மேஷம்
நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனால் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும். அதனால் என்ன.. உழைப்புக்கும், முயற்சிக்கும், அலைச்சலுக்கும் ஏற்ற பலன்தான் இருக்கப்போகுதே. பிறகென்ன? அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். அதில் ஒரு சின்ன இக்கு இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனசில் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. அவ்ளோதானேங்க நமக்கு வேண்டியது. சூப்பரா ஜமாயுங்க. . திட்டமிட்ட பணவரவுகள் சிறிது தாமதமாக வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடிச்ச இடமாற்றம் வரலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார உயர்வு ஏற்படும். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். இட்ஸ் ஓகே தானே?
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 4 வரை
ரிஷபம்
உங்களுடைய வருமானம் நன்கு உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? இந்த வாரம் ஹாப்பியா டூயட் பாடுவீங்க. திருமணம் ஆனவர்களும் ஹனி மூன் முடிச்சவங்களும் அடுத்த ஹனி மூனுக்குத் தயாராயிடுவீங்க. வேலையை விடலாம்னு நினைக்கவே நினைக்காதீங்க. கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க. நீங்க வெளியே வந்தால் உள்ளே முண்டியடிச்சு நுழைய நூறு பேர் காத்திருக்காங்க. விமானத்தில் பறக்கப்போறீங்க. கார் வாங்கப் போறீங்க. எதிர்பாராத மகிழ்ச்சியான விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப் போகுதுங்க. செலவு பாட்டுக்கு சுனாமி கணக்கா உங்களை விழுங்கிகிட்டிருந்தாலும் அதற்கெல்லாம் அசந்து போறவங்களா நீங்க! உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குதுங்க. சக நண்பருங்க ஹெல்ப் செய்வாங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்துவாங்க. குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீங்க
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 6 வரை
மிதுனம்
பேசுவதற்கு வாயைத் திறக்குமுன் ரெண்டு முறை யோசிச்சுக்குங்க. அதையும் விட பெட்ர் என்ன தெரியுமா? சைலன்ட் மோட்ல இருந்துடுங்க. உங்க கணவர் (அல்லது அல்லது மனைவி) நிறைய நன்மைகள் அடையப் போகிறார். பார்த்துப் பெருமிதப் படப்போறீங்க. என்னது? வேலை பிடிக்காமல் கம்பெனியில் பேப்பர் போடப்போறீங்களா? இப்பவா? நோ…நோ. இன்னும் கொஞ்சம் பொறுமை. வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆகவே சற்று சோம்பலைப் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்து பிசினஸ்ஸை கவனிங்க. ப்ளீஸ், திட்டம் எதுவாச்சும் போட்டிருந்தீங்கன்னா அது நல்லபடியா நிறைவேறுங்க. பெண்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வரப்போகுது. மனசை அதுக்கு ஹாப்பியா தயார் செய்துக்குங்க. யோகமான வாரம்.
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 8 வரை
கடகம்
குழந்தை உங்களை சந்தோஷப்படுத்தப்போறாங்க. வழிபடும் இடங்களுக்குப் போவீங்க. அந்த இடத்தில் உங்க வாழ்க்கையைத் திசை திருப்பும் நன்மை ஒன்று நடக்கப் போகுது. யாரையேனும் சந்திக்கக்கூடும். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். இது வரை சந்திக்காத புதிய முகமாக அவர் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அவர்/அவங்க எதிர்பாலினத்தினராக இருக்க வாய்ப்பு அதிகம் அரசியலில் இருப்பர்கள் இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வைப்பீங்க. குடும்பத்தில் ஹாப்பி ஹாப்பி நிகழ்ச்சிகள் நடைபெறும். விலகிய உறவினர் மறுபடியும் சேர்ந்துப்பாங்க. சருமம் பற்றிய ஆரோக்யத்தில் அதிக கவனத்துடன் இருங்க. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.
