மேஷம்
தொலைநோக்கு சிந்தனையோட செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. எதிர்காலம் குறித்த கவலைகளைத் தன்னம்பிக்கையோட புறம் தள்ளுவீங்க. நல்லவங்களோட நட்பு சிறப்பான பலன்களை பொறுப்பாக தரும். தொழிலுக்குப் போட்டியா வர்றவங்களை ஓவர் டேக் செய்து உயர்ந்த நிலையை அடைவீங்க. நோ டவுட். சம்பந்தமான விஷயங்கள் உங்களோட பணிவான நடத்தையால, சாதகமா நடந்து முடியும். பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதிச்சுக்குவீங்க. மாணவர்களுக்கு டைம் நல்லாயிருக்கு. ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பீங்க. பணிவா நடப்பீங்க. இதெல்லாம் கூடுதல் மார்க் பெற்று வெற்றி பெற உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சீனியர் அதிகாரிங்க சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவாங்க. குடும்பத்தின்ர் ஒன்றுகூடி சுப நிகழ்ச்சிக்கு ஆயத்தம் செய்வீங்க.
ரிஷபம்
ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளால் உங்களுக்கு செலவுகள் வரலாம். நில விற்பனையில் பெரிய லாபத்தை அடைவீங்க. பார்ட்னர்களுடன் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பீங்க. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பாக்கிகளை முறையாக அடைப்பீங்க. வியாபாரத்துல காணப்படுகின்ற மந்த நிலையை போக்க புதிய திட்டங்களை வகுப்பீங்க. குடியிருக்கும் வீட்டிற்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவீங்க. ஆபரணங்கள் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவீங்க. வெளியூர் பயணங்களில் மூலம் எதிர்பார்த்த பலனை அடைவீங்க. அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அரசாங்க கான்ட்ராக்ட்களை பெறுவீங்க. குடும்பத்துல உள்ள பிரச்சனையை வெளியில் பேசி சிக்கலை அதிகமாக்காதீங்க. மனைவி சொல்லே மந்திரம் என்று மனத்தின்மையோடு செயல்படுங்கள் குழப்பங்கள் தீரும். குடும்பத்துல அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீங்க. பெண்களுக்கு அவங்களோட மதியூகத்தால கூடுதல் நன்மைங்க வரும்.
மிதுனம்
கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீங்க. மன உளைச்சலால் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிராப்ளம்ஸ் தீரும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுவீங்க. முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியா வெச்சுக்குங்க. ஃபேமிலிலயும், தொழிலிலும் உங்க புதுத் திட்டம் வெற்றி தரக்கூடியதாக இருக்கும். உறவினர் வகையில் விரோதம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. சொல், செயலில் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயரதிகாரிங்க ஆதரவு கிடைக்கும். துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறுவீங்க. புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போறீங்க.
கடகம்
புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். பண விஷயத்தில் கேர்ஃபுல்லா இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வேலைப்பளு குறைய வாய்ப்புள்ளது. தொழில், பிசினஸில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். வேலையில் தாமதங்கள் காணப்பட்டாலும் ஃபைனல் ரிசல்ட் சக்ஸஸ்தாங்க. மதிப்பு மரியாதை அதிகரிக்கும் வாரம் இது. சொல்வாக்கும், செல்வாக்கும் மனசுல நம்பிக்கையை உருவாக்கும். சுலபமான காரியங்களை கூட அதிகமுயற்சி எடுத்து செய்ய வேண்டியதாக இருக்கும். காரியவெற்றி பெற இந்தவாரம் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், கலைத்துறையினர் ஆகியவங்களுக்கு நிதானமான வெற்றிகள் உறுதி.
