மேஷம்
மிகவும் மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் வாரமா அமையும். வெளிவட்டாரத்துல செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக சக்ஸஸ் ஆகும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது ஆபீஸ் காரணங்களுக்காகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவாங்க. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஐ மீன் பிசினஸ் என்றாலும் சரி புரொஃபஷன் என்றாலும் சரி எதிர்பார்த்ததைவிடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயங்கள்ளாம் அனுகூலமாக முடியும். சின்ன உற்சாகங்கள் உண்டு.
ரிஷபம்
திருமண முயற்சிகள் ஒரு வழியா நிறைய முயற்சிகளின்பேரில் சாதகமா முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீங்க. ஆனா அதுக்குள் பொறுமையில்லாம எவ்ளோ டென்ஷனாயிட்டீங்க.. அதெல்லாம் தேவையில்லாத டென்ஷன்ஸ்தானே? இனியாச்சும் நல்லதே நடக்கும்னு நம்பிக்கயோட பொறுமையா இருங்கப்பா. உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொண்டு மனசை லைட்டாக்கிக்குவீங்க. சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் சான்ஸ் உண்டாகும். இதுவரைக்கும் இருந்துக்கிட்டிருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைல நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை வாரமா இந்த வாரம் அமையும். பழை…..ய ஃப்ரெண்ட்ஸ் யாரையாச்சும் பார்ப்பீங்க. அந்தக் கால சமாசாரங்களைப் பேசி ஹாப்பியா ஆவீங்க.
மிதுனம்
ஆபீஸ்லஉற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த வாக்குவாதத்துலயும் விவாத்துலயும்.. ஆர்க்யூமென்ட்லயும் கலந்துக்கவே கலந்துக்காதீங்க. ரிலேடிவ்ஸ் பேசும்போது சின்னதா ஒரு ஸ்மைலோட சும்மா பார்த்துக்கிட்டே இருங்க. நீங்க பிசினஸ் செய்யறவங்களா? புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வாரத்தோட பிற்பகுதில சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை. அதே சமயம் நல்ல தன்னம்பிக்கையோட செயல்படுவீங்க. அட என்னாயிடும் பார்த்துக்கலாம் என்ற மன நிலை இருக்கும். எனவே சக்ஸஸ்தான். சினிமா டிராமா போவீங்க.
கடகம்
ஒரு விஷயம் நான் சொல்லியே ஆகணும். எல்லாம் நல்லா இருந்தாலும் மனசுக்குள் தேவையே இல்லாத ஒரு சோகமும்.. சொல்லத் தெரியாத கோபமும்… அவசியமே இல்லாத ஒரு பயமும் ஒட்டிக்கிட்டிருக்கும். அதை யெல்லாம் தூக்க் கடாசுங்க. எதுக்காக இப்டி எதையோ பரிகுடுத்த மாதிரி உம்முன்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிட்ருக்கீங்க. உண்மையைச் சொல்லப்போனா.. இது உங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி தரும் வாரம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீங்க. பெரிய ஆபீஸர்கள் அல்லது பெரிய மனுஷங்க வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் சான்ஸ் உண்டாகும். ஆபீசுக்குச் செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான வாரம் இது. நியாயமான முறைல பிரமோஷன் அல்லது சம்பய உயர்வு கெடைக்கப் போகுது பாருங்களேன். ஆரோக்யத்தை இப்பல்லாம் அலட்சியம் செய்யாம கவனமா இருக்கீங்க. குட்.
சிம்மம்
பணவரவு கணிசமா உயரும். புது மாடர்ன் டிரஸ் மற்றும் ஆபரணங்கள் சேரும். மனசுல தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புரிதல் அதிகமாகும். பிகாஸ் மனசுவிட்டுப் பேச ஆரம்பிச்சிருப்பீங்க. குடும்பத்துல மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. ஃபேமிலியோட போய் விருந்து விசேஷங்கள்ல என்ஜாய் செய்துட்டு வருவீர்கள். உறவினர்களால் சின்ன சின்ன உதவி மட்டுமில்லீங்க.. அவங்களோட சப்போர்ட்டும்கூடக கிடைக்கும். ஆபீஸ்லஇது வரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும்கூடக் கெடைக்கும்.
கன்னி
ரிலேடிவ்ஸ் வகைல கொஞ்சமாச்சும் பக்குவமா நடந்துக்கறது நல்லது. வெளிவட்டாரத்துல மதிப்பு மரியாதை கூடும்.ஹஸ்பெண்ட் அல்லது மனைவி வழி ரிலேடிவ்ஸ் உங்கள் ஆலோசனைகளை ஏத்துக்கறது மட்டுமில்லீங்க.. அதன்படி செயல்பட்டு சக்ஸஸ் ஆகி உங்களைப் பாராட்டவும் செய்வாங்க. அவங்க மத்தில உங்க கௌரவம் ஒரு சென்டிமீட்டராச்சும் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். காரணம் உங்களோட சிறந்த கடின உழைப்புங்க. நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். அதுக்கும் இதே டிட்டோ காரணம்தான். ஃபாரின்.. அல்லது வேறு மாநிலம்… வெளியூர் போக சான்ஸ் வரும். அனேகமா அது உங்களோட ஆபீஸ்லேயிருந்தோ அல்லது நீங்க செய்யும் தொழில் சார்ந்தோ இருக்கறதுக்கு சான்ஸஸ் அதிகம். உடல் சோர்ந்தலும் மனசுல உற்சாகம் கூடும்.