சிம்மம்
நண்பர்கள் ஒரு பெரிய நன்மைக்குக் காரணமாய் இருப்பாங்க. மம்மியால் உங்களுக்கும் உங்களால் டாடிக்கும் நன்மைகள் ஏற்படும். ஆக மொத்தத்தில் குடும்ப ஒற்றுமை கூடும். குடும்பத்துல ஏகமாய் சந்தோஷம் வரப்போகுது. இன்னொரு பக்கம் அலுவலகத்தில் பதவு உயர்வு சம்பள உயர்வு பொறுப்பு உயர்வு கவுரவம்னு மகிழ்ச்சி அலை அடிக்கப்போகுது. எது நடந்தாலும் நன்மைக்குத்தான். சும்மா சமாதானத்துக்குச் சொல்றேன்னு நினைக்கறீங்களா? இப்ப இப்படி ஆகிப்போச்சேன்னு நினைக்காதீங்க. இதன் விளைவு பற்றி பிற்காலத்தில் பெரிய அளவில் சந்தோஷப்படப்போறீங்களே. எத்தனை நாளாப் படுத்திக்கிட்டிருந்த பிரச்சனை ஒன்று உங்களைவிட்டு நிரந்தரமாய் டாட்டா சொல்லப்போகுது. வெகு காலத்திற்குப் பிறகு நிம்மதிக்கு ஸ்பெல்லிங் கண்டுபிடிப்பீங்க.. உத்தியோகத்தில் கவனக்குறைவு ஏற்படாதபடி கேர்ஃபுல்லா இருங்க- தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை விரைவாகச் செய்வீங்க.
கன்னி
சின்ன விஷயங்களுக்குக் கவலைப்பட உங்களுக்கு ஏது நேரம்? நல்ல வேளையாய்ப் பிரச்சினையும் சின்னதாய்த்தான் வரும்.. அதைத் தூக்கிச்சாப்பிடும் அளவு நன்மைகளும் ஏராளமாய் வரும் நிறையப் பாராட்டுக் கிடைக்கப்போகுது. ஆபீசில் புகழுவங்க. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்தாகணும்…தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. பெற்றோர்களுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். ஹப்பாடா! அனேகமா அது உங்க கல்யாணமாய் இருக்கக்கூடும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நிறையப்புதிய பொறுப்புக்கள் வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து வைக்கறது நல்லது. இந்த வாரம் சனிக்கிழமை, வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடிய தகவல் வரும். ஃபேமிலியில் ஒற்றுமை பலப்படும். கேட்ட இடத்திலிருந்து ஹெல்ப் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக
துலாம்
கட்டுப்படாமல் இருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி இது போல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. வேறு அலுவலகத்திற்க மாற இத்தனை காலம் தடையும் தாமதமுமாய் வந்துகிட்டு இருந்தது. இப்பதான் வேளை வந்திருக்கு. உங்களுடைய கவர்ச்சி அம்சம் முழு வீச்சில இருக்கும். வருவாரும் போவாருமாய் வீடு அமர்க்களப்படும். உங்களுக்கு இந்த விசேஷம் அந்த சுப நிகழ்ச்சின்னு சரியாய் இருக்கும். கடந்த சில வாரங்களா இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த சின்ன சண்டையும் நீங்கும். பிள்ளைங்க எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை ஃபுல்லா நீங்கும். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, எதிர்பாராக்காத நன்மையும் பணவரவும் வந்து சந்தோஷத்தைக் களைகட்டச் செய்யும்
விருச்சிகம்
நமக்கெங்கே இதெல்லாம் கிடைக்கப்போகுது என்று நீங்கள் ஒரு காலத்தில் ஏங்கிய விஷயமெல்லாம் இப்போது உங்க முன்னால் வந்து உட்காரும். குழந்தைகளால் பெருமிதம் அனுபவிப்பீங்க. இந்த அளவு அவங்க சாதிப்பாங்கன்ன நீங்க நினைச்சதில்லை! காதல் விஷயத்தில் அவசரம் வேண்டாம். சில விஷயங்களில் தடை தாமதம் ஏற்படுவது கூட நல்லதுதான்னு உங்களுக்குத் தெரியாதா என்ன! உங்க டாடிக்கு ஏதோ நன்மை காத்துக்கிட்டிருக்கு. அதிர்ஷ்ட தேவதை நடு ஹாலில் சோஃபா போட்டு உட்காரப்போறாங்க. இத்தனை காலமாய்த் தளர்வடைந்திருந்த விஷயங்களில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சூப்பர் வெற்றி காண்பீங்க. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மத்தவங்க உங்களுக்கு உதவ முன்வருவாங்க.