சிம்மம்
எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும். பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நல்லநிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதன் காரணமா நீங்க எதிர்காலத்துல நிம்மதியாக வாழ வழிபிறக்கும். படிப்பில் உங்க கடின முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீங்க. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களோட அறிவுரை கேட்பது நல்லது. தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. பிரார்த்தனை மற்றும் தியானங்கள் மூலம் ஆறுதல் பெறலாம். கேர்ஃபுல்லா இருங்க. வார ஆரம்பத்தில் பேச்சில் கவனமா இருங்கப்பா. ஒங்களோட ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ஃப்கூட இணங்கிப்போகணும். அவருக்கு/ அவங்களுக்குச் சில தடைகள் தாமதங்கள் ஏற்படற போது ஆறுதலா நாலு வேர்ட்ஸ் சொல்லுங்க. ஷ்யூரா வீடு நிம்மதியா இருக்கும்.
கன்னி
புகழையும் செல்வாக்கையும் இன்கிரீஸ் செய்து கொள்ளப் புத்துணர்ச்சியோட செயல்படுவீங்க. தொழிலுக்கு தேவையான உதவிகளை வெளிநாட்டிலிருந்து பெறுவீங்க. நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு பக்க துணையாக இருப்பாங்க. பக்குவமான அணுகுமுறையினால் வெற்றி பெறுவீங்க. நினைச்ச காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்பட சான்ஸ் இருக்குங்க. கணவன், மனைவிக்கிடையே மனசு விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைங்ககிட்ட கவனமா பேசுவது நல்லது. மனசுல இருந்துக்கிட்டிருந்த சோர்வு டோட்டலா நீங்கி உற்சாகம் உண்டாகும். ஃபாரின் போக சான்ஸஸ் வரும். திடீர் இடர்ப்பாடுகள் எப்பிடி வருமோ அதுபோல அவை திடீர்னு சரியாகவும் செய்யுங்க.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 17 முதல் அக்டோபர் 19 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
குடும்பத்துல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். இந்த வாரம் உங்க உடன் பிறப்புகள் மூலமாக இருந்த தொல்லைகள் தீரும். பயணங்கள் தாமதப்படும். அதன் காரணமாக நன்மைகள் ஏற்படும். உங்க செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். முன்பைவிட இப்போ பொறுமை மட்டுமில்லாம தன்னம்பிக்கையும் கூடியிருக்கு ஒங்க கிட்ட. அதுதான் எல்லா விஷயத்தையும் சக்ஸஸ் பண்ணுதுங்க. எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். அரசியல் அண்ட் அரசாங்கத் துறையில உள்ளவங்களுக்குப் பணவரத்து கூடும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். இதனால டீச்சர்ஸ் கிட்ட ஒங்களோட மதிப்பு அதிகமாகும்.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 19 முதல் அக்டோபர் 21 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
மனசுல உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். மனசுல தேவையில்லாத பயம் காரணமாக விரக்திக்கு என்ட்ரி குடுக்காம பார்த்துக்குங்க. வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடிச்சுடுவீங்க. வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் நேர்த்தி ஏற்படும். அது வெற்றியைத் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளில் கவனமுடன் செயல்படுங்கள். நில விற்பனையில் இருந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் ஆதரவால் விலகும். ஒங்களோட வாக்கு சாதுரியத்தால் வியாபாரத்துல பெரிய மாற்றத்தை கொண்டு வருவீங்க.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 21 முதல் அக்டோபர் 24 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
ஒங்களோட சன்/ டாட்டர் பொறுப்போடு நடந்து கொள்வாங்க. பெற்றோர்களுக்கு பெருமையை தேடி தருவாங்க. பங்குத் தொழில் பயங்கரமான லாபத்தை கொண்டு வரும். ஆன்லைன் வர்த்தகங்களும் அமோகமான பலனைத் தரும். சொல்லலாமா வேண்டாமா என்ற காதலை துணிச்சலுடன் வெளிப்படுத்துவீங்க. தடைப்பட்டு நின்ற திருமணங்கள் தானாக நடக்கும். வியாபாரத்திற்கு சில முட்டுக்கட்டைகள் தோன்றி மறையும். புதிய ஆர்டர்களை பெறுவதற்காக வெளியூர் போவீங்க. திடீர் திடீர்னு கோபம் வருவதற்கு அனுமதிக்காதீங்க. ஏதாவது ஒரு வகைல அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். அதெல்லாம் டோன்ட் கேர்னு தூக்கிப்போடுங்க. நாளைக்கே அவங்க வந்து உங்க கிட்ட அசடு வழிவாங்க.. அல்லது ஸாரி கேப்பாங்க பாருங்களேன். நீண்டநாள் இழுபறியாக இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் முடிவுக்கு வரும்.
