வார ராசிபலன் 16-06-17 முதல் 22-06-17 வரை – வேதா கோபாலன்

மேஷம்

நண்பேண்டா என்று கையில் உள்ளதையெல்லாம் தூக்கி நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் சாயம் வெளுத்தபிறகு முகம் வெளுக்க வேண்டாம். அங்கங்கு ஒரு கோடு போட்டு அவரவர்களை நிறுத்துங்க. வாசலில் வாழை மரம் கட்டுவீங்க. பேச்சனால் ஏற்பட்ட பிரச்சினைகள் பேச்சினாலேயே தீரும். அலுவலகத்தைப் பொறுத்தவரை புது விசிட்டிங் கார்ட் அடிப்பீங்க. என் உச்சி மண்டையில் சுர்ரென்று கோபம் ஏறுது என்று குதிக்க  வேண்டாம். ஓம்சாந்தி என்று அமைதிப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ஒழுக்கமும் முக்கியம்.

ரிஷபம்

வேலையில் மேலும்மேலும் மேன்மைதான். அரசாங்கம் பெரிய நன்மை அளிக்கப்போகுது. கணவருக்கு/ மனைவிக்கு நல்லது நடக்கப் போகுதுங்க. இப்போதே சோப் போட்டு வெச்சுக்குங்க. வங்கி இருப்பு குறையக் குறைய டென்ஷன் ஏற வேண்டாம். வந்தது போகும் என்பது போல் போனது வரும்! மம்மியுடன் மல்யுத்தம் டாடியுடன் கொஞ்சல் என்று பொழுது போகும். அழகான புதிய வாகனம் வாங்குவீங்க. மனசுக்குப் பிடிச்ச வகையில் திருமணம் நடக்கும். எதுவுமே ஒரு நாள் இருந்த மாதிரி மறுநாள் இருக்காது. பொறுமையா இருங்க. நல்லதே நடக்கும். உங்களால் நண்பர்களுக்கு நடக்கும் நன்மையை மட்டும் கணக்குப் பண்ணிப் பார்க்காதீங்க. அவங்களால் உங்களுக்கு நடக்கும் நன்மையையும் பாருங்க.

மிதுனம்

புது வேலை. நிறைய வருமானம். நிம்மதியா இருங்க. போட்டிகளுக்கு மனு போடுங்க. லட்சம் கோடின்னு கிடைக்கலைன்னாலும் அதில் பாதியோ பாதியில் பாதியோ.   கணவன் மனைவிக்குள் வரும் சின்ன சண்டைகளைப் பெரியதாக்கி வார்த்தைகளை ஷவர் மாதிரித் தூவாதீங்க. அப்புறமாய் ஹி ஹி ன்னு வழிய வேண்டி வரும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அப்பாவுக்கு அலுவலகத்தில் நன்மை கூடும். உங்களுக்கு அதிருஷ்டத்தின் அர்த்தம் புரியும். கட்டுங்க பெட்டியை. வாங்குங்க டிக்கெட்டை. வெளியூர் வெளிநாடு என்று கிளம்ப வேண்டி யிருக்கும். எல்லாம் திடீர்தான். லோன் மனு போட்டால் வங்கியைவிட்டு வெளியே வருவதற்குள் கிடைச்சுடும்.கார் வாங்கும் யோசனை, வீடு வாங்கும்/ கட்டும் திட்டம் எல்லாம் நிறைவேறி வயிற்றில் பாதாம் கீர் வார்க்கும்.

கடகம்

வருமானத்திற்கு மேல் வருமானம் வந்து கொட்டுகிற நேரம் இது. வாசல் கதவை மகா லட்சுமி  வந்து தட்டுகிற நேரம் இது. திறவுங்கள். கொடுக்கப்படும். புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் அலுவலகத்திலும் பெருமை பெறுவீங்க. மம்மிகூட சதா சண்டை வேண்டாம். அருமையைப்   புரிஞ்சுக்குங்க. கணவன் மனைவி சண்டை என்பது கூடவே கூடாது என்று மனசுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கையெ ழுத்திடுங்க. பிப்ரவரிக்குப் பிறகு மற்றொரு தேனிலவு உண்டு. மம்மி டாடியை காக்காய் பிடிச்சு வெச்சுக்குங்க. மம்மிக்கும் உங்களுக்கும் இடையில் இருந்து வந்த சின்ன சின்ன உரசல்கள் தீர்ந்து முழுவதுமாய் சமாதானமாகும்.