தனுசு
சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்ப்பா. ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுடுங்க. மற்றவங்களுக்காக வரிஞ்சுகட்டிக்கிட்டு தூது போறதுக்கு முன்னால் பல முறை நல்லா யோசிச்சுட்டு இறங்குங்க ஓய்வின்றி உழைப்பீங்க. குடும்பம் சீராக நடைபெறும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. இந்த வாரம் வியாழக்கிழமை, உங்கள் வயதுக்கேற்றபடி முன்னேற்றம் தரக்கூடிய விஷயம் ஒண்ணு நடக்கப்போகுதுங்க. வேலைகளில் சிறுசிறு தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் துச்சமாய்த் தூக்கிப்போட்டுட்டு, முறியடித்து முன்னேறுவீங்க. உயரதிகாரிகளின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும். கவர்ன்மென்ட் ஹெல்ப் உண்டுங்க. தொழில் செய்பவருக்கு அதிக ஆதாயத்துடன் புதிய வேலை வந்து சேரலாம்
மகரம்
கடிகாரத்திலும் காலண்டரிலும் ஒரு கண் வெச்சுக்கறது நல்லது. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். உங்கள் குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. அவங்களுக்கு உங்களால் நன்மை ஏற்படுவது நமக்கெல்லாம் பழக்கப்பட்டுப்போன செய்தி. அவங்களுக்கு உங்களால் நன்மை ஏற்படப் போகுதுங்க. எனவே அவங்க என்றென்றும் நன்றியோட இருப்பாங்க. நீங்க மாணவரா, குட்.. உங்களுக்கும் படிப்பில் உற்சாகம் படிப்படியாக உயர்ந்து பாராட்டும் பரிசும் வாங்குவீங்க. அதே சமயம் நிறைய டைவர்ஷன்கள் இருக்கும். எதிலும் சிக்கிடாதீங்க. ப்ளீஸ்.. உங்க நன்மைக்காகத்தானேங்க சொல்றேன். வருங்கால நலன் கருதிப் புது முயற்சி எடுப்பீங்க. சுப செலவுகளால் சேமிப்புகள் கரைஞ்சாலும் அது சந்தோஷம்தாங்க குடுக்கும். குடும்பத்தாரின் குறைகளைத் தீர்க்க முன்வருவீங்க. ரொம்ப நாளா சந்திக்காத ஃப்ரெண்டை சந்திப்பதால் மனசு நிறையும்.
கும்பம்
இத பாருங்க….சிறு சிறு டென்ஷன்கள் இருக்கிறதே என்று கவலை வேண்டாம். முன்பிருந்தமாதிரி பெரிய பெரிய டென்ஷன்கள் இல்லையே என்று சந்தோஷப்படுங்கள். ஏன் தெரியுமா? அந்தக் கவலையெல்லாம் உங்க ஆரோக்யத்தை டச் பண்ணிப்பார்க்க ட்ரை பண்ணிடுங்க. அதுக்காகத்தான் சொன்னேன். கடன்கள் வாங்க இது உகந்த நேரம் அல்ல. ஒத்திப் போடுங்கள். ஒன்று நிச்சயம். இத்தனை காலம் பாடாய்ப்படுத்தி வந்த அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் கண்டிப்பா வெளியே வந்திருப்பீங்க. சமீபத்திய பெயர்ச்சியின் மகிமைங்க அது. எதிர்பாராத செலவுகள் அதிகமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஆவணங்களை கவனமாக கையாளுங்க. தொழில் செய்யறவங்க, நவீனக் கருவிகளின் துணையோடு பணிகளை விரைந்து முடிப்பாங்க. குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன்ஸ் உங்க முயற்சியால் முடிவுக்கு வரும். பயணத்திட்டத்தால உங்க விருப்பம் ஒண்ணு நிறைவேறும்.
மீனம்
படித்து விட்டு வேலைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கப்பல், விமானம், ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலை கிடைக்கும். அதாவது அரசு உத்யோகங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். படிப்புக்கேற்ற வேலை இப்போதைக்குக் கிடைக்கலைன்னாலும், கிடைச்ச வேலையை ஒப்புக்குங்க. இதுவும் பிடிக்கும். கொஞ்ச காலத்தில் சூப்பர் வேலை கிடைக்கப்போகுது. ஆடம்பரமான செலவுகளைக் குறைச்சுக்குங்களேன்… ப்ளீஸ்…அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. பணவரவு திருப்தி தரும். . பெண்களின் முயற்சியால் வீட்ல மகிழ்ச்சி பொங்கும். நண்பர்கள் ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லா இருப்பாங்க. இந்த வாரம் புதன்கிழமை குட் நியூஸ் வரப்போகுதுங்க. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிறருக்காக பொறுப்புச்சொல்லி வாங்கிக் கொடுத்த அமவுன்ட் வந்து சேரும்