மகரம்
கணவன், மனைவிக்கிடைல இத்தனை வாரமா இருந்துக்கிட்டிருந்த கடுகு சைஸ் பிராப்ளம் ஒண்ணு முடிவுக்கு வந்து ஒரு வழியாத் தீரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமா எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீங்க. விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீங்க. கடன் பிரச்சினை குறையும். பல வருஷங்களா உங்களைத் துரத்திக்கிட்டிருந்த டென்ஷன் ஒண்ணு கும்பிடு போட்டு ஒங்களைவிட்டு ஓடியே போயிடும். ஆபீஸ் மற்றும் பிசினஸ்ல ம இரவு பகல் பாராமல் உழைத்து தொழில் எதிரிகளை திணறடிப்பீங்க. தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் புதிய முதலீடுகள் செய்வீங்க. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் புதிய சாதனை படைப்பீங்க.னம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகள் எழும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது.
கும்பம்
உயர் அதிகாரிங்க ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைப் பளுவும் கூடும். சிலருக்குப் வாகன யோகம் உண்டு. கூட்டாளிங்க நியாயமற்ற நடவடிக்கைகள் உங்க மனசுல குழப்பத்தைத் தரும். ஆனாலும் எல்லாம் கிளியர் ஆகும். முன்பின் அறியாதவங்க கிட்ட பேச்சு வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைங்க தேர்ச்சி பெருமிதம் தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும். கொஞ்சநாளா மனசுக்குள்ள இருந்துக்கிட்டிருந்த பயமும் வேதனையும் காணாமல் போயிருக்குமே? கங்கிராட்ஸ். பியூட்டி பார்லர்கள், அலங்காரப் பொருள் விற்பனையகம் போன்றவை அதிக லாபத்தை கொடுக்கும். சுலபமாக முடியும் என்ற அரசு வேலைகள் இழுபறியாக நடக்கும். கட்டுமானத் தொழிலில் சிக்கல்கள் தோன்றும். அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை தரும் வாரம். சம்பள உயர்வு இடமாற்றம் போன்றவை மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
மீனம்
வேலைக்காக அலைஞ்சுக்கிட்டு இருந்தவர்களுக்கு நல்ல நியூஸ் கெடைக்கும். செய்கின்ற தொழிலில் ஒரு ஹாப்பியான திருப்பம் உண்டாகும். கலைத்துறையினருக்கு சில போராட்டங்கள் தலைவலியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துக்கிட்டிருந்த கருத்து வேறுபாடு விலகும்.. நெருக்கமான உறவுகள் அல்லது ஃப்ரெண்ட்ஸ்னு நீங்க நெனைச்சவங்க வில்லங்கத்துல இறங்கறதுக்கு சான்ஸ் இருக்கு. அடையாளம் கண்டு விலகி நில்லுங்கள். பழைய பாக்கிகள் சுலபமாக வசூல் ஆகும். பண வரவு தாராளமா இருக்கும். நோ டவுட். பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள உங்க நெருங்கின உறவுக்காரங்களோட போய்த் தங்கி ஹாப்பியா.. ஜாலியா இருப்பீங்க. எந்தப் பிரச்னையையும் எதிர்கொண்டு சிக்ஸர் அடிச்சு சக்ஸஸ் ஆவீங்க. சகோதர சகோதரிங்க முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உங்க கூட இழைவாங்க. என்ஜாயீ எஞ்சாமி.