வார ராசிபலன்: 13.03.2020  முதல் 19.03.2020  வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

உங்கள் திறமைங்களையெல்லாம் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படுமுங்க. ரிலேடிவ்ஸ் உங்களின் பெருந்தன் மையைப் புரிந்துகொள்வாங்க. புதிய ஃப்ரெண்ட்ஸின் நட்பால் உற்சாகம் அடைவீங்க. நட்பு வட்டம் மா…. வட்டமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையாம பார்த்துக்குங்கப்பா. உடல் உஷ்ணத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். உடனே டென்ஷன் ஆயிடாதீங்க. தற்காலிகப் பிரச்சினைதான். மனசில் தைரியம் அதிகரிக்கும். சுயமாக சில முக்கிய விஷயங்கள் டிஸைட் செய்வீங்க. பெரிய பொறுப்புகளில் இருக்கும் பழைய நண்பர்களால் சில ஹெல்ப்ஸ் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 14 முதல்  மார்ச் 16 வரை.

ரிஷபம்

இளைய  பிரதர்ஸ் வகையில் நன்மைகள் ஏற்படும். கோர்ட் கேஸ்கள் சாதகமாகும். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் ஜாப் கிடைக்கும். கடன்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பிறக்கும். ஆனால், தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். நீண்ட கால பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ் உண்டாகும். வீண் அலைச்சல்கள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும்.  பயணங்களை ரத்து செய்யவும்  நேரலாம். மின்சார, மின்னணு சாதனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.   வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சிறு அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்துப் போடும் முன்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்பது அவசியம்

சந்திராஷ்டமம் : மார்ச் 16 முதல்  மார்ச் 18 வரை.                                         

மிதுனம்

மற்றவர்களை கவரும் ஆற்றல் கொண்டவராவீங்க. போட வேண்டிய ஆண்டு சகோதரர்களால் நன்மை, உறவினர்களால் நன்மை ஏற்படும். சில நேரங்களில் பிரச்சினைகளும் ஏற்படலாம். அடிக்கடி பயணம் ஏற்படும். ஆனால் ஹாப்பி ஜர்னிதான். வாரக்கடைசியில் நன்மையே ஏற்படும். சொத்து வீடு, கார் அல்லது டூ வீலர்ஸ் வாங்கப் போறீங்க. வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். பள்ளி மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் அதிக கேர்ஃபுல்லா இருக்க வேணும். அரசு வேலை வாய்ப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனமாக படிக்க வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வீங்க.  பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். மனசில் நல்ல எண்ணங்களும் தர்ம சிந்தனையும் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 18 முதல்  மார்ச் 21 வரை.

கடகம்

ஆரோக்கியத்தில் அதிக கேர் எடுக்க வேண்டும். உணவு விசயத்தில் வாயை கட்டவும். புதிய பிசினஸ் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்க குடும்ப ஜோதிடரை கன்சல்ட் செய்துட்டு செய்யுங்க. வார இறுதியில் எண்ணங்கள் எளிதில் கைகூடும். மகிழ்ச்சி எற்படும். எந்த விதப் பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள். அரும்பாடுபட்டு எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும்தான். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகளும்கூட இருக்கும். இருந்துவிட்டுப் போகட்டுமே- மனசளவில் பாதிக்காதே. லைட்டா விட்ருவீங்க.  வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. ஆமாம். சொல்லிட்டேன்.

சிம்மம்

புதிய கூட்டோ அல்லது முதலீடோ வாரக்கடைசியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பாசத்திற்கும் அன்புக்கும் அடிபணிய வேண்டியிருக்கும். செய்ங்க . அதைவிட என்னங்க முக்கியம்? சில பயணங்கள் ரத்தாவதால் சின்ன ஏமாற்றம் இருக்கும். ஆனால் அது நன்மைக்குத்தாங்க. தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். இத்தனை காலமாக மனசில் சஞ்சலம் இருந்திருக்கும். இனி சிறப்பாகக் காரியங்கள் நடக்கும். உடல்நலக்கோளாறுகள் நீங்கி மெடிகல் செலவுகள் குறையும். வாரம் முழுக்கவுமே ஏதாவது ஒரு காரணத்துக்காகக் குதூகலம்தான். என்ஜாய். குழந்தைங்களால் இருந்து வந்த டென்ஷன்ஸை அவங்ககே தீர்த்து வைப்பாங்க.