சிம்மம்

குடும்பம் பற்றிப் பெரிய முடிவுகள் எடுக்கும்போது நாலையும் யோசித்தபிறகுதான் இறங்க வேண்டும் என்பது பற்றி மிகவும் தீர்மானமாய் இருங்க. ஏற்கனவே செய்த முதலீடுகள் பெரிய அளவு லாபமளிக்கும். வேலை மாறுவதானால் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் நன்மை கள் நடக்க வேண்டுமானால் அக்டோ பர் வரை பொறுத்தாக வேண்டும். சகோதர்களிடம் ஈகோ வேண்டாம். நண்பர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நன்மை உண்டு.புதிய வேலை கிடைக்கும். திடீர்த்தடைகள் ஏற்பட்டு அவை திடீரென்று விலகி ஓட்டம்பிடிக்கும்.

கன்னி

கடந்த சில நாட்களாய் விமானம் முதல் பஸ் வரை எதுவும் பாக்கியில்லாமல் பிரயாளம் செய்துட்டீங்க. மேல்படிப்பு ஆயத்தம் வெற்றி தரும். யாரையும் அதிகமாய் நம்பிப் பொறுப்பை ஒப்படைக்காதீங்க. வேலை மாற வாய்ப்பு உள்ளது. எல்லாம் நன்மைக்குத்தான்னு நம்புங்க. (சும்மா சமாதானமில்லை. உணருவீங்க) மிதுனம் சிக்கனம் செய்யறீங்க. சரி. கருமித்தனம் செய்யாதீங்க. தப்பு. தெருவுக்கு ஒரு வங்கி கடன் கொடுக்க வீட்டு வாசலின் நின்றாலும் வாங்காதீங்க! ப்ளாட்டினமாகவே இருந்தாலும் க்ரெடிட் கார்ட் க்ரெடிட் கார்ட்தானே! நமக்கு இந்த வாய்ப்பு இல்லை என்று தருமி மாதிரிப் புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு வாசல் கதவை அதிருஷ்ட லட்சுமி தட்டுகிற…காசு கொட்டுகிற நேரம் இது. அலுவலக விவகாரங்க ளில் சிறிது நிதானம் இருக்கவே செய்யும். ஃப்ரீயா வுடுங்க. தன்னிச்சையா சரியாகும். பாஸ்போர்ட் விசா விஷயங்களில் வெற்றிதான்.

துலாம்

எதை எடுத்தாலும் தடங்குதேன்னு தலையில் கையை வெச்சுக்கிட்டு உட்கார்ந்துடாதீங்க. சாத்தியமான விஷயங்களை முயற்சி செய்யுங்க. மகிழ்ச்சிதானே? உங்கள் தன்னம்பிக்கை மட்டும் இல்லைன்னா உங்க கதி என்ன ஆகியிருக்கும். எனினும் இவங்களைத்தான்னு இல்லாமல் எல்லோரையும் நம்பறீங்களே அந்த ஒரு குணத்தை மட்டும் டெலிட் பண்ணிக்குங்க. பிற்காலத்தில் அசடு வழியக்கூடாதில்ல! சரியான நேரத்திற்கு சுகாதாரமான உணவைத்தான நீங்க சாப்பிடலாம். மற்றதுக்கெல்லாம் 144. முன்பைவிட இப்போ அதிகமாக ஓடி உழைக்க வேண்டியிருக்கும். எனினும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட நிறைய நிறையப் பணம் வருதே! பேச்சைக் குறைத்து செயல்பாட்டில் வேகம் காட்டுவது நல்லது. மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும். மருத்துவ ரிசல்ட் எல்லாம் வயிற்றில் நிம்மதியை வார்க்கும்.

விருச்சிகம்

பாஸ்போர்ட் விசா விஷயங்களில் வெற்றிதான். கணவரோட/ மனைவியோட விளையாட்டு க்குக்கூடப் பட்டி மன்றம் வேண்டாம். ஒன்றல்ல; இரண்டல்ல; மூன்று வழிகளில் பணம் வரும். அப்பாவுடைய முன்னேற்றங்கள் ரொம்பவும் நிதானமாய் இருப்பதாய்க் கவலை வேண்டாம். இன்னும் ஓரிரு வாரங்களில் முயல் மாதிரித் துள்ளி ஓட ஆரம்பிக்கும். கடன் கிடன் வாங்கி வெக்காதீங்க. அடைக்கறதுக்குள்ள வாய் வழியாய்க் கண் வந்துடும். சின்னச் சின்ன ஆரோக்யக் குறைவை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே ஆக்ஷன் எடுத்தால் இரண்டு வேளை மாத்திரையோடு முடியும். மம்மி சொல் மிக்க மந்திரமில்லைன்னு பணிவாய் இருந்தால் வாழ்க்கை பிழைக்கும்.

தனுசு

மாணவர்களுக்கு: டாடி மம்மி கிட்ட சொல்ல முடியாத சிறு சிறு டென்ஷன்கள் இருந்தன அல்லவா? எல்லாம் ஃபிளைட் பிடிச்சுப் போயாச்சு.

