக் கொள்வீங்க. புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும் பெண்களுக்கு மிகச் சிறந்த வாரமாக அமையும். திட்டமிடாத காரியங்களிலும்சரி.. திட்டமிட்ட விஷயங்கள்லயும் சரி… சாதிக்கக்கூடிய வாரம். பணம் பலவழிகளிலும் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இத்தனை காலம் ஓடி ஒளிஞ்சுபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்த தன்னம்பிக்கை ஒரு வழியா உங்க கிட்ட வந்து ஒட்டிக்கும்.

மகரம்

பேச்சில் ஒரு விதக் கவர்ச்சி அம்சம் இருப்பதால் உங்களை எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்கிக் கைதட்டல் பெறுவீங்க. குடும்பத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷமும் நிம்மதியும் , அமைதியான உறக்கமும் நல்ல முறையில் உங்களை வந்தடையும். திருமணம் உள்ளிட்ட விசேஷ முடிவாகும். பிசினஸிலும், அலுவலகத்திலும் இருந்துக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடுவீங்க.  சண்டை சச்சரவுகள் தீரும். சிநேகிதர்களிடம்/ தோழிகளிடம் சற்று முறைத்துக் கொள்வீங்க. என்ன செய்ய, அவங்க செய்வதும் நியாயம் அல்லதான். நியாயம் உங்க பக்கம்தான். டோன்ட் ஒர்ரி. சமாதானமாயிடுவீங்க. செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். அதுக்காக ஓவரா அலட்ட வேண்டாம்.

கும்பம்

ரொம்ப வாரங்களா முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் ரொம்ப சிம்ப்பிளாய் ஒங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி முடியும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கெடைக்கும் . வேலை தொடர்பான நல்ல தகவல் கெடைக்கும் . அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? அதை அவருக்குப் புரிய வைச்சு ஒற்றுமையாப்போங்க. யூ கேன். ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஹாப்பியான வாய்ப்பு கைகூடுமளவுக்கு வருமானம் வருமுங்க. பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும், அதில் சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமணத் தடை அகலும். மம்மியின்  உடல் நலம் சீராகும். குடும்பத்துல ஏற்பட்ட குழப்பங்கள்  “பை..பை” சொல்லி ஓடியே போயிடும். குழந்தைங்க மேடை ஏறிக் கைதட்டலும் பரிசும் வாங்குவாங்க. சகோதர சகோதரிகளுடன் சற்று முகத்தைத் தூக்கி வெச்சுப்பீங்க.

மீனம்

உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீங்க. செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைங்களை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. பெரிய பதவில உள்ளவங்க மற்றும் பிரபலமானவங்களோட ஹெல்ப் கெடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. இட மாற்றம் சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் அதை வெற்றிகரமாய் முடிச்சு ஹாப்பி ஆவீங்க. இதுவரை ஆபீஸ் வேலையில் இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் காணாமல் போயி மனசுக்கு முழுமையான நிம்மதி கெடைக்கும் . புதுசா வாகனம் வாங்கிக் குடும்பத்துடன் சந்தோஷமா ஊர்சுற்றுவீங்க. திடீர்னு புது வேலை கிடைச்சு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சம்பளம் கூட நீங்க நினைச்சதைவிடக் கூடவே இருக்கும்.