கன்னி

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி வட்டார நட்பு சிறப்பாக அமையும். பாஸ்போர்ட், விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். கை நிறைய பணமும் வரும் என்பதால் குடும்பத்தில் குதூகலமாக அமையும். டாடியின் டாடி வழி சொத்துக்கள் கிடைக்கும். ஆரோக்யத்தைப் பொருத்த வரையில்.. சற்று கவனமாக இருக்கவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். வெளியூர்ப்பயணத்தில் சந்தோஷத்தையும், குதூகலத்தையும், உற்சாகத்தையும் பெட்டி பெட்டியாய்ப் பேக் செய்துக்கிட்டு வருவீங்க.

துலாம்

வண்டி,பராமரிப்பு செலவு ஏற்படும். அதுக்கெல்லாம் டென்ஷன் ஆவாதீங்க. வண்டியின் ஆரோக்யம் நல்லா இருந்தால்தானேங்க நாமளும் நல்லா இருக்க முடியும்? செலவு செய்ய வேண்டிய விஷயங்களுக்குச் செய்ங்க. தப்பில்லை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொதுவாகவே எது பற்றியும் கவலையே படாமல் உற்சாகமாக .. சந்தோஷமாக வளைய வருவீங்க. உங்க அட்ராக்ஷன் அதிகமாகுங்க. வெளிநாட்டு பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்

அரசாங்கக் காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காம பார்த்துக்குங்க என்பதற்காக இதைச் சொன்னேன். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து செல்லும். அதற்கேற்ற முறையான பாதுகாப்புகள் எடுத்துக்கிட்டா பாதிப்பு பெரிசாய் இருக்காது. சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்களின் நட்புப் பட்டியலில் இடம் பிடிப்பீங்க. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீட்டுக்காக விலை உயர்ந்த  சாதனங்கள் வாங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இளைய பிரதர்ஸ்.. சிஸ்டர்ஸ்… வகையில் உதவிகள் உண்டு.

தனுசு

முடிவுகள் எடுப்பதில் ஸ்மால் ஸ்மால் குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதப் போக்கை பக்குவமாகப் பேசி மாற்றப் பாருங்கள். எடுத்த எடுப்பில் எகிற வேண்டாம். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பூர்விகச் சொத்துகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணுங்க.  வி.ஐ.பி. களுக்கு நெருக்கமாவீங்க. ஏமாற்றுக்காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சிறுசிறு விபத்துகள் வந்து போகும். கவலைப்பட எதுவும் இல்லை.

மகரம்

மற்றவர்களுடன் பழகும்போது பக்குவமாகப் பழகுவது நல்லது. கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. அயல்நாட்டில் உள்ள நெருக்கமான உறவினர்களால் நன்மையும் ஆதாயமும் உண்டு. லட்சியத்தை நோக்கி முன்னேறுவீங்க. தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு டாட்டா சொல்லிவிடும். தன்னம்பிக்கை துளிர்க்கும். புறநகர்ப் பகுதியில் வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பழைய கடன்களை வட்டியுடன் தந்து முடிப்பீங்க. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும்.

கும்பம்

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும் அதற்கேற்ற இன்கம் கிடைக்குமுங்க. திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் உண்டாகும். சாலைகளைக் கடக்கும்போதும் மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும் கவனமாக இருங்க. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் புதிய பதவிகள் பொறுப்புகள் தேடிவரும். இல்லதரசிகளுக்குப் புதிதாக வேலை கிடைக்கும். அல்லது, வீட்டிலிருந்தபடியே அவர்கள் சிறுதொழில் செய்து முன்னேறும் வாய்ப்புக் கிடைக்கும்.  மாணவர்கள் கல்வியில் மிகப் பெரிய சாதனைகள் படைப்பீர்கள். அலுவலக விஷயமாய் வெளிநாடு செல்வத பற்றிச் சின்னச் சின்ன தடைகளிருந்தாலும், அவற்றை எளிதாகத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

யாரைப் பற்றியும் யார் கிட்டேயும் பேசாதீங்க. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லதுங்க. அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிலும் அலுவலகத்திலம்  விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்கறீங்க.  ஆகவே இந்த வாரம் மிகச்சிறப்பாகவே அமையும். வாக்கினால் நன்மை உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஒரு வழிகாட்டி.. குரு .. கிடைப்பாருங்க.  உறவினர் நண்பர்களுடன் என்னதான் ஃபைட் செய்தாலும் எப்படியோ சமாதானமாகி அசடு வழிவீங்க. அல்லது அவங்க வழிவாங்க. அனேகமா அவங்கதான் மன்னிப்புக் கேட்பாங்க. வாகனம் வாங்க டைம் வந்தாச்சுங்க. பழைய வாகனத்தை ரிப்பேர் செய்து பொலிவா வைச்சுப்பீங்க.

 சந்திராஷ்டமம் : மார்ச் 12 முதல்  மார்ச் 14 வரை.

More articles

Latest article