அலுவலகவாசிகளுக்கு: பிரபலமான உங்கள் கோபம் கூடக் கோடை விடுமுறையில் ஊருக்குப் போய்விடும்.கடுமையான உழைப்பு குறைந்து மிதமாகும். குடும்பத்தலைவி/தலைவருக்கு: ஃபைட்  காட்சி மாறி டூயட் காட்சிக்குக் குடும்பம் நகரும்.

துணைவியின்/ துணைவரின் வேலைப் பளு அதிகமாகும். அவருக்கு / அவங்களுக்கு சாப்பிடவும் தூங்கவும் நேரம் இருக்காது. பெண்டிங் வைத்திருந்த கோயில்களுக்குப் போவீங்க.

மாணவர்களுக்கு: பல டென்ஷன்களிலிருந்து வெளியில் வருவீங்க. சோம்பலை வேறு கிரகத்திற்குக் கூரியர் செய்துடுங்க . அலுவலகவாசிகளுக்கு: காலம் காலமாய்க் காத்திருந்த போது நடக்காத நன்மைகள் சூமந்திரக்காளி என்ற சொன்னமாதிரி திடீரென்று நிறைவேறி நிம்மதி அளிக்கும்.

மகரம்

குடும்பத்தலைவி/தலைவருக்கு:நல்ல நல்ல செலவுகள் காத்திருக்கின்றன. ஜா…லி! திட்டமிட்டபடி எல்லாமே நல்ல முறையில் நடக்கும். கற்பனை பயங்கள் வேண்டாம். மாணவர்களே…ஆசிரியர்களின் செல்லம் நீங்கதான். தொட்டதெல்லாம் பிளாட்டினமாகும். சிக்ஸர் அடிச்ச மாதிரி ஒரு அதிருஷ்டம்தான் போங்க.வசீகரிக்கும் தன்மை ஒட்டிக்கும். அலுவலகவாசிகள் வெற்றிக்காக முயற்சியை மாற்றிப் பாருங்க. வேறுவித முயற்சியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும்.நண்பர்களை ஒரேயடியாக நம்பி ஏ டி எம் பின் நம்பரை சொல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம்  : 14.01.2017 முதல் 17.01.2017 வரை

கும்பம்

நீங்கள் குடும்பத்தலைவி/தலைவர் என்றால் வீட்டில் மேளம் கொட்டும்.பொறுமை என்னும் நகை அணிய வேண்டிய சமயம் இது. அணிந்து அழகு பாருங்க. காசு மேல காசு வரும். பள்ளி கல்லூரியில் உங்க புத்திசாலித்தனம், அறிவாற்றல், சமயோசிதம் எல்லாமே பெருமையும் புகழும் தேடித்தரும். நண்பர்கள்  மத்தியில் நீங்கதான் கதா நாயகர்/ நாயகி! புது வேலை மாற வேண்டாம். வீடும் அப்புறம்தான் அமையும். கொஞ்சமே கொஞ்சம் பொறுங்க. போதும்… உங்களுடைய கடவுள் நம்பிக்கை உங்களைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றப்போகுது. பயமே அர்த்தமற்றதுன்னு புரியத்தான் போகுது.

சந்திராஷ்டமம்  : 17.01.2017 முதல் 19.01.2017 வரை

மீனம்

அட்ரா சக்கை. அட்ரா சக்கை. இத்தனை அதிருஷ்டத்தை பண்டில் பண்டிலாய் நீங்க வாழ்க்கையில் ஒரு சேரப் பார்த்திருப்பீங்களா? சந்தோஷம் கலந்த பரபரப்பு. என்ஜாய். அட செலவானால்தான் என்ன? சந்தோஷத்துக்குக் கொடுக்கற விலை அல்லவா? உங்க வரவோட செலவை ஒப்பிட்டுப் பார்த்தால் சந்தோஷமாய்த்தானே இருக்கு? பிறகென்ன? சும்மா சமாதானத்துக்கு சொல்லலைங்க. இந்த வாரம் பல வகையில் போன வாரத்தை விடவும் சூப்பரா இருக்கப்போகுது பாருங்களேன். திருமணம் குழந்தைப் பேறு உத்யோகம் மன நிம்மதி என்று யார் யார் எதெதற்குக் காத்திருக்கீங்களோ அவங்கவங்களுக்கு அந்தந்த நன்மை கட்டாயமாய்க்கிடைக்கும். ஆளுபவர்களால் நிறைய நன்மைகள் உண்டு.

சந்திராஷ்டமம்  : 19.01.2017 முதல் 22.01.2017 வரை


English Summary
weekly Rasi palan   16.06.2017 to 22.06.2017