துலாம்
பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் வாரமா இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அப்படிக் கூடும்படியா நீங்க ஏதோ நல்ல விஷயம் செய்வீங்க. யாருக்கா உதவி செய்வீங்க. இதைத் தவிரவும் உங்களுக்குக் கணவரின் பாராட்டுகளும் கெடைக்கும். ஆபீஸ் விஷயங்களில் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவங்க வாழ்க்கைல வெற்றி பெறுவாங்க என்ற நம்பிக்கை அளிக்கும் செய்கைகளைச் செய்வாங்க.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 13 முதல் டிசம்பர் 15 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
குடும்பத்துல அமைதியும் நிம்மதியும் ஏற்பட நீங்க பெஸ்ட்டாட செயல்படறீங்க. கங்கிராட்ஸ். அது நல்ல பலன் தரும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீஸ்க்கு ஓரளவு நிம்மதி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். பட்.. போன விஷயம் சக்ஸஸ் ஆகும். பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துக்குங்க. அதுக்கான நல்ல பலன் சீக்கரத்துல தெரிய வரும். அதிகாரிங்க அவ்வப்போது கண்டிப்பு காட்டுவாங்க. பணிஞ்சு நல்ல பெயர் எடுப்பீங்க. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். வாரத்தோட முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அதுக்கெல்லாம் அசர மாட்டீங்க நீங்க. இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சுப வார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீங்க சிலருக்கு நண்பர்கள் பகைவர் ஆகலாம். எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிங்க உதவி கிடைப்பதால் ஜெயிப்பீங்க. நண்பர்களிடையே போட்டி பொறாமைகள் அதிகமாகும்.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வருமானம் அதிகம் வந்தாலும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. தொழிலில் கூட்டாளியின் புதிய ஆலோசனைகள் வரவேற்கத்தக்கதாக இருக்கும். அவரது கடமை உணர்வும், திறமையும் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தாலும், அவரை முழுமையாக நம்பி விடாதீங்க. சந்தையின் தேவைக்கு ஏற்ப புதிய முதலீடுகளை செய்ய முற்படுவாங்க. சிலருக்குக் குதூகலமாய் இருந்த குடும்ப ஒற்றுமை குறைவதால் மகிழ்ச்சி குறையும். எனவே, அனுசரித்துச் செல்வது நல்லது. தூக்கமின்மையால் சுறுசுறுப்பற்ற தன்மை நிலவும். உடல் நிலையை அலட்சியப்படுத்தாதீங்க. கணவரின் / மனைவியின் அரவணைப்பு மூலம் மனக் கவலைகள் மறந்து பறந்துவிடும். எதுவுமே நிதானமாத்தான் நடக்கும்.
கும்பம்
குடும்ப நண்பர்கள் அனுசரணையாக இருந்து உதவிக்கரம் நீட்டுவாங்க. எந்த விஷயத்துலயும் நிதானப்போக்கு இருக்கும். பழைய நட்புகளைப் புதுப்பிச்சுக்குவீங்க. குழந்தைங்க விஷயத்துல இருந்த வருத்தங்கள் மறைஞ்சு அவங்க கூட இணக்கமா இருக்க ஆரம்பிப்பீங்க. குழந்தைங்க லைஃப்ல நல்ல விஷயங்கள் மற்றும் சக்ஸஸ் சாத்தியமாகும். நீங்க ஒரு காலத்துல ரொம்ப மதிச்ச நபர்களை அகஸ்மாத்தா சந்திக்க நேரும். பழைய பள்ளி கல்லூரித் தோழர்களையும் மீட் பண்ணி ஹாப்பியா பேசுவீங்க. மனைவி சைட் விருந்தினர் வருகை வீட்டில் கொண்டாட்டத்தையும், கும்மாளத்தையும் ஏற்படுத்தி மனதை குஷியாக வைக்கும். ஒங்களோட எண்ணங்கள் யாவும் ஈடேறும். புதிய சொத்துக்கள் சேரும். சுக சௌகரியங்கள் மேம்படும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கும் கோயில் குளங்களுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீங்க
மீனம்
இந்த வாரம். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீங்க. தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். ஆபிஸ் விஷயமோ.. பர்சனல் காரணமோ… தொலைதூரப் பயணங்களின் நன்மை ஏற்பட்டு, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். ஒங்களோட மனசுல எழும் புதுப்புது யோசனைகள் காரணமாகவும், திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, ஒங்களோட எதிர்பார்ப்பை விட தொழிலில் அதிக இலாபங்களை அள்ளித் தரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கெடைக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். கற்பனை சார்ந்த துறையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கற்பனை பயங்களைத் தூக்கிப்போட்டு நிம்மதியா இருங்க.